வல்லிசிம்ஹன்
கண்ணன் திருவடிகளே சரணம். கதை
அடுக்களையை விட்டு வரவே முடியாத படி பார்வதிக்கு வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாய்
வந்த படி இருந்தன. உதவிக்கு வந்த மருமகளின்
உதவியையும் ஏற்க மனமில்லை.
தன் மகனுக்குத் தானே சமைத்துக் கொடுக்க வேண்டும்.
மருமகள் மிக நல்லவள் தான்.
இருந்தாலும் பர்ன்வதத்துக்க வீடு ,தன் சமையலறை,
என்றே செயல்பட்டு வழக்கம்.
மருமகள் வனிதாவும் 15 வருடங்களாகப் போரிட்டு ஓய்ந்து விட்டாள் . அவளுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் பையன்களின் படிப்பு, நீச்சல்,கிரிக்கெட் என்று பல வேலைகள் சூழ,
சமையலறையில் வித விதமாகச் செய்து கணவனுக்கு கொடுக்கும் ஆர்வம் மட்டும்
விடவில்லை. எப்பவாவது உள்ளே நுழைய பார்த்தால்
பார்வதிம்மா விட மாட்டாள். 70 வயதில் தன் உரம்
படைத்த உடல் ஓய்வடையவில்லை// என்று சாதித்து, நிற்க இடம் இல்லாமல் செய்து விடுவாள்.
மாமனார் இறைவனடி சேர்ந்து 9 வருடங்கள் ஆன நிலையில்
சமையல் ஒன்றே, தன் மாமியாருக்குப் பலம்
என்று புரிந்து கொண்டு விலகி இருந்தாள். அவளுடைய நல்ல குணத்தை உணரும் நிலையில் பார்வதி இல்லை.
எப்போதோ தன் தாயார் போதித்தது ஒன்றே அவளுக்குப் பற்றுக்கோடு.
தன் மருமகள் கிட்டே மிகவும் பாதிக்கப் பட்ட பார்வதியின். அம்மா
மக்களிடம் எதை வீட்டுக் கொடுத்தாலும் சமையலை விட்டு விடாதே
அதில்தான் குடும்பமே அடங்கும்..
கொத்துச்சாவியும் ,கரண்டியும் தான் நமக்குப் பாதுகாப்பு என்றெல்லாம்
ஓதி அவளை பயமுறுத்தி இருந்தார் அவர்.
இப்போது அந்த நிலைமையில் யாரும் இல்லை
என்றாலும் ,முக்கியமாக வனிதா அப்படிப்பட்டவள்
இல்லை என்று மனம் உணர்ந்தாலும் அவளுக்கு விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முடியவில்லை.
இத்தனைக்கும் பக்கத்துத் தெருவில் இருக்கும் மகள் வீட்டிற்குக்
கூட போவதில்லை .
அவள்தான் வந்து அம்மாவுடன் பகலை க் கழித்து
விட்டு மாலையில் தன வீடு திரும்புவாள்.
நல்ல பெண் சுகந்தி .
தந்தை இருந்தவரை இருந்த அம்மா வேறு இப்பொழுது இருக்கும் அம்மா வேறு . வனிதாவிடம் எந்தக் குறையும்
கண்டதில்லை. அம்மா குழந்தைகளோடு இருந்து வனிதாவை சமைக்க அனுமதிக்கலாம்.
அவளோ வேலைக்குப் போவதைக்கூட நிறுத்தி விட்டாள் .
பர்வதத்தின் மகன் சந்தருக்கு அம்மா மேல் எத்தனை பாசமோ அதே போல மனைவியிடம் நல்ல மரியாதையும் பரிவும் உண்டு.
அப்பா இருக்கும்போது வீடு சம நிலையில் இருந்தது போல
அவனுக்குத் தோன்றியது. தந்தையும் வனிதாவிடம் மிக்க தோழமையாக இருப்பார். அவளும் அவரை நடைப்பயிற்சிக்கு பார்க்கில் கொண்டு விட்டு வருவாள்.
குழந்தைகளிடம் பிரியமாகக் கதை சொல்லி, பாடங்களுக்கு வேண்டிய உபகரணங்களை
சார்ட், வண்ணங்கள், போஸ்டர்கள் என்று வாங்கி கொடுப்பார்.
சந்தருக்கு வெளியூர் கள் செல்லும் வேலை.
அப்போதெல்லாம் குழந்தைகளை அவரே பொறுப்பாகப்
பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று
மீண்டும் அழைத்து வருவார்.
முதல் தடவை வந்த நெஞ்சடைப்புக்குப் பிழைத்தவர்,
பத்து வருடங்கள் கழித்து வந்த இரண்டாம் அடைப்புக்கு
அவர் இறைவனடி சேரும்போது அவருக்கு வயது 70.
பர்வதம் எதையோ எதிர்பார்த்தது போல அமைதியாகவே இருந்தாள் .
அதற்கு காரணம் குடும்பத்தில் இருந்த குழந்தைகள்.
வந்திருந்த உறவினர்கள் புறப்பட்டுப் போனதும்
மீண்டும் சமையலறையில் புகுந்தவளின் போக்கைத்தான்
அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
என் வனிதாவுடன் சேர்ந்து எதுவும் செய்யாமல்
இப்படி நடந்து கொள்கிறாள். ஏன் இப்படி காலை ,அதுவும் அதிகாலை எழுந்து
தனக்கும் ,குழந்தைகளுக்கும் சமைத்தபடி
பொழுதைக் கழிக்கிறாள்,
வீடே சதமாக வெளியில் எங்கும் போகாமல்
தானும் வனி ,குழந்தைகளுடன் போனால் ,முகம் வாடி, தொலைக்
.காட்சியோடு ஒன்றுகிறாள் ...
ஒன்றும் புரியவில்லை.
மீண்டும் சந்திக்கலாம்
9 comments:
கணவன் இறந்ததும் தனக்குப் பாதுகாப்பு இல்லை என உள்ளூர மனம் நினைத்ததோ! ஆனால் இவராவது கணவன் இறந்ததும் இப்படி நடந்துக்கறார். சிலர் கணவனையும் கூடச் சேர்த்துக்கொண்டு மருமகளைக் கணவனுக்குச் செய்யவிடாமல் தன் பெண்ணும் தானுமே செய்யும்படி பார்த்துக்கொள்வார்கள். அந்தக் கணவன் வாயில்லாப்பூச்சியாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். மருமகள் பாடு திண்டாட்டம் தான்.
இப்படியும் பர்வதம் போல் இருக்கிறார்கள்.
மன நிம்மதி நம் கையில் தான் .
மருமகளுக்கும் தன் கணவனுக்கு வித விதமாய் சமைத்து போட பிடிக்கும் என்று நினைக்க வேண்டும்.
பார்ப்போம் பர்வதம் மாறும் காலம் வருமா என்று.
புதிய கதை ஆரம்பமா? அவரின் போக்குக்கான காரணத்தை அறிய தொடர்கிறேன்.
அன்பு கீதாமா. எத்தனையோ விதங்களில் மாமியார்கள்.
பர்வதம் அதில் ஒரு ரகம் ஆனதுதான் கதை.
மனதை நிலையில்லாமல் ஆக்கிக் கொண்டு மற்றவர்களையும் வருத்துவது
பரிதாபப் படவேண்டிய நிலை.
நீங்கள் குறிப்பிடுவது சுய நலம் பாராட்டும் பெண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் மாறுவதில்லை.
நாம் நல்லபடியாக இருக்கலாம்.
அன்பு கோமதி,
இது ஒரு விதமான அச்சம்.
கட்டுப்பாடு தன் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற
பயம்.
அப்படி இல்லை என்று அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு நல்லது நடக்கும்.
அன்பு ஸ்ரீராம்.
எல்லொர் மன்மும் ஒரே நிலையில் தங்கி விட்டால்
நிம்மதியாக இருக்கலாமே.
பர்வதம் தன் நிலையை மாற்றிக் கொண்டால்
வருங்காலம் இனிமையாக இருக்கும்.
ஆமாம் புதுக்கதை. எப்பவோ நடந்தது.
எனக்கு அதைப் பதிய வேண்டும் என்று தோன்றியது.
ஆரம்பித்து விட்டேன்:_)
அடுத்த தொடர்... நல்ல ஆரம்பம்.
சில இழப்புகள் மனதை ரொம்பவே மாற்றி விடக்கூடும். என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன் மா...
அன்பு வெங்கட்,
பர்வதம் என்ன மன உளைச்சல் பட்டாளோ,
இனி காணலாம். கதைகள் சுற்றியும் நடக்கின்றன.
படித்துக் கருத்தும் இட்டதற்கு நன்றி மா.
வாழ்க நலமுடன்.
பர்வதம்போல் சிலர்... தொடர்கிறேன்.
Post a Comment