Blog Archive

Thursday, April 16, 2020

சில நினைவுகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ  என் பிரார்த்தனைகள் 

சில நினைவுகள் 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும்   இந்தத் தொற்று,விரைவில் நம்மை விட்டு நீங்க 
அனைத்துக் கடவுளர்களையும்  நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்.

சின்னச் சின்ன கைகள்  தலையைப் பிடித்து விடும் போது ஆசீர்வதிக்கப் பட்டவளாக உணர்கிறேன்.
போறுமா பாட்டி  என்று கேட்கிறான் பேரன்.
கூடவே  கம்ப்யுயூட்டர்  முன்னால உட்காராதே. என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுகிறான்.
அவனுடைய  zoom  வகுப்பு முடிந்ததும் 
தோழர்கள் இணையத்துக்கு வந்து விளையாட வந்துவிடுவார்கள்.
அடுத்த அறையில் பெரிய பேரன் ஒரு கையில் செல் போன்,
அடுத்து கணினியில்   code ரைட்டிங் 
என்று பிசி.
சாப்பிட இருவரும் வரும்போது  நான் கேட்பேன்.
என்னடா பசங்களா பாட்டிக்கு மட்டும் புத்திமதி யா. என்றால் நமட்டுச்  சிரிப்புடன்   ஓடி விடுவார்கள் .உலகமே  இணையத்தின் பக்கம் தான். 
மாப்பிள்ளை   அலுவலக வேலை. மக்களுக்கு அலுவலக வேலை.
நான் என் புத்தகங்களுடன்.

சீக்கிரமே உடல் வலி, தலைவலி போகட்டும்.
மற்றவர்களுக்குத் தொந்தரவு தரக்  கூடாது.
புத்தம் புதுக் காலையில் மீண்டும் பார்க்கலாம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊

16 comments:

நெல்லைத் தமிழன் said...

சிறிய தலைவலி, பேரன்களின் அன்பைக் காட்டிக்கொடுத்து நெகிழ்த்துகிறதே...

ஆரோக்கியமாக இருக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஆமாம்..அப்போ அப்போ சமையல் அறையில் உங்கள் கைவண்ணம் உண்டா?

KILLERGEE Devakottai said...

வாங்க அம்மா
எல்லாம் நலமாகும் இறையருளால்...

சிகரம் பாரதி said...

விரைவில் நிலைமை சீராகும் என நம்புவோமாக!

சிகரம் பாரதி said...

தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்

முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நன்றி!

-வலை ஓலை

கரந்தை ஜெயக்குமார் said...

உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்
பாதுகாப்பாக இருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் தலைகீழ் மாற்றங்கள்...

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் நலமே விளையட்டும்.

இங்கேயும் இப்படியே பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறது - அலுவலக வேலைகளும் சேர்ந்து நடக்கிறது.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அனைவரும் வீட்டில் இருப்பதும் ஒரு மாபெரும் மகிழ்ச்சிதானே வல்லிம்மா... இனி கொரோனாக்காலம் முடிஞ்சதும் ஆரையும் கண்ணில் காண முடியாமல் இருக்குமென நினைக்கிறேன்ன் அவ்ளோ வேலைகளும் படிப்பும் வரும்:))..

அதனால சின்னச் சின்ன விசயங்களையும் எஞோய் பண்ணுங்கோ.. மகிழ்ச்சியாக இருங்கோ..

மெல்லிய வெதுவெதுப்பான தண்ணி அடிக்கடி குடியுங்கோ வல்லிம்மா.. அது உடம்பில் வரும் பெரும்பாலான வியாதிகள்.. தலையிடி, கண்குத்து, மூட்டுவலி, நெஞ்செரில் இப்படியானவற்றைப் போக்கி விடும்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
குழந்தைகள் அன்பு எனக்குப் பெரிய அங்கீகாரம்.

இந்த உடல் வலி ,தலைவலி எல்லாம் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதாலும் சிஎன் என்
செய்திகள் கேட்பதாலும் வரும் பின் விளைவுகள்',.
இங்கே வீடுகள் மரத்தால் ஆனவை.
சத்தம் வெகு சுலபமாகக் கடத்தப்படும்.
ஃபோன்ஸ் பிடிப்பதில்லை. Story of my life:))

குழம்புகள், மதிய சிற்றுண்டி எல்லாம் என் பொறுப்புதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
வயதானால் வரும் பிரச்சினைகள்.
சமாளிக்கக் கற்றுவிட்டால் போதும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி சிகரம் பாரதி. உங்கள் சேவை சிறக்கட்டும். வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
இது ஒரு பகிர்தல் நிமித்தமே.
நான் குணமடைந்து வருகிறேன்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே. அன்பு தனபாலன்,
மக்கள் பிழைக்க வேண்டும். பிழைக்க வேலையும்,பாதுகாப்பும் வேண்டும். இங்கே தலை என்று இருப்பவர் சரி இல்லை.
உடலை விடப் பொருள் முக்கியம் என்று கருதுகிறார்.
எத்தனை ஆபத்து என்று யோசிக்கவில்லை.
தனபாலன், நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள்.
உங்கள் குடும்பத்துக்கும் அனைவருக்கும்
ஆரோக்கியத்துக்கான வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வேலைகள் இருப்பதும், மன சோர்வைப் போக்கும்.
நலமாக இருக்க வேண்டும்.
நம் ஊரில் Safe distancng எவ்வளவு முடியும் என்று தெரியவில்லை.
இறைவன் அருள் தடை இல்லாமல் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
எல்லாமே பிரம்மாண்டமாகத் தோன்றும் சூழல்.
மகள் ,மாப்பிள்ளையின் தொடர் உழைப்பு
எல்லாம் கொஞ்சம் அயர்ச்சிதான்.
இதோ பக்கத்திலேயே சுடு தண்ணீர்.

மிக நன்றி மா. எல்லாம் கடப்போம்.

கோமதி அரசு said...

மகள், மருமகன் தொடர் உழைப்பு பார்த்து மனம் அசதியில் தலைவலி வந்து விடும். அப்புறம் குளிர் வேறு .
அமெரிக்காவில் இருக்கும் போது குளிரில் தினம் தலைவலிதான்.
அதிராசொல்வது போல் இடை இடையே சூடான தண்ணீர் குடிங்க.
கண்களை மூடி மூடி திறங்க.
எனக்கு காலை பேரன் விளையாட வருகிறான், மகன், மகள் பேசுவதாலும், உறவினர், நண்பர்கள் பேசுவதாலும் மதியம் ஆகி விடுகிறது, இணையம் வர. வீட்டுவேலைகள், உடல் அசதி வேறு.

உங்கள் பதிவுகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக படிக்கிறேன்.