Blog Archive

Saturday, September 21, 2019

மன அழற்சி செய்யும் மாயம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

எங்கள் ப்ளாக்  ஸ்ரீராம் பதிவிட்ட படத்துக்கும் கவிதைக்கும்
மனம் நிறை நன்றி.

மன அழற்சி  செய்யும் மாயம்
+++++++++++++++++++++++++++++++++
 செல்லி, செல்லிம்மா எழுந்திருடா.
ஞாயிற்றுக்கிழமை தூங்கினது போதும்

இன்னிக்கு நாம் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்குப்
போகணுமே.
வா வா. குளித்து உடை மாத்திக்கோ.
  // நீ காமாட்சி கோவிலுக்கும் அழைச்சுப் போனாதான்
நான் வருவேன்.  சேரி,, இரண்டு கோவிலுக்கும் போலாம்.

வில்வண்டி கூட வந்துட்டது.
மாட்டு சத்தமும் சலங்கை சத்தமும் கேட்க
விழித்துக் கொண்ட செல்லாவுக்கு
தான் இருக்கும் இடம் புரியவில்லை.
அம்மா,அம்மா என்று தீனக் குரல் எழுப்பினாலும்

அம்மாவைக் காணவில்லை.
இன்னோரு குரல்தான் அம்மா எழுந்திருங்க எத்தனை நேரம் தூங்குவீங்க.
இதோ மருமக்ள கஞ்சி கொண்டு வந்துட்டாங்க.
வாயத் திறங்கமா. //என்று அழைக்கும் இன்னோரு குரல்.
தன்னிச்சையாகத் திறந்த வாயில் ,
கஞ்சி ஊறியது. விழுங்கவும் முடியவில்லை.
அரைமணி கழித்தே சாப்பாட்டு வேளை முடிந்தது.
செல்லி என்கிற செல்லாப் பாட்டிக்கு 85 வயது.
அவள் மனம்  சென்று வந்ததோ கடந்த காலங்கள்.



வைத்தி யர் நரம்புத் தளர்ச்சிக்குக் கொடுத்த மருந்து வேலை
செய்ய மீண்டும் துயில்.

அவளத்தட்டி எழுப்பியது கணவரின் குரல்.
தூங்க விடாமல் என்னன்னா தொந்தரவு.
குழந்தையைப் பார்த்துக் கோங்கோ. நான் தூங்கறேன்.
அம்மா நான் தான் சின்னி மா. உன் பையன்.
எழுந்திருமா. உன் பேரன்களைப் பார்.
உடனே மழலைக் குரல்கள்.பாட்டி பாட்டி
நான் பாடட்டுமா என்று கட்டிலில் ஏறியது குழந்தை.

பள்ளிக்கூடம் போலியா நீ என்று வார்த்தைகள் வெளிவந்ததும் ஒரே கரகோஷம்.
பாட்டிக்கு  சதீஷைத் தெரிந்துவிட்டது.
ஓ ஷி இஸ் பெட்டெர் டுடே என்ற ஆர்ப்பரிப்பு.

அவள் தன்மகன் என்று நினைத்துச் சொன்ன சொல்.
குழந்தையின் கன்னங்களை வருடிக் கொடுத்தபடியே
துயிலில் ஆழ்ந்தாள் பாட்டி.

உடன் வந்த நினைவில் செங்கமலம்
கிணற்றங்கரையில் விழுந்துட்டா.
யாரது பாசியை விட்டு வைத்தது. குழந்தை விழுந்துவிட்டாளே.
வீட்டுப் பொண்களுக்கு விதரணை வேண்டாமா
என்று ஒலித்த கணவரின் குரல்.
உடல் எல்லாம் நடுங்கியது.
சாப்பாடு ,சமையல் தூக்கம் ,பன்னீர் மாதிரி ரசம் பண்ணான்னு
பெருமை.
மாமியாரின் அதட்டல். குழந்தையை வண்டியில் அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்ததென்னவோ
செல்லிப்பாட்டிதான்.
தொண்டை நிறைய துக்கம் அழுத்த விசும்பினாள்
பாட்டி.
 அருகிலிருந்த தலையணையைத் தட்டிக் கொடுத்து
ஒண்ணுமில்லடா தூங்கு
அம்மா பார்த்துக்கறேன். நிஜக் கண்ணீர் இருபுறம் வழிய, துடைத்து விட்டது மருமகளின் கரங்கள்.
ஒண்ணும் இல்லமா. நாங்க எல்லாரும் சௌக்கியம்.
என்று தட்டிக் கொடுத்தாள்  நிர்மலா.
அம்மாக்குப் பழைய பாட்டுகளைப் போட்டு வைக்கலாம். மனசுக்கு நிம்மதி கிடைக்கும். இது
சின்ன மகன். 1950,60 வருடப்  பாட்டுக்களை போடு.

அம்மாவுக்குப் பிடிக்கும்.


இது ஒரு நாள் நிகழ்வு. இது போல பல வருடங்களைத் தாண்டியே
உடல் நலம் நலிந்து,மகிழ்ச்சிக்கும்,துக்கத்துக்கும்,கற்பனை செய்த
பயங்கரகளுக்கும் பயந்து,மகிழ்ந்து,அழுது
தன் உலகத்தில் வாழ்ந்து மறைந்தாள்.
செல்லி.
அவளை விடக் கலங்கியது அவள் குடும்பம் தான்.
கண்முன்னே உயிரோடு இருந்த ,
ஆனால் தங்களை மறந்த அன்னையைப் பார்க்கத்தான் சகிக்கவில்லை.
இறைவன் நம்மைக் காக்கட்டும்.

பல நினைவுகளைக் கொண்டு வந்த பாட்டி படத்துக்கு நன்றி ஸ்ரீராம்.



7 comments:

கோமதி அரசு said...

இரண்டு பாடலகளும் மிக அருமை.
இனிமையான அந்தக்கால பாடல்.
கேட்டு ரசித்தேன்.
கதையை முன்பே படித்தாலும் இங்கும் படித்தேன்

ஜீவி said...

இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட நினைவு இருக்கிறதே?.. தவறி மீள் பிரசுரம் ஆகி விட்டதோ?..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இந்தப் பதிவை. ட்ராஃப்டில் வைத்திருந்தேன் .எங்கள் ப்ளாக்ஸ் இல் வெளியானதும் இப்போது இங்கே பதிந்தேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் .,இது முன்பே எழுதி கிடப்பில் இருந்தது் இந்த வாரம் எங்கள்ப்ளாக். ,மாயமனம் தலைப்பில் வந்தவுடன் என் சேமிப்புக்காக இங்கே பதிந்தேன் சார்.

Geetha Sambasivam said...

எங்கள் ப்ளாகிலும் படித்து ரசித்தேன். இங்கேயும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.... மீண்டும் இங்கே படித்தேன். பாடல்களும் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

@ கீதாமா,
@ வெங்கட்,
@ கோமதிமா. நன்றி. வெளிவேலை இருக்கிறது. மீண்டும் பார்க்கலாம்..