Blog Archive

Sunday, July 21, 2019

சிங்கத்தின் கைவினைப் பொருட்கள்


 மரங்களெல்லாம்  மிருகங்களாக மாறிய காலம் .


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

20 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ராமலக்ஷ்மி. வெகு நாட்களாகக் கிடப்பில் இருந்த பதிவு
இன்று பப்ளிஷ் ஆகிவிட்டது மா.மிக மிக நன்றி.

Avargal Unmaigal said...

அருமையான படைப்பு... நல்ல கலைத்திறனும் கைதிறனும் வேண்டு அது உங்களவருக்கு இருந்திருக்கிறது அது அவருக்கு கடவுள் தந்த வரமாக இருக்கும்

KILLERGEE Devakottai said...

அழகாக இருக்கிறது அம்மா.

நெல்லைத்தமிழன் said...

இன்னும் அதிகமான கைவினைப் பொருட்களை பகிர்ந்துகொண்டிருக்கிறீர்களே.

ரொம்ப நல்லா இருக்கு. ஆர்வம் மெச்சத் தக்கது

துரை செல்வராஜூ said...

மனிதர்கள் எல்லாம் மரங்களாகிக் கொண்டிருக்கையில்
மரங்கள் எல்லாம் மிருகங்களாக மட்டுமல்ல
அவற்றுக்கும் மேலாக மனிதர்களாகவும் கூடும்!...

என்றென்றும் நலம் வாழ்க...

கோமதி அரசு said...

சாரின் கை வண்ணத்தில் உருவாகிய ஒட்டகசிவிங்கி அழகு.

ஜீவி said...

நெட்டி மாதிரி மரம் தானே இதெற்கெல்லாம் உபயோகப்படுத்துவார்கள்?.. துண்டாக்கி, வழவழப்பு ஏற்படுகிற மாதிரி சீவி, அங்கேங்கே பொருத்தி. மெல்லிசா
பெயிண்ட் திட்டி, ஹம்மாடி.. ரொம்ப பொறுமை வேணும். அதைத் தாண்டி இப்படிச் செய்தால் இப்படி உருவாகும் என்ற கணிப்பு வேண்டும்..

நம்மாலெல்லாம் ஆகாது, சாமி!




மாதேவி said...

வாவ்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. ஆர்ப்பாட்டம் இல்லாத திறமையான மனிதர். கைகளில் கடவுள் பெரிய வரம் கொடுத்திருந்தார். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

நன்றி மா. இந்தப் பாராட்டுகள் அவரைச் சேரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அவர் பற்றி படமோ, கைவினைப் பொருளொ
என்ன எழுதினாலும் எல்லோருக்கும் பிடிக்கிறது.
நேற்று களைஎடுக்கும் வேலைகளில் இருந்தேன்.

இந்தப் படம் பப்ளிஷ் ஆகிவிட்டது.
ஆமாம் நிறைய இருக்கிறது.முக்கியமானது மரச் சங்கிலி.
மிகக் கஷ்டப்பட்டு செய்தார்.
அவை எல்லாம் பையன் கள் வீட்டிலும் இங்கேயும் இருக்கின்றன.
1 1/2 அடிக் கரடி சின்னவன் வீட்டில் இருக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு துரை செல்வராஜு,

அப்படியாவது நல்ல மனிதர்கள் வந்தால் நன்மைதான்.
இங்கே மரக்கடைகள் அங்கங்கே சிற்பக்கூடங்களாகக் காட்சியளிக்கும்.

மரங்கள் போற்றப் படுகின்றன.
மிருகங்களும் காக்கப் படுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. ஆமாம்.உளியும் கையுமாகத்தான் நேரத்தைச் செலவழித்தார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜீவி சார்.
இந்த ஒட்டகச் சிவிங்கி செய்ய 4 மாதம் ஆச்சு.2011 ஆம் வருடம்னு நினைக்கிறேன்.
இங்கே கிடைக்கும் பல்சா வுட் மிக நேர்த்தி.
உழைப்புக்கு ஏற்ற மாதிரி வளைந்து கொடுக்கும்.
கண்கள் அமைக்க மிகவும் கவனம் எடுத்துக் கொள்வார்.
அதற்காகக் கடைகளில் ஏறி இறங்கி,கறுப்பு மணிகள் தேர்ந்தெடுப்பார்.

நல்ல திட்டம் போட்டுச் செய்யும் வாகு மிக நேர்த்தி.
நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி மாதேவீ.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நீங்க முன்னாடியே அப்பா செய்திருந்த பொருட்கள் இங்கு பகிர்ந்தீங்க இல்லையா....அதுவே மனதைக் கவர்ந்தது இப்போது இதையும் பார்த்ததும் மை காட்!!!!! என்ன அருமையான கலைத்திறன்.!!! பெர்ஃபெக்ஷன்!!! மனதில் தான் செய்யப் போகும் பொருட்களின் வடிவம் நன்றாகப் பதிருந்திருக்க வேண்டும் அப்ப்டி என்றால் எப்படியான அப்செர்வர் என்று வியக்க வைக்கிறது!!

ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையாகச் செய்திருக்கிறார். உங்கள் மனதிற்கு இவை எல்லாம் சந்தோஷம் தரும் விஷயங்கள்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
ட்ராஃப்டில் இருந்ததைப் பப்ளிஷ் செய்து விட்டேன். எழுதாத
பதிவுகளை டெலிட் செய்து வருகிறேன்.
எந்த எண்ணத்துடன் எழுத ஆரம்பித்தேனோ
அதுவே மறந்து விட்டது.
இது போல 20 பதிவுகள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்க வேண்டாமெ
என்கிற எண்ணாம் தான்.
ஆமாம் அப்பாவின் கைகள் அற்புதமானவை.
ஆச்சரியங்களைப் படைத்தார்..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான வேலைப்பாடும்மா...

பார்க்கத் தந்ததில் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

இனிய மாலை வணக்கம் அன்பு வெங்கட்.
ஏற்கனவே சில் வடிவங்களைப் பதிந்திருக்கிறேன்.
இது பழைய பதிவுகளைத் தேடும்போது நீக்க மனமில்லாமல் பப்ளிஷ் செய்து விட்டேன்.
நன்றி ராஜா.