வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
பயணம் போய் வந்த கதை ///1
இது எங்கள் எட்டாம் நாள் பயணத்தின் விவரம்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
பயணம் போய் வந்த கதை ///1
இது எங்கள் எட்டாம் நாள் பயணத்தின் விவரம்.
இது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் ஒரு கனிமச் சுரங்கம்
இங்கே இங்கிலாந்து முதலாளிகள் ஆரம்பித்த கம்பெனி காட்சியகமாக
இன்னும் இருக்கிறது.
பிரம்மாண்டமான கட்டிடம்.
அதில் வேலை செய்த சுரங்கத் தொழிலாளியின் பாடல்.
ஒவ்வொரு நாளும் 16 டன் கரி அள்ளும் அவனுக்கு கிடைத்ததெல்லாம் இந்தக் கம்பெனி ஸ்டோருக்குப் போய்விடுகிறது.
வாழ்வின் இறுதி வரும் வேளையில் என்னிடம் ஒன்றும் இருக்காது,
என்று சொர்க்கத்தின் செயின்ட் பீட்டரிடம் சொல்கிறான்,
அவனது ஆத்மாவும் அந்தக் கம்பெனிக்குச் சொந்தமாம்.
நாங்கள் இங்கே சென்ற பொது அங்கிருந்த
விற்
பனைப் பெண்கள் எத்தனை வற்புறுத்தியும் எனக்கு அங்கு செல்ல மனமில்லை,.
எத்தனை ஆயிரம் தொழிலாளிகள் இங்கே பாடுபட்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் ,உயிரைக் கொடுத்து உழைத்து பகைவகைக் கனிமங்களை வண்டிகளில் தள்ளிக் கொண்டு மேலே வந்து நல்ல காற்றை சுவாசிப்பார்கள்.
//சித்திரச்சோலைகளே பாடல் தான் நினைவுக்கு வந்தது.//
அந்தப் பெண்களிடம் Sixteen tonnes பாடலைப் பற்றிச் சொன்ன பொது
பாடியே காண்பி த்தார்கள்.
அங்கு வந்த ஓரிரு முதியவர்களும் தலையாட்டி ரசித்தார்கள்.
20 comments:
சித்திரச் சோலைகளே பாடலை அவர்கள் பாடிக் காண்பித்தார்களா? ஆச்சர்யம்.மேலே உள்ள பாடல்கள் நான் கேட்டதில்லை.
பதிவு எனக்குக் கொஞ்சம் புரியலை. நம்ம தமிழ்ப்படப்பாடல் அங்குள்ள விற்பனைப் பெண்களுக்கு எப்படித் தெரியும். அந்த ஆங்கிலப் பாடல் சிங்கத்தின் பாடல், அது ஓகே/ மற்றவை? ம்ம்ம்ம்ம் , கவனம் சரியா இல்லைனு நினைக்கிறேன். மறுபடி சாவகாசமா வந்து பார்க்கிறேன்.
புரட்சி கவிஞர் பாரதி தாசன் கவிதை சித்திர சோலைகளே பாடல் மிக அருமையாக இருக்கும். உழைப்பாளர்களின் பாடல் அதை அவர்கள் பாடுவது வியப்பு!
சார் பாடும் பாடலும் அருமையான பாடல் .
காணொளி பார்த்தேன். சுரங்கம் சுற்றிப் பார்த்தேன்.
காணொளிகள் இயங்கவில்லை பிறகு வருகிறேன் அம்மா.
அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசை இன்னும் கூடிக் கொண்டே வருகிறது.
சென்ற தடவை நானும் ஒரு பாதாள சுரங்கத்தினுள் ( Mammoth cave National Park) குடும்பத்துடன் சென்று வந்தது நினைவில் தங்கி ஆனந்திக்க வைத்தது.
Mammoth Cave National Park preserves the cave system and a part of the Green River valley and hilly country of south central Kentucky. This is the world's longest known cave system, with more than 400 miles (643 km) explored.
இந்த நீண்ட குகை பற்றி மேலும் தகவல்கள் அறிய
Mammoth Cave என்று Google search செய்து பார்க்கலாம்.
நான் அறிந்த வரை சுற்றுலாவிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து பராமரித்து வரும் நாடு அமெரிக்கா என்றே தெரிகிறது.
நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்க கேட்டேன் வல்லிம்மா நன்றாக இருக்கிறது.
உங்கள் பயணம் இனிதாக அமைந்தது குறித்து சந்தோஷம். சுரங்கம் போலவே தெரியவில்லை வெளியிலிருந்து பார்க்க...
தொடர்கிறோம் அம்மா
கீதா
ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா...
//அந்தப் பெண்களிடம் இந்தப் பாடலைப் பற்றிச் சொன்ன பொது
பாடியே காண்பி த்தார்கள். //
வல்லிம்மாவுக்கு நம் தமிழ்ப்பாடல் நினைவுக்கு வந்திருக்கு....ஆனால் அப்பெண்களிடம் பேசிய போது அந்த ஆங்கிலப் பாடலைப் பற்றி சொல்லியிருக்காங்க அந்த ஆங்கிலப் பாடல் உடனே அப்பெண்கள் அதைப் பாடிக் காட்டினார்கள் என்று சொல்லியிருக்காங்க என்று என் புரிதல்...சரியா அம்மா...
கீதா
சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே... (2)
- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!...
உங்கள் வேரினிலே.... உங்கள் வேரினிலே....
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே... (2)
- எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே... சொல்லவோ ஞாலத்திலே...
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! -- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ...? (2)
- நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்...
உதித்தது மெய் அல்லவோ...? உதித்தது மெய் அல்லவோ...?
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ...? (2)
- பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ... செல்வர்கள் நீதி நன்றோ...?
வெளிப் படத்தைப் பார்த்தால் சுரங்கம் போன்றே தெரியவில்லை
பாடகர் யாரோ ஹிந்தி பாடகரை நினைவு படுத்துகிறார். பாரதிதாசனின் 'சித்திர சோலைகளே உண்மை நன்கு திருத்த இப்பாரினிலே அருமையான பாடல்.'
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
பயணக்களைப்பு தீர்ந்த பிறகு எழுதி இருக்கலாம்.
தெளிவாக இல்லை இந்தப் பதிவு.
அது ஆங்கிலப்பாடல்.1950களில் பிரபலம். நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை
செய்யும் தொழிலாளிகளின் அவல நிலையைப் பற்றி எழுதப்பட்டுப் பதிவான பாடல்.
உலகம் எங்கும் உள்ள உடல் வருத்திப் பிழைக்கும்
மனிதர்களின் சோகம்.
எங்கள் இருவருக்கும் பிடித்த பாடல். இப்போதும் கம்பீரமாக இயங்கும் மியூசியம்..
அதன் முன் இருந்த இந்த கடை.Company store சற்றே மனம் கலங்கி விட்டது.
அதன் விளைவு முன்னும் பின்னுமாக அமைந்த
வரிகள்.
சித்திரச்சோலைகளே தமிழ்ப்பாடல் மிகவும் உருக்கமான
கவிதை.
சட்டென்று மனசில் உறைத்தது. நன்றி மா.
இனிய காலை வணக்கம் கீதா மா.
உண்மைதான். உடலும், மனமும் களைத்திருக்கும் போது
சொல்லும் வார்த்தைகள் முன் பின் முரணாக
அமைந்து விட்டன.
மீண்டும் எடிட் செய்த பிறகு சரியாக வந்து இருக்கிறது
என்று நம்புகிறேன்.
ஒரு பாடலும், ஒரு காணொளியும் தான்
இருக்குமா.
ஒன்று சுரங்கத் தொழிலாளி பாடுவது.
இன்னொன்று சுரங்கத்தைப் பற்றிய இன்றைய காணொளி.
அன்பு கோமதி மா. இனிய காலை வணக்கம். சுரங்கம் பற்றிய காணொளி உங்களுக்குத்
தெரிந்தது என்பதே மகிழ்ச்சி.
அந்தக் கடை முற்காலத்தில் தொழிலாளர்களுக்கு
வேண்டிய உடைகள், காலுறைகள் என்று
பல்வகைப் பொருட்களை
விற்றுக் கொண்டிருந்தது.
கோஆபரடிவ் மாதிரி.
இப்போது, உடைகள் கல் பதித்த ஆபரணங்கள்
செருப்புகள் எல்லாம் விற்கிறார்கள்.
நான் அவர்களிடம் ஆங்கிலப் பாடலிப் பற்றிச் சொன்னதும்
உற்சாகமாகப் பாட ஆரம்பித்தார்கள்.
அந்தத் தொழிலாளைப் பற்றி நினைத்த போது சட்டென்று மனதில் வந்த
பாடல் சித்திரச்சோலைகளே.
அங்கே இருந்த தொழிலாளர்களின் படங்கள் என்னை
அவ்வாறு நினைக்க வைத்ததுமா. நன்றி கோமதி.
வணக்கம் அன்பு தேவகோட்டை ஜி.
காணொளி நன்றாக இருந்தது. நீங்கள்
பார்க்க முடியாதது வருத்தமே.
அன்பு ஜீவி சார்.
இனிய காலை வணக்கம்.
புறப்பட்டு வாருங்கள் ஜி. திருமதியையும் அழைத்துக் கொண்டு.
மாமத் கேவ் காணொளி கட்டாயம் பார்க்கிறேன்.
இங்கு பாதுகாக்கப்படும் எல்லா வரலாறுகளும்
நம் நாட்டைவிட பழையவைகளே.
அவற்றின் வழியே அரசாங்கத்துக்கு வருமானமும் கூட.
நம்மூரில் விஷயமே தனி.
இருக்கும் கலைச் செல்வங்களை வைத்தே ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள்.
நல்ல வேளையாக இப்போது பாரம்பரியங்களைப் பாதுகாக்கக் குழுக்கள்
வளர்ந்து வருகின்றன.
பழமையைப் பாதுகாத்தால்
புதுமையும் வளரும். மிக மிக நன்றி சார்.
அன்பு கீதா ரங்கன் மா.
அப்பாடி எத்தனை சுருக்காகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் தெளிவாக
எழுதி இருக்க வேண்டும். எல்லோரையும் குழப்பிவிட்டேன்.
அந்த ஆங்கிலப் பாடல் கரி சுரங்கத்தின் தொழிலாளிகளின் அவலத்தை விளக்கும் பாடல்.
அவர்களுக்கு இருக்கும் குறைந்த சம்பளம், அந்தக் கம்பெனி ஸ்டோரில் சேரும் கடன்.
அவர்களுக்குள் நிகழும் கைகலப்பு
எல்லாம் சேர்ந்து வரும்.
இந்தக் கட்டிடம் மஹா பெரியது.
நுழை வாசலில் இருந்து சுரங்கம் சற்றுத் தொலைவில் ஆரம்பிக்கும்.
வெளியே You can pan for gold.
மிக மிக நன்றி மா. இத்தனை புத்திசாலிப் பெண்ணைத் தோழியாக அடைந்தது
என் பாக்கியமே.
அன்பு கரந்தை ஜெயக்குமார். பெரிய கட்டிடத்தின்
பின்னால் சுரங்கப் பாதைகள். நல்ல இடம் தான் மா.
அன்பு தனபாலன்,
மனதில் ஓடிய பாடல் வரிகளை இங்கே பதிந்து விட்டீர்கள். எவ்வளவு உத்தமமான வரிகள்.
கேட்கும் போதெல்லாம் உணர்ச்சி பொங்கி வரும். மிக நன்றி மா.
முதல் காணொளியில் வரும் பாடல் நன்றாக இருக்கிறது. இரண்டாம் காணொளி மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
நெய்வேலியில் இருக்கும் நிலக்கரிச் சுரங்கத்திற்கு ஒன்றிரண்டு முறை சென்று வந்ததுண்டு. அனுபவங்கள் தந்த பாடம் இன்றும் நினைவில்.
பயணம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் மா...
கண்டுகொண்டோம்.
Post a Comment