Blog Archive

Thursday, October 10, 2019

சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

சப்தஸ்வரங்கள்  ஒலி  மாறுமா. 3
++++++++++++++++++++++++++++++
மஹி  அடுத்த நாள் எழுந்திருக்கும் போது   அருமையான குழலோசை 
காதில்   விழ ,மன மகிழ்வோடு  எழுந்தாள்.
அன்று அமெரிக்க  மக்கள் முன்னால்  பாடப் போவதை நினைத்து 

ஆனந்த அதிர்வுகள்  எழுந்தன .

அருகிலிருந்த அம்மாவிடம்  இந்த  எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்த    போது, அம்மாவைக் காணவில்லை.

கடமைகளை  முடித்துக் கொண்டு   இசை வந்த வழி சென்றாள் .

அங்கு ஏற்கனவே குழுமியிருந்த  நண்பர்களுடன் புதிதாக மூன்று 

நபர்களைக் கண்டு  ஆச்சர்யமாக இருந்தது.

அருமையான  கிருஷ்ணா  நீ பேகனே பாரோ வை இதமாக வாசித்து முடித்தான்.
"வா மஹி. புது நண்பர்களை சந்திக்கிறியா என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

ம்ம் .கண்டிப்பா. சொல்லு என்று அந்த இரு பெண்களையும், இளைஞனையும் 

ஆவலுடன் பார்த்தாள்.

அரிசோனா இசை சங்கத்திலிருந்து  வந்திருக்கும் 
தன்யா , நிகிதா , ரகுநந்தன்.

என்று அறிமுகப் படுத்தவும்.  அவர்களை பார்த்து வணக்கம் சொல்லி   அவர்கள் அருகில்  அமர்ந்தாள்.

அழகாக தாவணி, பாவாடை என்று உடுத்தி இருந்த பெண்கள்.

வேஷ்டி ,குர்த்தா என்று  கம்பீரமாக  அமர்ந்திருந்த  ரகுநந்தன் 
எல்லாருமே  அவளை  அசத்தி விட்டார்கள்.

மேல்நாடுகளில் இந்திய  கலாசாரம் நன்றாக வாழ்கிறது என்று படித்த 
நினைவு வந்தது.



தன்யா  அரிசோனா யுனியில் கணினி துறையில் மூன்றாவது  ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

ரகுநந்தன் மருத்துவத் துறையில் மருந்துகள்  Pharmacy
பிரிவில் நான்காம்  ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.

நிகிதா  கணிதத்  துறையும், அக்கவுண்டன்சி, பைனான்ஸ்,
 நிர்வாகம்  என்று  நான்காவது  ஆண்டில் அடிவைத்திருந்தாள் .

எப்படி இவ்வளவு  படிப்புக்கு நடுவில் இசைக்கும் 
நேரம்  ஒதுக்க முடிகிறது  என்று வியப்பு வந்தது.

இந்த   இசை விழாவுக்காக   விடுப்பு எடுத்து வந்திருந்தார்கள்.

இங்கே முடிந்ததும் இன்னும் சிகாகோ, நியூஜெர்சி  ,கடைசியில் ஹூஸ்டன் 

என்று   நிகழ்ச்சிகள்  இருந்தன.
இளமையின் இனிமை  அங்கே  பூர்வமாக   அமர்ந்தது போல 

மஹிகாவுக்குத் தோன்றியது . அவரவர்  தங்கள்  இசையில் 
நிறைவு கொண்டவர்களாகவும், இன்னும் கற்க ஆசை கொண்டவர்களாகவும் அவளால் உணர முடிந்தது.

San Jose Center For The Performing Arts

சான் ஹோஸே இசை வளாகம்.

 எல்லோரும் கலந்து   உரையாடிக் களித்து இசை சென்டருக்கு கிளம்பினார்கள்.

கொலம்பஸ் தினம் என்று  மூன்று  தினங்கள் விடுமுறையாக இருந்ததால் 

கூட்டத்துக்கு குறைவே இல்லை. 
இந்தியர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்திருந்தார்கள்.

அங்கேயே உணவுக் கூடமும்   இருந்ததால் 
பெரிய விழாவாக நடந்து கொண்டிருந்தது.

முதலில்  ரகுநந்தனும்   பரணியும் சேர்ந்து வழங்கிய புல்லாங்குழல் இசை 
எல்லோரையும்    இருக்கையைவிட்டு  நகர முடியாமல் 

கட்டிப் போட்டது.






அடுத்தடுத்து வந்த  நிகழ்வுகளாக 

ஹரனின் இந்துஸ்தானி சங்கீதக் கச்சேரியும்,

மஹிகாவின்  அரை மணி நேர கர்நாடக இசையும் பலத்த வரவேற்பைப் பெற்றன.

தொடரலாம்.















19 comments:

Geetha Sambasivam said...

மிக அருமை. இங்குள்ள குழந்தைகளைப் பற்றி நீங்கள் சொல்லுவது உண்மை தான். படிப்பையும் கவனித்துக்கொண்டு கலாசாரங்களையும் விடாமல் இருக்கிறார்கள். பெண் வீட்டுக்கு வந்திருந்த இரு பெண்களில் ஒருவரது மகனும், இன்னொருவரது மகளும் அருமையாக என்றூ சொன்னால் மட்டும் போதாது. கச்சேரியே செய்யலாம். விட்டல் ராமமூர்த்தியின் சகோதரி ராஜேஸ்வரியிடம் கற்கின்றனராம். கேட்க வேண்டுமா? ஒரு சின்னக் கச்சேரியே அன்று கேட்டோம்.

Geetha Sambasivam said...

பரணி, ஹரன், இப்போது ரகுநந்தனா? ம்ம்ம்ம்ம்ம்? நல்ல விறுவிறுப்பு. எப்படி முடியும்னு பார்க்கலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

நல்ல இசை ஞானம் உள்ளவரோ நீங்கள்? அழகாக கதை சொல்கிறீர்கள். தொடர்கிறேன்..

ஸ்ரீராம். said...

இதுவரை கதை சாதுவாகப் போய்க்கொண்டிருக்கிறது.  கியர் மாற காத்திருக்கிறேன்!

கோமதி அரசு said...

நல்ல இசை எல்லோரையும் கட்டி போடும்.
நல்ல கதையும், இசை விருந்து படைத்து கட்டி போட்டு விட்டீர்கள்.

மாதேவி said...

அற்புதமான இசை தென்றல் மனதை தழுவி செல்கிறது.

ஜீவி said...

//எப்படி இவ்வளவு படிப்புக்கு நடுவில் இசைக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது என்று...//

வாசிப்பும் இசையாய் இசையும் வாசிப்பாய் இருப்பவர்களுக்கு எல்லாம் சாத்தியமே..

வல்லிசிம்ஹன் said...

கீதாமா.எத்தனை விழாக்கள் கோவிலில் நடக்கின்றன. அத்தனையிலும்
அழகழகா உடை அணிந்து கொண்டு அத்தனை பையங்களும்
பெண்களும் அமர்ந்து பாடுவதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சி.

காத்தாடி ராமமூர்த்தியின் பெண்
என் மகளுக்குப் பள்ளி சினேகிதி.
ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகளாவது பாட்டு சொல்லிக் கொடுக்கிறார்.
அவரது தங்கைவருடா வருடம் 100 குழந்தைகளை வைத்து நடன நிகழ்ச்சி நடத்துகிறார்.
லெமாண்ட் ராமர் கோவிலில் வித விதமாகக்
கலை நிகழ்ச்சிகள்.
நீங்கள் சொல்வதைக் கேட்க மிக சந்தோஷம்.
குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டூம்.

ஊருக்குக் கிளம்பும் நாட்கள் வருவதால் சீக்கிரமெ
கதையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அங்கே இணைப்பு எப்படி இருக்குமோ.
நல்ல வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோசஃப் சார். இசைஞானம் எல்லாம் கிடையாது சார். அனுபவிக்கத் தெரியும்.
கதை சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து
எழுதுகிறேன். இங்கிருக்கும் இளைய சமுதாயம்
நடந்து கொள்ளும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது.
அந்த நேர்மையும் அவ்விதமே.
மறைத்துப் பேசும் குணம் இல்லை.நன்றி ஜி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். அமைதியான நதியில் ஓடம். இப்பொழுது அதை அசைக்க பல்வேறு இசை நதிகள் வந்து சேருகின்றன.
அசித்துப் பார்த்து விடலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இசை இல்லாவிட்டால் வாழ்வு இல்லை. இறைவனிடம் வேண்டிக்கொள்வது அதுதான். புலன் கள் ஒழுங்காக இயங்க வேண்டும் என்பதும், புத்தி நல வழியில் எப்பொழுதும் நிலைக்க வேண்டும் என்பதும் தான்.
என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி ,
இசைத் தென்றல் ...இந்த வார்த்தை மயில்வாகனன் சார் நினைவுகளை எழுப்பியது. எவ்வளவு நல்ல நாட்கள் அவை.
இசையால் ஆகாதது என்று ஒரு விஷயத்தையும் சொல்ல முடியாது.
ரசித்துப் படிப்பதற்கு மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
அற்புதமான சொற்கள். வீணை,புல்லாங்குழல் எல்லாமே வாசிப்புதானே.
மனம் ஒன்றி இசைந்து விட்டால் அகிலமே நம் வசம்.
உழைப்பு ஒன்றுதான் இத்தனையையும் சாதிக்கும்.
மிக மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

கதை அருமையாகப் போகிறது அம்மா. ஆஹா இப்ப ரகுநந்தன் என்ட்ரியா....ஆ ஆ ஆ ஆ ஆ எல்லாமே திசை மாறப் போகிறதோ??!!!! பார்ப்போம் ..அந்த ட்விஸ்ட்டுக்குத்தான் வெயிட்டிங்க்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாட்டு எல்லாமே அருமை அம்மா.

ஸ்வாகதம் க்ருஷ்ணா ஆஹா...சேஷு மாமாவும் சூப்பரா பாடிருப்பார்...அனுபல்லவி கேட்டால் ஆஹா ஆஹா தான்...

கீதா

KILLERGEE Devakottai said...

குழலிசை அற்புதம் அம்மா.
தொடர் சுவாரஸ்யமாக செல்கிறது...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
குழல் எல்லோரையும் மயக்கும். மென் இசை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா எவ்வளவு ஆர்வம் உங்களுக்கு.
உங்கள் எல்லோருடைய ரசிப்பும் மிக உயர்ந்த தரம்.

இசை மட்டுமே இங்கே கதை இல்லை. இசைப்பவர்களின் கதை. உன்னிப்பாகக் கவனித்து
கருத்தும் சொல்வது உங்கள் டிரேட் மார்க். நன்றி அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரஸ்யம்...

வெளி நாட்டில் இருந்தாலும் நம் ஊர் போன்று கலைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தும் இப்படிச் சிலர் உண்டு.

கச்சேரி களைகட்டிவிட்டது. மேலும் தெரிந்து கொள்ள, தொடர்கிறேன்.