Blog Archive

Saturday, September 07, 2019

புதுப்பிக்கப் படும் உலகம் .... வீடு

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வலமாக வாழ வேண்டும்.

புதுப்பிக்கப் படும் உலகம்  வீடு 


வீடு முழுவதும் தலை எங்கே கால் எங்கே என்று தெரியாமல்
மாறி இருக்கிறது.

நம் கணினி  மேஜை முழுவதும் வீட்டுப் பொருட்கள்.
வீடெங்கும் பெயிண்ட் வாசனை.
குறுக்கே நெடுக்கே போகும் சுறுசுறு ஆட்கள் இரண்டு பேர்.
நவீன ஏணிகள்.

ப்ளாஸ்டிக் போர்வைக்குள் ஒளிந்த சோஃபாக்கள்.
மம்மா...அதாவது நான் பார்க்க டிவி யை மட்டும் மூடவில்லை.

நான்கு நாட்களாக முக்கால் வாசி முடிந்துவிட்டது.
சமையல் ஓரிடம் அவர்கள் வருவதற்கு முன்னால் முடித்து சாப்பாடுகள் என் மேஜைக்கு வந்து மூடப்பட்டுவிடும்.

இன்றும் நாளையும் அவர்கள் வர மாட்டார்கள்.
ஆனால் இந்த இளைஞர்களின் ....வயது 55.60.... சுறுசுறுப்பையும் திறமையையும்
சொல்லி முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரத்துக்கு 35 டாலர்கள்.
எட்டுமணி நேரத்தில் சாதிக்கும் வேலை அதிசயிக்க வைக்கிறது.

நடுவில் ஒரு ப்ரேக். அப்போது அவர்களின் பெரிய வண்டியில் வீட்டிலிருந்து கொண்டு
வந்த உணவை உண்டு
ஒரு சிகார் பற்றவைத்துக்கொண்டு  அரைமணியில் முடித்து வந்துவிடுவார்கள்.
1996 இல் கட்டிய வீடு.
கவனிக்க வேண்டிய தருணம்தான்.

இது தவிர மாற்ற வேண்டிய  விளக்குகள். முழுவதும் பிரகாசமாக
எல் இ டி டேலைட் பல்புகளும்,
அலங்கார விளக்குகளும்.
 பூர்த்தியான பிறகு படம் எடுக்க வேண்டும்.

Image result for lAMPS LED

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

கொஞ்சம் கடினமான வேலை தான் வல்லிம்மா... நிறைய பொறுமையும் வேண்டும். விரைவில் வேலை முடிந்து சாதாரண நிலைக்கு வீடு திரும்ப வேண்டும். பிறகு படம் எடுத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீராம். said...

"இளைஞர்"களின் வயது ஆச்சர்யப்படவைக்கிறது.  சீக்கிரம் வீடு புதுப்பொலிவு பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பட்டும்.  சிலபேருக்கு (எனக்கும்)  அந்த பெயிண்ட் வாசனை ஒத்துக்கொள்ளாது. 

மாதேவி said...

புதிதாக வீடுகட்டுவது சுலபம் வீட்டீக்குள் இருந்துகொண்டே செய்வது கடினம். அதுவும் நம்நாடுகளில் கேட்கவே வேண்டாம் இந்த அனுபவங்கள்.

Yaathoramani.blogspot.com said...

புதிதாக கட்டுவதை விட ரிப்பேர் நிச்சயமாக கடினமான பணி...காரணம் இருந்து செய்யவேண்டியிருப்பதுவும்...

கோமதி அரசு said...

வீட்டை வெள்ளை அடிக்கிறது என்றால் வேலை பெரிய வேலை. அவர்கள் எல்லா வேலை செய்து விடுவார்கள் இல்லையா?

நாமே எடுத்து வைத்து கொடுக்க வேண்டும் என்றால் கஷ்டம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஆமாம் அடுத்த வாரம் முடிந்து விடும்
மிக அழகாகச் சுத்தமாக வேலை செய்கிறார்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான். படம் எடுப்பது உசிதம் இல்லை.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அப்படித்தான் இருக்கிறது.
வயது தெரியாமல் உடல் கட்டு. ஏற்கனவே இரண்டு கல்யாணம் மக்கள், பேரன் பேத்திகள் என்று அவர்கள் வாழ்வு.
ஒரு மணி நேரத்துக்கு 35 டாலர்.கை சுத்தம். சுணக்கம் கிடையாது.

அப்புறம் என்ன இளமை ஊஞ்சல் தான்.முதுமையிலும்.
எனக்கும் பெயிண்ட் ,தும்மல் கொடுக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, சும்மாவா சொன்னார்கள்.
வீடு அசையாமல் சாப்பிடும் என்று.
வருடா வருடம் செலவழிக்கத்தான் வேண்டும்.

நமக்கும் அதுதான் பாதுகாப்பு. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Yaathoramani.blogspot.com
மிக உண்மை. சில நாட்கள் சிரமப் படுவதில்
நஷ்டம் இல்லை.
இவர்கள் உண்மையாக உழைப்பதால்
நாம் நம் வேலைகளைப் பார்த்துக் கொண்டால் போதும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
தேவையானல் உதவி செய்வார்கள். அதற்கு முன் மகளே
எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டாள்.
நம் வீடு நாம் தான் உழைக்கணும்.

Geetha Sambasivam said...

பெரிய வேலைதான். அதைவிடப் பெரிய வேலை நல்லவேளையா நான் அங்கே இல்லை. இல்லைனா ஒரு வழி பண்ணிடும் உடம்பு! :)))))

வல்லிசிம்ஹன் said...

மாம் கீதாமா,

மூச்சு விடுவதே சங்கடமாகிவிட்டது. வெளியில் போகலாம் என்றால்
வெய்யில் கொளுத்தியது.