Blog Archive

Friday, September 06, 2019

சியாட்டிலின் இரண்டாம் நாள், ரெயினியர் மலைச் சிகரம்.

நாங்கள்  மலையேறி ய இடம் 
மலை அடிவாரம் கிரிஸ்டல் மௌண்டன் 
மலைமேல் காப்பிக்கடை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்.

சியாட்டிலின் இரண்டாம் நாள் 
 ரெயினியர் மலைச் சிகரம்.
Image result for road to mount rainier from Seattle
Add caption

 சிகாகோவிலிருந்து  சியாட்டில் வந்து சேரும்போது
மதியம் இரண்டு ஆகி விட்டது.
விமான நிலையத்திலிருந்து பெல்வியு மாரியாட் பான் வாய்
 வந்து  சேர இரண்டு மணிகள் ஆயின.

வரும் வழியில் 19 வருடங்களுக்கு முன் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு
மாப்பிள்ளை அழைத்துப் போனார்.
பையன் களுக்கு ஒரே உத்சாகம்.
அவர்கள் இருந்தபோது ஒரு பூகம்பமும் வந்திருந்தது.
அதிலிருந்து எப்படித் தப்பினார்கள் என்று
மகள் விளக்கிக் கொண்டு வந்தாள்.
இறைவன் எத்தனையோ கருணை காட்டி இருக்கிறான்.

இப்பொழுதும் மழைக்காலம் ஆரம்பித்து, கிழக்குக் கடற்கரையைத் தாக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த ஊரின் வித விதமான சீதோஷ்ணமே
வியப்புக் கொடுக்கக் கூடியது.
சியாட்டில் என்றால் எப்பொழுதும் மழை பெய்யும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.நாங்கள் அங்கே இருந்த ஐந்து நாட்களும் ஒரே ஒரு மழை பெய்தது.
உலகம் முழுவதும் வானிலை  மாறி விட்டிருக்கிறது.

ஊர் சுற்றி விடுதி வந்து சேர்ந்ததும் ,விடுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் நடந்தோம்.

ஒரே கலகலப்பு.
எல்லா கணினி மென்பொருள் கம்பெனிகளும் இங்கே தான்
இருக்கின்றன.
அதில் வேலை செய்யும் வாலிப வாலிபிகள் தற்காலிகமாகத் தங்க
வைக்கப் படும் விடுதிகளில் இதுவும் ஒன்று.
காலையில் ஆறரை மணிக்கு அழகாக காலை உணவை முடித்துக் கொண்டு
விடுதி கொடுக்கும் வண்டியில் ஏறி, மைக்ரோசாஃப்டோ,  ஆமேசானோ,
ஆப்பிளோ, எல்லாவற்றிலும் வேலை செய்யும் முகங்களில் முழுவதும் உத்சாகம்.
அதில் முக்கால்வாசி இந்திய முகங்கள்.
அடுத்த நாள் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் எரிமலைகளில் ஒன்றான
ரெயினியர் மலை.
இப்பொழுது மௌனமாக இருக்கும் மலை பெருமூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது.
அதீத வெய்யிலினால் ஆங்காங்கே காட்டுத்தீ இருக்கும் செய்தி வந்ததும் கொஞ்சம்
தயக்கம் இருந்தது.
கடைசியில் வியூ பாயிண்ட் சிகரம் சென்று தொலைவிலிருந்து
ரெயினியரைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம்.
அலுக்காமல் சலிக்காமல் விரையும் வாகனங்கள்.
மரங்களுடே   கண்ணாமூச்சி ஆடிய சூரியன்.
Add caption
Cable cars or Gondolos to the top.




செல்லும் வழியில் முழுவதும் பசுமையான நெடு நெடுவென்று வளர்ந்த மரங்கள். எதோ  வனத்துல வந்து விட்டோமோ என்று திகைக்க வைத்தன . மாடுகள் மட்டும் இருந்திருந்தால் ஸ்விட்சர்லாந்து என்று நினைக்கலாம். வெய்யில்  நிறைய இருந்தாலும் மக்கள் கூட்டம் அதிகம் 
மலை முகட்டில்  நின்று  செலஃபி எடுக்கும் கும்பல். தடுப்பு சுவரின்  மீது விளையாடும்  கன்னியர் காளையர்.

Crystal mountain  என்று அழைக்கப் படும் இந்த மலையிலிருந்து சுற்றி இருக்கும் ஐந்து சிகரங்களைக்  காணலாம்.

சில்லென்று காற்று அடித்தாலும் சூரியனின் உஷ்ணமும் தெரிந்தது.
எங்களுக்கு ரெயினர் போகும் அவசரம் .
கீழே இறங்கி வந்ததும் காப்பி குடிக்க விரைந்தோம்.

 அங்கே  வந்த வானொலி அறிக்கை.  சில இடங்களில் காட்டுத்தீ 
அதிகமாக இருந்தததால் அனைவரும்  எச்சரிக்கையோடு இருக்கும் படி செய்தி வாசிக்கப் பட்டது. அப்பொழுதே மணி மூன்றாகி இருந்தது,.
ரெயினியர் போக வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம்  ஆகும். திரும்பிப் போகும் நேரம் மூன்று மணி நேரக்  காட்டு வழி.


இருட்டில்  எங்கேயாவது அகப்பட்டுக் கொண்டால்  சிரமம்.
மான்கள்  ஏதாவது வண்டியில் அகப்பட்டால்   அதுவேற 
வேதனை .

அங்கிருந்து கிளம்பினாள் போதும் என்கிற  அவசரம் சிறு சலனமாகப் பரவியது.
அதை எல்லாம் மீறி ஆட்டம் பாட்டம் எல்லாம் அங்கே நடந்து கொண்டிருந்தன.
சுற்றி இருந்த மரங்களூடே   மினுமினுப்பாக பங்களாக்களில் 
விளக்குகளும் மெல்லிய இசையும்   ஆரம்பித்தன.
அவர்களுக்கு இந்த எச்சரிக்கை எல்லாம் பழக்கம் போல.

பேரனுக்கும் அவனுடைய வேலைக்கு அடுத்த நாள் 
போக வேண்டும்.  
அதனால், ரெயினியர் மலை அடிவாரத்துக்குப் போகும் 
எண்ணத்தைக் கைவிட்டு சியாட்டிலுக்குத் திரும்பும் சாலையில் புகுந்தோம்.
வழி நெடுக்கப் படங்கள் எடுத்துக் கொண்டே வந்தான் சின்னவன்.

அதில்தான் சில படங்களைப்  பதிவிட்டிருக்கிறேன்.
இத்துடன் இந்தப் பயணக்கட்டுரை இனிதே முடிந்தது.




.

19 comments:

கோமதி அரசு said...

மிக அழகிய இடம்.
பயணம் இனிதாக இருந்தது.

//அவர்கள் இருந்தபோது ஒரு பூகம்பமும் வந்திருந்தது.//
அதிலிருந்து எப்படி தப்பினார்கள் என்று மகள் சொன்னாலும்

அதிலிருந்து உங்கள் ஆசீர்வாதம் இறைவன் அருளால் தப்பினார்கள் என்று நினைக்க சொல்லுது.
பேரன் எடுத்த படங்கள் அழகு.

துரை செல்வராஜூ said...

>>> அவர்கள் இருந்தபோது ஒரு பூகம்பமும் வந்திருந்தது.<<<

எத்தனை எத்தனை தான் வேதனைகள்...

புதிய விவரங்கள் தெரிந்து கொள்ள அழகிய படங்களுடன் பதிவு...

தங்கள் பதிவுகள் சிலவற்றைத் தவற விட்டிருக்கிறேன்...
பொறுத்துக் கொள்ளுங்கள் அம்மா!...

நலம் எங்கும் வாழ்க...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. இறைவன் இல்லாமல் வேறு யார் அம்மா நமக்கு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அந்த நிகழ்வின் போது பெரிய பேரன் இரண்டு. வயது. கொள்ளைப் பேச்சு. பேசுவான். டேபிளுக்கு அடியில்
உட்கார்ந்து கொண்டாரகளாம் அவனும் அம்மாவும். நான் கேட்டு. நடுங்கியதும் நினைவில் இருக்கிறது.

ஊருக்கு உண்டானது. எங்களுக்கும் என்று மகள் சமாதானம் சொன்னாள்.

இரவும் பகலும் மாறிப் போகும் உலகம் ஒன்றுதான் பாடல் நினைவுக்கு வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, இனிய வெள்ளிக் கிழமை காலை வணக்கம் வளம் நிறையட்டும்.

மெதுவாகப் படியுங்கள் அம்மா. இதென்ன பொறுத்துக்கொள்ள கொள்ளுங்கள்னு பேசுவது.? உங்கள் உடல் நலம் தவறியதா?

நீங்கள் எல்லோரும் உடல் உள்ள நலம் மகிழ்ச்சியோடு. இருக்க வேண்டும் மா.அது போதும். படங்கள் பேரன் எடுத்தான் நான் ரசித்துக் கொண்டு வந்தேன்.நன்றி மா.

KILLERGEE Devakottai said...

படங்கள் அனைத்தும் அழகு

ஜீவி said...

வல்லிம்மா,

மணியனின் 'இதயம் பேசுகிறது' வாசித்து வந்த ஆவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் விவரிப்பைப் படிக்கும் பொழுது தொற்றிக் கொண்டது.

வெறும் புகழ்ச்சி இல்லை. உண்மையாகவே உணர்ந்த உணர்வு. Hats off to your write up.

ஜீவி said...

ரெயினியர் என்பது காரணப் பெயரா? ரெயின்--மழை-- என்ற வார்த்தையிலிருந்து வந்ததா?

ஜீவி said...

தொலைக்காட்சியில் அடுத்த நாள் காட்டுத்தீ பற்றிய செய்திகளையும் காட்சிகளையும் பார்த்த பொழுது நல்லவேளை திரும்பினோம் என்று முடிப்பீர்கள் என்று எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் அவர்கள் தான் எந்த இயற்கையும் சீண்டலுக்கும் அலட்டிக் கொள்வதே இல்லையே! அவர்களைப் பொறுத்த மட்டில் எல்லாமே அனுபவங்கள் தான்.

அதீத உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்களாய் நாம் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

ஜீவி said...

அதில் முக்கால் வாசி இந்தியர்கள் என்று எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது.

சென்ற காலம் மீண்டும் மீள வேண்டும் என்ற ஆவல் உந்தியது.

ஸ்ரீராம். said...

சியாட்டில் மலைச் சிகரம் "எல்லை மீறிய" அழகாய் இருக்கிறது!  ரொம்ப முன்னாலும் ஒருமுறை இதே வார்த்தையை உங்கள் தளத்தில் உபயோகித்த நினைவு!

ஸ்ரீராம். said...

அழகான வர்ணனைகளோடு சொல்லி இருக்கிறீர்கள்.  கன்னியர், காளையர் எனும் வார்த்தைகள் 60, 70 ஆம் வருடங்களில் உபயோகிக்கப்படுபவையோ....  ஏனோ எனக்கு அப்படித் தோன்றுகிறது!

ஸ்ரீராம். said...

ஆஹா...   கடைசியில் அங்கு செல்லாமலேயே திரும்பி விட்டீர்களா? ரெயினியர் மலை திருப்பதி மலையானதோ!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் நமஸ்காரம்.
நீங்கள் எழுதி இருப்பதைப் பார்த்தால் ,மஹா கூச்சமாக இருக்கிறது.
மணியன் சார் எங்கே. அவரது காதலித்தால் போதுமா
தான் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த தொடர்.
மாயாவின் சித்திரங்களோடு சுவாரஸ்யமாகச் சென்ற தொடர்.

தூளிக்கு வெளீயே நீட்டிக் கொண்டிருக்கும் பிஞ்சுப் பாதங்கள் திகைத்து நிற்கும் கதா நாயகன்,
அந்தக் காதலி எல்லாமே மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.
இத்தனைக்கும் அப்போது இதுதான் காதல்,இதுதான் திருமணம்

என்பதெல்லாம் அறியாத வயது.

அப்போதிலிருந்து படித்த கதைகளின் சாயல் என் எழுத்தில் படிகிறதோ
என்னவோ.எப்படி இருந்தாலும் உங்களைப் போன்ற எழுத்தாளர்
சொன்ன வார்த்தைகள் மகிழ்விக்கின்றன. நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையிலியே இந்தியக் குழந்தைகள்
நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.
என் உறவிலேயே மூன்று வாலிபர்கள் திருமணமும் செய்து
நன்றாகவே இருக்கிறார்கள்.
இந்தியா ஒளிர்கிறது என்று இங்கே சொல்லலாம்.

வல்லிசிம்ஹன் said...

அப்படியெல்லாம் செய்தி வரவில்லை ஜீவி சார். அதை முந்திக் கொள்ள ஒரு
shooting incident நடந்து விட்டது. இவர்கள் வாழ்க்கையே புரிபடவில்லை.
அந்தந்த நாள் நடந்தால் சரி என்று நினைப்பார்களோ. இதோ இப்பொழுது தூரியன்
புயலும் மழையும் நாள்முழுவதும் போகின்றது.
ரெயினியர் ஒரு பிரென்ச் பெயர். Volcano named after a warrior.
ஜீவி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். கன்னியர் காளையர் எங்கள் காலத்தில் உபயோகிக்கப்
பட்ட வார்த்தைப் பெயர்கள் தான். ஹாஹா.
காதல் எனும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலம் எல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ பாடல் நினைவுக்கு வருகிறது.


எல்லை மீறிய அழகு. நான் எழுதினேனா,
நீங்கள் பின்னூட்டம் இட்டீர்களா.
சென்ற பதிவில் கோமதிக்கு இரண்டு தடவை
பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
வயசாகிவிட்டது ராஜா.
ஆமாம் திருப்பதி கதைதான்.
காட்டுத்தீன்னால் நமக்கு நடுக்கம்.

மாதேவி said...

இனியபயணம் நாமும் சென்று வந்தோம். அழகிய காட்சிகள்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிக மிக நன்றி மா.