வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அடுத்த அரைமணி நேரத்தில் கிரிஷ் கண்ணில் படுவான் என்ற நினைப்பே அவளுக்கு
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
வான் கூவர் நகரம் , விமானம் கீழே இறங்கும்போது , அந்த அழகை ரசித்தவாறு பார்த்துக் கொண்டே வந்தாள் கிருத்திகா. |
திகைப்பாக , இருந்தது.
இந்த ஒரு வாரம் சென்றதே அதிசயம் தான்.
விமான பயண சீட்டைப் பதிவு செய்தவுடன்
அடுத்த செய்கையாக பாட்டியிடம் பேசினாள்
தான் செய்வது சரியா.
அவசர படுகிறோமா. இரண்டு வாரங்களில் ஒருவர் பால் இத்தனை ஈர்ப்பு வருமா.
தான் முதல் காதலில் ஏமாந்ததால் , இப்படி ஏங்கிப் போய்விட்டோமா.
கிரிஷிடம் அப்படி என்ன ஈடுபாடு.
அவன் சாதாரண தோற்றம் கொண்டவன் தான்.
அந்த இனிய குணம் தான் அவளை கவர்ந்தது.
அந்த நேர்மையான பார்வையும், நட்பும்,
உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்ற
அந்த சொல்லாத வார்த்தையும் அவளால்
உணர முடிந்தது.
இதோ வான் கூவர் வரை அவளை இழுத்து வந்திருக்கிறது.
பாட்டி சொன்னது மீண்டும் அவள் காதில் ஒலித்தது.
அன்பைக் கண்டு ஓடி ஒளிய வேண்டாம்.
உனக்கும் அவனுக்கும் உண்மையிலே நேசம்
இருந்தால் அது வெற்றி பெறும்.
உன்னையும் அவனையும் சந்தேகிக்காதே.
உன் இதயம் சொல்படி நடந்துகொள்.
மற்றவை தானே நடக்கும்.
அவன் பெற்றோர்களுக்கு என் ஆசிகளை சொல்லு
என்று பாட்டிம்மா உறுதியாகச் சொன்னார்..
அவனிடம் இருந்து செய்திகள் வந்து கொண்டே
இருந்தன.
இவளும் பதில் போட்டுக் கொண்டே இருந்தாள் .
ஒரு கண்ணு க்குத் தெரியாத சங்கிலி இருவரையும் பிணைப்பது
போல உணர்ந்தாள்.
விமானம் தரை இறங்கியது.
இதமான தட்ப வெப்பம்.
ச ற்று நிதானித்தால்.
தான் தங்கவேண்டிய ஹாம்ப்டன் இன் , வண்டி வந்திருக்கிறதா
என்று கண்கள் தேட, முதலில் கண்ணில் பட்டது கிரிஷ் தான்.
ஒருகணம் திக்குமுக்காடுவது போல உணர்ந்தாள்.
பூங்கொத்தும், முகம் நிறைய புன்னகையுமாக
அவனைப் பார்த்ததும் அவள் முகமும் மலர்ந்தது,
பூக்களைக் கையில் வாங்கி கொண்டு,
''விடுதிக்குச் சென்று உங்களுக்கு தெரிவிக்கலாம்
என்றிருந்தேன்.
உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமே ..''..
''உன்னை யோசிக்க விடுவதாக இல்லை.
நானும் உன்னுடன் ஹோட்டலுக்கு வருகிறேன்.
நீ தயாரானதும்,
நேரே நம் வீடு. பிறகு டின்னர். என்ன சொல்கிறாய்?''
என்று கேட்டான்.
பதில் சொல்லும் நிலையில் கிருத்திகா இல்லை.
சரி என்று சொன்னதும், அவள் பெட்டியைக் கையில்
எடுத்தவன் தன வண்டியை நோக்கி நடந்தான்.
அவளுக்கு அவனைப் பின் தொடருவதைத் தவிர
வேறு வழி இல்லை.
பூக்களின் மணம் அவளை சூழ, கனவுலகத்தில் நடப்பது போல உணர்ந்தாள்
விடுதிக்கு வந்து கலைப்புத் தீர காப்பி அருந்த மட்டும் நேரம்
இருந்தது.
இந்திய உடைகளை அணிந்து
கிரிஷுடன் நகரின் எல்லையில் இருந்த அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
இந்தப் பதிவில் இணைக்க நினைத்த பாடலைத் தனியாகக் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து முடியும்.
இந்தப் பதிவில் இணைக்க நினைத்த பாடலைத் தனியாகக் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து முடியும்.
9 comments:
நல்லதே நடக்கட்டும்.
பாட்டி சொன்ன அறிவுரை சிறப்பு.
இனிய குணம் யாவரையும் கவரும்...
// இந்தப் பதிவில் இணைக்க நினைத்த பாடலைத் தனியாகக் கொடுத்திருக்கிறேன் //
இதற்கு அடுத்த பதிவில் உள்ளதை அறிந்தேன் அம்மா...
கிரிஷ் கிருத்திகாவை தன் இனிய குணத்தால் கவர்ந்து விட்டான்.
அப்புறம் என்ன கிருத்திகாவின் வாழ்வு நலம் பெறட்டும்.
வாழ்த்துக்கள்.
அன்பு வெங்கட்,
நலமாக இருங்கள்.
நல்லதே நடக்கும். இன்றே முடித்திருக்க வேண்டும் ,இந்தக் கதையை.
உட்கார முடியாததால் நீண்டு விட்டது.
அன்பு தனபாலன்,,அன்பும் ,நேர்மையும் காதலாகப் பரிணமித்தால் வாழ்வில் இன்பம் தான்.
உங்கள் பதிவுகளைப் போல. நன்றி மா.
அன்பு கோமதி, ஆமாம்
அந்தப் பையனைக் கண்ட போது எங்களையும் கவர்ந்தது இந்த மென்மைதான்.
நல்வாழ்வு பெறட்டும். நன்றி மா,
அன்பென்னும் ஒளியில் இரு உள்ளங்களும் திளைக்கட்டும்.
அனைத்தும் நன்மையாகவே முடியட்டும். வாழ்த்துகள்.
Post a Comment