Blog Archive

Wednesday, December 04, 2019

திருக்குறுங்குடி 8

வல்லிசிம்ஹன்

திருக்குறுங்குடி  நின்ற நம்பி திருக்கோலம் 
Image result for Thirukkurungudi Nindra Nambi images



எம்பெருமான்  இராமானுஜர் அழகிய நம்பிக்கு உபதேசம் செய்யும் காட்சி. படத்தை இங்கே பதிவேற்ற முடியவில்லை. பாட்டி சொல்வார், ஸ்ரீவைகுண்டம் திருக்குறுங்குடியிலிருந்து கூப்பிடு தூரம் . அங்கிருப்பவர்கள் துளி தவறு கூட இழைக்க மாட்டார்கள் என்று.
8
Image result for THIRUKKURUNGUDI KIDANTHA NAMBI IMAGES


சுந்தர பரிபூரண அழகிய நம்பி 

Image result for THIRUKKURUNGUDI KIDANTHA NAMBI IMAGES

நல்ல உயரம் கொண்ட நெடுமால்.
பையர்களின்  கணிப்புப்படி 9   அடி  உயரமும்,
பச்சை வண்ண மேனியும் , வண்ணக் கலாப மேனியாக நின்ற பெருமாள்.

பெருமாளே நம்மாழ்வாராக அவதாரம் செய்ததால் இங்கே ஆழ்வாருக்குத் தனி சந்நிதி இல்லை.

படிகள் நல்ல உயரம்.  நின்ற நம்பி ,கிடந்த நம்பி, இருந்த நம்பிகளைத்தரிசித்துவிட்டு நான் பிரகாரத்தில் ஒரு திண்ணையில் அமர்ந்து விட்டேன்.
பெரிய மகனும் சின்னவனும் வெளிச் சுற்றில் தாயார்களைத் தரிசனம் செய்தனர்.
சின்னவன் வந்து ஆண்டாள் நாச்சியார்க்குச் சார்த்தி இருந்த பெரிய  அளவில்
இருந்த திருமாங்கல்யத்தை அழகை வர்ணித்தான் . என்னையே நொந்து கொண்டேன்.
போய்ப் பார்த்திருக்கலாம் என்ற தாபம்.

Image result for SRI ANDAL THIRUMANGALYAM

இப்படி இருந்திருக்கலாம்.
கோவிலைச் சுற்றிச் சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.
திரு ராமானுஜ பட்டர் வீட்டில் அருமையான அமுது படைத்தனர்.
குறுங்குடி வருபவர்களுக்கு அங்கே   உணவு படைப்பதைக் கைங்கரியமாகவே செய்து வருகிறார்.


கோவிலை விட்டு மனமில்லாமல் வெளியே வந்து, திருப்பாற்கடல் நம்பி, எம்பெருமானார் தங்கிய இடம், திருமங்கை ஆழ்வாருக்கு 
வைஷ்ணவ 
நம்பி  பெருமாள் வைகுண்டப் பிராப்தி அளித்த இடம் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார் திரு ராமானுஜன்.




Image result for IRATTAI TIRUPATHI TEMPLES, TIRUNELVELI
ராகு,கேது   இருவரின் பிடியிலிருந்து விடுபட
இந்த இரண்டு பெருமாள்களையும் சேவித்தால் போதும் 
என்றார்கள் . இரண்டு கோவில்களிலும் உத்சவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
பசுமையான   வயல்களுக்கு நடுவே இருந்த கோவில்கள். முன்பு இங்கு 
தாமிரபரணி   ஆறு  ஓடிக்கொண்டிருந்த இடமாம்.
உடையவர் ஸ்ரீ ராமானுஜருக்குப் பெருமாள் எங்கே  என்றே தெரியவில்லையாம்.

ஒரு சிறுமி வந்து    கூப்பிடு தொலைவில் இருக்கு. கோவிந்தான்னு 
அழை என்று சொல்லி மறைந்தாளாம் 
அதனால்தான் தொலைவில்லி மங்கலம்  என்று பெயர் வந்ததாம்.



அருள்மிகு   ஸ்ரீநிவாசன் திருவடிகளே சரணம்.
பெரிய மகன் அழகாக வரைந்து வைத்திருந்த திட்டப்படி இரட்டைத் திருப்பதியை நோக்கி  பயணப்பட்டோம்.
Image result for IRATTAI TIRUPATHI TEMPLES, TIRUNELVELI
Add caption




8 comments:

கோமதி அரசு said...

சுந்தர பரிபூரண அழகிய நம்பி படம் அழகு. தரிசனம் செய்து கொண்டேன்.

பிரகாரம் பெரிதாக இருக்கும் நடக்க முடியாது என்று போகவில்லையா?

ஆண்டாள் நாச்சியாரின் திருமாங்கல்யம் பற்றி அறிந்து கொண்டேன்.


Geetha Sambasivam said...

படங்களும் பதிவும் அருமை! எல்லாம் நன்றாக இருக்கின்றன.

நெல்லைத்தமிழன் said...

கோவில் சிறப்பான கோவில். ஆனா நீங்க ஒவ்வொரு பிராகாரத்தையும் சுற்றி வருவது கடினம். அந்தக் கோவிலில் உறவினர்களே, அவர்களில் ஒருவர் ஜீயராக எழுந்தருளுகிறார். இராமானுசன் அவர்கள் கோவிலுக்கு வருபவர்களுக்கு உணவு, இருப்பிடம், கோவிலைச் சுற்றிக் காண்பித்தன் என்ற கைங்கர்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தத் தடவை உங்களைத் தவிர மற்றவர்கள் மலைமேல் நம்பி கோவிலுக்குச் சென்றார்களா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

நீங்கள் பெருமாளை ரசித்துப் பதில் எழுதுவதே
மகிழ்ச்சியாக இருக்கிறது.

படிகளின் உயரமேஎன்னால் ஏறி இறங்க முடியவில்லை. பாதங்களிலும்
ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அதுதான் செல்லவில்லை.
எல்லோரும் 50 வயதில் எல்லா இடங்களையும்
சேவித்துக் கொள்ள வேண்டும்.மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
திருக்குறுங்குடியை விட்டு நகர முடியவில்லை. இனி அடுத்த க்ஷேத்திரம் செல்ல வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளீமா,
நீங்கள் சொல்வது சரியே. நம்பியைக் கண்டதே
போதும் என்று தோன்றிவிட்டது..
ராமானுஜன் தான் வழிகட்டியாக எல்லா இடங்களுக்கும் வந்தார்.
அவர் மனைவி அவ்வளவு பக்தி பூர்வமாகக் கைங்கர்யம் செய்வதாகவும்
சொன்னார்.
அனெகமாக அடுத்த ஜீயர் இவராகத் தான் இருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

அவர்கள் மகள் அடுத்த நாள் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தது. இனிமையான பெண்.

ஒருவரும் மலை மேல் நம்பி பார்க்கப் போகவில்லை.
நாங்கள் செல்வதற்குள் கோவில் நடை சாத்திவிடுவார்கள் என்றூ சொன்னார்.
ஒரு நாள் முழுவதும் இருந்து பார்க்க வேண்டிய இடம்.
நீங்கள் எழுதி இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

மாதேவி said...

பார்கும் போதே மனம் லயித்துவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நம் ஊர்களே அழகு தான்.