வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
வீடு என்பது ...
நினைவுகளால் ஆன சாம்ராஜ்யம்.
இப்போது இருக்கும் நம் உடல்
சென்று இருந்த பலவீடுகள்
நம் நினைவில் பதித்த சுவடுகள் ஏராளம்.
சிறிய வீடோ பெரிய வீடோ
உள்ளே இருப்பவர்களின் மன விசாலத்தைப் பொறுத்து ஆனந்தமோ ,சஞ்சலமோ உலாவும்.
முதிர்ந்தவர்களையும், குழந்தைகளையும் போற்றிய
இடம் என்றும் மகிழ்வுறும்.
நினைவுகள் சேர்த்த ஒரு இல்லத்தை இன்றும் நினைத்து வாழ்த்துகிறேன்.
ஒரு இனிய குணவானை எனக்கு அறிமுகம் செய்த அவரது பெற்றோர்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்த இல்லம்.
மார்ச் 5 அவரது பிறந்த நாள்.
எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவே பிடிக்கும் அவருக்கு.
பணம் வரவு,செலவு பற்றிக் கவலையே கிடையாது.
சேமிப்பில் நல்ல நம்பிக்கை.
கொஞ்சம் முரனாகத் தோன்றுகிறதோ :)
தன் செடிகள் , சிற்பங்கள் ,அதற்கான கருவிகள் எல்லாம் வாங்குவதில் தயக்கமே இருக்காது.
ஆனால் உடை விஷயத்தில் புதிதாக வாங்க மாட்டார்,.
இருப்பது போதும் என்று இருந்து விடுவார்.
தினம் ஆஞ்சநேயரைப் பார்க்காமல் இருக்க முடியாது.
தினம் உண்டியலில் ஐந்து ரூபாய் உண்டியலில் சேர்த்து , கிட்டத்தட்ட 5000 வைத்திருந்தது பிறகே தெரிந்தது.
கேலி,கிண்டல் உடன் பிறந்தது.
வாயிலில் தோட்டத்தில் நிக்கருடன் வேலை செய்து கொண்டிருப்பவரை யாராவது அணுகினால்
அம்மா உள்ள இருக்காங்கப்பா.
கேட்டுக்க என்று கைகாட்டிவிடுவார்.
அது ஏதாவது தான தர்மமமாக இருக்கும்.
நான் உள்ளே வேறு வேலையாக இருந்தால் சட்டென அலுப்பு தோன்றும்.
அவர்கள் முறையிட நான் மறுக்க பிறகு உதவிக்கு வருவார்,.
இதை முதலிலேயே செய்திருக்கலாமே என்று கோபித்தால்,
உனக்கும் பொழுது போக்கவேண்டாமா அம்மா.
அதுதான் முதலாளி அம்மாவைக் கை காண்பித்தேன் என்று சிரிப்பார்.
எப்பொழுது பார்த்தாலும் கணினி முன் உட்கார்ந்திருப்பது அவருக்குப் பிடிக்காது.
என்னை வெறுப்பேற்ற,
''ரேவ் ,
இந்த WWW. போட்டு அந்தோரியம் பூ பற்றிப் பார்த்து
சொல்லேன். பெங்களூர் போய் வாங்கி வரலாம் என்பார்.
அப்போதான் என் கதையில் லுலுலாங்காட்டி யா ஏதாவது எழுதிக்
கொ ண்டிருப்பேன்.
''கொஞ்ச நேரம் விட்டுருப்பா. அப்புறம் பார்க்கிறேன்'' என்றாலும் ,கோபம் வராது.
நான் சின்னவனுக்கு போன் பேசிக் கேட்டுக்கறேன்னு
போய் விடுவார்.
அந்த வேளையில் உதவி இருக்கலாம்.
பார்க்கலாம் அடுத்த ஜென்மத்தில் ஈடு கட்டிவிடலாம்.
எங்கிருந்தாலும் அவர் நலமாகத் தான் இருப்பார்.
நல்லவர்களுக்கு என்றும் நலமே.

24 comments:
இனிமையான நினைவுகள் அம்மா. நல்ல மனிதர் பற்றி எங்களுக்கும் அறிய வாய்ப்பு. இனிய இல்லத்தின் நினைவு மனதில் நிறையும்போது மனமே அந்த இனிய இல்லமாகி விடுகிறது.
நினைவுகளால் கடந்தாக வேண்டும் வேறு வழியில்லை அம்மா.
நினைவுகள்...
வீடென்று... இன்றைக்கு ஸ்ரீராம் பதிவிலும் வீடு பற்றியே.
உங்கள் இனிய நினைவுகளை எமக்கும் காண கொடுத்துள்ளீர்கள்.
அழகான நினைவுகள் வல்லிம்மா ..எனக்கும் ஊர் வீட்டு நினைவு வந்து இப்போ போஸ்ட் எழுதிட்டிருக்கேன்
ஆஆஆஆ வல்லிம்மாவும் வீட்டுப் போஸ்ட்டோ.. இப்போதான் பார்க்கிறேன்ன்.. வீடு எனச் சொலிவிட்டு.. வல்லிம்மா எழுதியிருப்பதெல்லாம் சிங்கம்அப்பா பற்றிய நினைவுகளே ஹா ஹா ஹா.. வீடு என்றாலே அவர்தானே நினைவுக்கு வருவார்ர்...
வீட்டு நினைவுகள் என்றாலே சிங்கம் இல்லாமல் எப்படி நிறைவு பெறும்! அருமையாக எழுதி இருக்கீங்க!
அழகிய நினைவுகள் அம்மா...
வீட்டைப் பற்றி இன்று அடுத்தடுத்து பல பதிவுகளைக் காண முடிந்தது. நினைவுகள் என்றும் சுகமானவை. இறைவன் நமக்குத் துணை நிற்பான்.
இனிமையான நினைவுகள்
மிக அழகான அருமையான பதிவு.
இனிமையான நினைவுகளை அப்படியே தேக்கி வைத்து இருந்து அதை பகிரும் விதம் மிக அருமை.
நினைவில் சார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எப்போதும்.
சாருக்கு வணக்கங்கள், உங்களுக்கும் தான்.
நீங்கள் சொல்வது அப்படியே கண்ணில் காட்சியாக விரிகிறது.
உண்மையே அன்பு ஸ்ரீராம்.
கலகலவென்று இருக்க வேண்டும் அவருக்கு.
நான் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால்.
பைக்கை எடுத்துக் கொண்டு தோழர்களைக் கண்டு
பேசிவிட்டு வருவார்.
அதனால தான் அவரால் எடையும் லேசாக எடுத்துக் கொள்ள
முடிந்தது. நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி,
நீங்கள் பொறுமையாக நாட்களைக் கடக்கும் விவேகத்தை எண்ணி
மிகவும் வியக்கிறேன்.
ஆமாம் நினைவோடம் செல்லும் வரை மனம் அமைதியாக இருக்கும்.
நன்றி மா.
அன்பு வெங்கட், வீடே நினைவாகிறது. நினைவுகளே வீட்டைச் சமைக்கின்றன.
நன்றி மா.
அன்பு மாதேவி,
நினைவுகள் ,இசை, சினிமா ,புத்தகங்கள்
எல்லாமே அவர் வழியாக நான் நிறைய
கற்றேன். அதனால் அவரைச் சுற்றியே
என் அனுபவங்களும்.
அதைப் பகிர்ந்து கொள்வதால் மீண்டும் வாழ்கிறேன்.
அன்பு ஏஞ்சல்,
நேற்று நண்பர்கள் வருகையில்
பொழுது கழிந்தது. இன்று உங்கள் வலைப்பதிவைப்
படிக்கிறேன்.
வீடு,நம் எண்ணங்களின், ஆசைகளின் வடிவம்.
அதை அழகாக்குவது நம் கடமை. உங்கள் வீட்டையும் பார்த்துத் தெரிந்து கொள்கிறேன்.
நன்றி மா.
ஆமாம் கண்ணா அதிரா.
பசங்க திருமணம் செய்து வெளியே சென்று விட்டார்கள்.
நாங்கள் இருவர் தான்.
கிட்டத்தட்ட இருபது வருடங்கள்.
தோட்டம்,வீட்டை அலங்காரம் செய்தல்,
கோயில்களுக்குச் சென்று வருதல் என்று ஒன்றாகவே செய்தோம்.
உறவுகளும் அண்மையில் இருந்ததால்,
போக்கு வரத்து அதிகம்.
சட்டெனக் கிளம்பிச் சென்று விட்டார்.
அதுதான் அதிகமாகப் புலம்புகிறேனோ
என்று தோன்றுகிறது.
உலகமே எனக்கு சிங்க அப்பாதான். நன்றி கண்ணா.
உண்மைதான் கீதாமா,
இல் அறம் அவருடன் இருந்த நாட்கள்.
நீங்க சொல்வது போலத்தான் எழுதுகிறேன்.,
அருமை தனபாலன். நன்றி ராஜா.
அன்பு முனைவர் ஐயா,
நீங்கள் சொல்வதுதான் உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஐயா.
அன்பு ஜெயக்குமார், வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.
அன்பு கோமதி,
18 வயதிலிருந்து 65 வயது வரை என்னை நன்கு
அறிந்து,
உறுதியாக என்னைக் காத்தவர்.
இப்பொழுது எழுதுவதேல்லாம் போதாது.
நீங்கள் சொல்வது போல அவரே என் துணை.
எழுதுவதில் அவர் பாதுகாப்பை மீண்டும் உணர்கிறேன்.
நல்ல வார்த்தைகளுக்கு மிக நன்றி மா.
மிக அழகான நினைவுகள் அக்கா. படிக்கும் பொழுதே கண்கள் பனிக்கிறது. என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றமே ஆவோம், உனக்கே நாம் ஆட் செய்வோம்" எனும் ஆண்டாளின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்பு பானு மா. ஏதோ ஆற்றாமையில் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
கொஞ்சம் பித்துப் பிடித்த நிலைன்னு சொல்லலாமா.
நன்றி மா. நல்ல கணவர் அமையப் பெற்ற அனைவரும் விரும்புவது இதைத்தான்.
நன்றி மா.
Post a Comment