Blog Archive

Monday, April 06, 2020

"என்னை அழவைத்த ஒரு விஷயம்!"- Barathi Baskar Sharings! #21dayslockdown

வல்லிசிம்ஹன்

16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அழவைத்த விசயமா
இதோ காணொலியைக் காணச் செல்கிறேன் சகோதரியாரே

Yarlpavanan said...

நல்ல கருத்துகளைக் கேட்டோம்
சிறப்பு

http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆ வல்லிம்மா நலம்தானே, வீடியோப் பார்த்தேன், பொன்னியின் செல்வன் படிச்சிட்டாவாம் பா. பா அவர்கள்... நான் இன்னும் படிக்கல்லியே:)...
ஆனா வல்லிம்மா உண்மையைச் சொன்னால், எனக்கு இப்படி ஹொலிடேயில் இருப்பது ஹப்பியோ ஹப்பியாக இருக்கு:)..
டென்சன் இல்லை:)...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார, எல்லாம் ஒரு பார்வைதான். அவர்கள் தலைப்பு வைப்பதில் மன்னர்கள்
:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி யாழ்பாவாணன். பல பேர் பல பார்வை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா, பொன்னியின்செல்வன் ஆடியோ வெகு நன்றாக இருக்கிறது. கவிதா என்பவர் சொல்கிறார்.
POoniyin selvan Katharine podcast என்று தேடுங்கள். நல்ல தமிழ். இனிமையாகச் சொல்கிறார். தெரிந்த கதை கேட்க நன்றாக இருக்கிறது. பா.பா எல்லாம். வெளியே செயல்படுபவர்கள். நான் மிக சந்தோஷ மிக இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அது கதை பாட்காஸ்ட்:)

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ தேடிப் பார்க்கிறேன் வல்லிம்மா..

ஸ்ரீராம். said...

நம் பாம்பே கண்ணன் கூட பொன்னியின் செல்வன் கதையை ஆடியோ டிவிடியாக வெளியிட்டிருக்கிறார். அதில் நம் அநன்யா மகாதேவன் கூட ஒரு பாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். இரண்டு மூன்று வருடங்கள் இருக்குமா.
தேடிப் பார்த்துக் கேட்கிறேன்.

துரை செல்வராஜூ said...

இங்கே கெடுபிடிகள் அதிகமாக ஆகிக் கொண்டு இருக்கின்றன..

மூன்று வட்டாரங்கள் முற்றாக மூடப்பட்டு
விட்டன...

இவற்றுள் இரண்டு பகுதிகள் இந்தியத்
தொழிலாளர்களும் இந்தியக்
குடும்பங்களும் நிறைந்தவை...

இச்சூழலில்
அனைவரும் நலமாக இருக்க
வேண்டுகிறேன்...

முற்றும் அறிந்த அதிரா said...

//ஸ்ரீராம். said...
நம் பாம்பே கண்ணன் கூட பொன்னியின் செல்வன் கதையை ஆடியோ டிவிடியாக வெளியிட்டிருக்கிறார்.//

என்னிடம் மொத்தத் தொகுப்பும் அப்படியே புத்தம் புதுப் புத்தகங்களாக இருக்குது ஸ்ரீராம், எனக்கு எப்படியாவது அதைப் படிச்சு முடிக்கோணும் எனும் ஆசைதான் அதிகமாக இருக்குது, கேட்பதை விட:)).. பார்ப்போம் சாக முன் படிச்சு முடிப்பேனோ எண்டு ஹா ஹா ஹா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
அனைவரும் நன்றாக இருப்போம். நம்மை அன்னை காப்பாள். சரியாக சாப்பிடுங்கள். உங்களுக்கு சங்கடம் இல்லாத சூழ்னிலை
நிலவ என் பிரார்த்தனைகள்.

கட்டுப்பாடுகள் அதிகம் என்றால் கடினம் தான்.
இங்கேயும் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால்
வெளியே போவதே தடுக்கப் படுகிறது.

அதுவும் நன்மைக்கே. நீங்கள் மற்றவர்களிடமிருந்து விலகியே
இருங்கள். இறைவன் துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
நல் வாழ்வு வாழ ஆசிகள்.
இப்போதே ஆரம்பியுங்கள். வேலைகள் நிறைய இருக்கும்.
உண்மைதான். உங்களுக்கென ஒரு 30 நிமிடங்கள் ஒதுக்கி
படிக்க ஆரம்பியுங்கள். அன்னை பொன்னி சுகமாக
அழைத்துச் செல்வாள்.

கோமதி அரசு said...

வீட்டில் இருக்கும் பொழுதை பாஸிட்வாக எடுத்து கொள்வதை தானே சொல்கிறார்.
குழந்தைகளுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
கேட்டேன்.
ஆப்பிள் மேக்ஸ் என்ற ஆடியோவில் சபரி என்பவர் மிக அழகாய் கதை சொல்கிறார்.

என்னதான் கதைகளை கேட்டாலும் புத்தகம் படிப்பது போல் ஒரு மகிழ்ச்சி வருவது இல்லை இல்லையா அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இப்போது கொஞ்சம் வேலைகள் கூடியிருக்கே தவிர எப்போதும் வீட்டில் நாமே வேலை செய்வதால், வேலைக்குப் போகாததால் இது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் என்ன பானுக்கா வீட்டுக்கு, நெல்லை வீட்டுக்கு, சென்னைக்கு, இங்கு சிட்டிக்கு, பொருட்கள் வாங்க கடியக்கு, சந்தைக்கு எல்லம போக முடியாமல் இருக்கிறது. இதுவும் விரைவில் சரியாகும் என்று நம்புவோம். இது ரொம்ப முக்கியமில்லையா நம் உடல் நலம் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உடல் நலம் நாட்டின் நலம் மிக மிக முக்கியம் இல்லையா

நல்ல கருத்துகள் தான் சொல்லியிருக்காங்க...

கீதா