Blog Archive

Friday, March 13, 2020

சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

சம்மதம் சொல்ல  மூன்று மாதங்கள் 



அடுத்த நாள்   இருவருமே  சொன்ன நேரத்துக்கு முன்பே உணவகத்துக்கு வந்து  விட்டார்கள்.

இருவரிடமும் உண்மையான மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.

ஒருவரோடு ஒருவர் உரையாடுவதும் சுலபமாக இருந்தது.

தன்  பாட்டிம்மாவைப் பற்றி  நிறைய சொன்னாள்  கிருத்திகா.
அவள் ஒருத்தி தைரியம் சொன்னதால் தன்  வாழ்வு நிலைத்தது
என்பதையும் சொன்னாள் .
தனக்கு ஒரு பாட்டிம்மா இல்லையே என்ற  வருத்தம் கிரிஷுக்கு அப்போதுதான் தோன்றியது.

என் பாட்டிம்மாவை உனக்கு அறிமுகம் செய்கிறேன் என்று 
இந்தியாவுக்கு தன்  கைபேசியில்     பாட்டியின் பெயரை அழுத்தினாள்.

தூங்க  முயற்சித்துக் கொண்டிருந்த பாட்டிம்மா,
பேத்தியின்   அழைப்பு மணியை அறிந்து ,
மகிழ்ச்சியுடன்.
எடுத்தார்.

என்ன Gudiyaa என்று செல்லமாக அழைத்தாள் .
பாட்டிம்மா ,என் நண்பர் கிரிஷை  உனக்கு  அறிமுகப் படுத்துகிறேன் என்று சிரித்தபடி கிரிஷிடம் 
ஃ போனைக் கொடுத்தாள் .

கொஞ்சம்  கூச்சத்துடன்  பாட்டிக்கு ஹலோ 
சொன்னான். பாட்டிக்கு வந்த தூக்கம் எல்லாம் 
போய்விட்டது.
யார், எந்த ஊர், பெற்றோர் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பிக்க  அவனும் ரசித்தவண்ணம், தட்டுத் தடுமாறும் தாய் மொழியில் 
பதில் சொன்னான்.
இத்தனையையும்   ரசித்துக் கொண்டிருந்தாள்  கிருத்திகா,.

மெதுவாகக் கையில் போனை எடுத்து பாட்டிம்மா 

அவர் நல்ல நண்பர்  .இரண்டு பேரும் நேற்றுதான் சந்தித்தோம்.
உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
அதுதான்  உன்னை அழைத்தேன்.
 நீ இப்போ தூங்க போ  ,குட் நைட் பாட்டிம்மா. நாளைக்கு உன்னிடம் என்ன எல்லாம் சாப்பிட்டோம் என்று சொல்கிறேன் என்று மென்மையாக 
முடித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கிரிஷ்,
 நான் இன்று மாலை   வான்  கூவர்  செல்கிறேன்.

 உனக்கு  ஆவல் இருந்தால் நீயும் அங்கே 
அடுத்த வாரங்களில்  வரலாம்.
என்றான்.
அவன் சொல்லி முடித்ததும்,
சட்டென்று  ஒரு பயம் தோன்றியது கிருத்திகா 
மனதில்.

சற்று   யோசித்து,  எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் கிரிஷ்.

எனக்கும் அவர்களை சந்திக்க  ஆவல் தான்.
அடுத்த மாதம்  முதல் வாரம், வருகிறேன் என்றாள் .

கிரீஷ்  அவள் தயக்கத்தைப் புரிந்தவனாக 
ஸ்ப்ரிங் டைம் அங்கே  நன்றாக இருக்கும் அதனால வரச் 
சொன்னேன். Take your time''
என்ற படி மற்ற விஷயங்களை  பேச ஆரம்பித்தான். அவன் 
உற்சாகம்   அவளைத் தொற்றிக்கொள்ள 
 அவளும்   அவனுடன்   உணவை முடித்த பிறகு 

திடீரென்று பெய்த மழையினூடே   சிரித்த படி 
நடந்தாள் .

மனம் விட்டு இன்னொரு ஆடவனோடு பேசுவது ,அதுவும் கிரிஷுடன் பேசுவது அவளுக்குப் பிடித்திருந்தது.
அவன் ஊருக்குச் சென்று விடுவானே என்று ஒரு சின்ன வருத்தமும் எட்டிப் பார்க்க 
அவனுக்கு விடை கொடுத்தாள் .

உன்னை சந்தித்ததில்    எனக்கு   மிக  மகிழ்ச்சி கிருத்திகா.

சந்தோஷமாக  இரு . மீண்டும் பார்க்கலாம் 
என்று வண்டியை எடுத்தான். 

அவனை இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச்
 சொல்லth  தோன்றினாலும்,
தன்னையே கட்டுப் படுத்திக் கொண்டாள் .

ஏர்போர்ட்டுக்கு  கொண்டு விட நான் ரெடி 
என்று புன்னகைத்தாள்.

அக்கா வீட்டுக்குப் போகிறேன். அங்கிருந்து யூபர்  எடுத்துக் கொள்வேன் என்றபடி,

''தாங்க்ஸ்   ஃ பார்  த   ஆபர் . சி யு'', என்று  
கிளம்பினான்.

வெற்றிடத்தில்  நிற்பது போல உணர்ந்தாள், கிருத்திகா.

இரவு பாட்டியிடம் பேசி  இந்த இரண்டுங்கெட்டான் 
நிலைக்கு முடிவு கட்டவேண்டும்  என்ற  நினைவோடு 
தன் 
வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் .

வீட்டுக்கு வந்தவள் செய்த முதல் வேலை 
அடுத்த வெள்ளிக்கிழமை வான் கூவருக்கு 
பயணச் சீட்டு  பதிவு செய்ததுதான்.













21 comments:

Geetha Sambasivam said...

நல்லபடியாகக் கிருத்திகாவின் கனவுகள் நிறைவேறட்டும். கதை நல்லபடியாகவே போகிறது. கிரீஷும் ஏமாற்றி விடுவானோ என்னும் அச்சம் இப்போது இல்லை.

துரை செல்வராஜூ said...

ஓ.. தொடர்கதையா!...

மழைச் சாரல் போல இருக்கிறது...
தொடரட்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

தொடரட்டும்
தொடரட்டும்
ஆவலோடு காத்திருக்கிறேன்

ஸ்ரீராம். said...

ஆர் டி பர்மனின் கடைசி படம்!  குமார் சானுவுக்குஇந்தப் பாடலுக்காக விருது கிடைத்தது என்று நினைவு.  நல்ல பாடல்.

ஸ்ரீராம். said...

கிருத்திகா சற்று வேகமாகவே இருக்கிறாள்.  கிரீஷ் நலலவனாக இறுக்கப் பிரார்த்தனைகள்.

கோமதி அரசு said...

கதையில் உரையாடலும், காட்சி அமியப்பும் மிக அழகாய் போகிறது.
இருவர் எண்ணங்களும் ஈடேற வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இன்னுமொரு ஏமாற்றம் இல்லாமல் இருக்கட்டும்....

தொடரின் இது வரை வந்த பகுதிகள் மூன்றையும் இப்போது தான் ஒரு சேர படித்து முடித்தேன். தொடரட்டும் பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மெதுவாகவே நல்ல முடிவெடுத்தாள் கிருத்திகா.
நிஜப் பெயர் சச்சி. என்னாளும் நன்றாக
இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை மிக மிக நன்றி,.
உண்மை அன்பு நிறையும் காலங்கள்,
மழைச்சாரல் போலத்தான் .'பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்'
பாடல் நினைவுக்கு வருகிறது.
என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
உங்களை மாதிரி எல்லாம் அறிவார்ந்த பதிவுகள்
தர முடியவில்லை.
உணர்வு பூர்வமான நிகழ்வுகளையே சொல்கிறேன்.
அதை நீங்கள் பாராட்டுவது மன உயர்வைத் தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நம் சிங்கத்துக்கு மிகப் பிடித்த பாட்டு.
பாடிக் கொண்டே இருப்பார்.

வந்து எத்தனை வருடங்கள் ஆகிறதோ!

கிரிஷ் ஆவல் காட்டினதால் ,கிருத்திகாவின் மனமும்
அவன் வசம் போகிறது.
உண்மையான அன்பு வெற்றி பெறும்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
அவளும் மிக மிக அழகான பெண்.
அந்தப் பையனும் மென்மையாகப் பேசுபவன்.
நல்லவன்.

நல்ல வார்த்தைகளுக்கு மிக நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

முழுவதும் படித்ததற்கு மிக மிக நன்றி மா.
இனிதான் பின் நோக்கிப் போய் பின்னூட்டங்களைப் பார்க்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர் சுவாரஸ்யமாக செல்கிறது அம்மா...

மாதேவி said...

இருமனங்களும் ஒன்றாக தொடர்கிறது.

ஜீவி said...

அடுத்த தொடரா?.. உங்கள் வேகம் பிரமிப்பாக இருக்கிறது.

முன் பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஓ இது என்ன தொடர் கதையொ வல்லிம்மா... நன்றாக இருக்குது...
ஹிந்திப்பாட்டுப் போட்டிருக்கிறீங்க...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் , உங்கள் ரசனைக்கு. உரியதாக ,இந்தத் தொடர் இருப்பதே. மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, உண்மையே மா. அன்புள்ளங்கள் இணையும் போது மகிழ்ச்சியே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார், எழுத்து எனக்கு. மருந்தாகிறது.
செய்தி வடிவில் ஒரு கரு கிடைக்கும் போது. ,எழுதுவது சுலபமாகிறது. நல்ல வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பிஞ்சுப் பேச்சாளர் அதிரா! ,இது ஒரு. வட இந்தியக் குடும்பத்தின் கதை.
அப்பா சிங்கத்துக்குப் பிடித்த பாடலைப் பதிவு செய்தேன் கண்ணா. நன்றி மா.