வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
இன்று இணையத்தில் நான் பார்த்த படம் ஹவுஸ் ஓனர்.
திரு, ராமகிரூஷ்ணனும், லட்சுமி ராமகிருஷ்ணனும் தயாரித்திருக்கும் படம்.
காதலில் ஒருமித்த தம்பதியரில் கணவருக்கு Alzhimer வந்துவிடுகிறது.
இப்படி ஒரு எளிமையான படத்தை ஒரு அழுத்தமான கருவை வைத்து எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
அதற்கு மனம் நிறை வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
படத்தின் பெயர் ஹவுஸ் ஓனர்.
CHENNAI: He survived the times spent in sensitive areas and in firing lines while serving the Indian Army. However, 72-year-old retired Lt.Col. G.Venkatesan had a tragic death along with his wife drowning inside his house after nine hours of struggle. Neighbours who heard them cry for help watched helplessly until their voice ceased to be heard. Venkatesan and his wife Geetha drowned inside their ground floor residence, “Geethalaya” in Defence officers colony in Ekkatuthangal, unable to get out of it.//2015இல் சென்னையைத் தாக்கிய வெள்ளம் யாராலும் முடியாது. அப்போது படித்த செய்தி
படைப்பு பார்வை
இதுதான் கதையின் கரு. இதில் ஒரே ஒரு மாறுதல்,
கணவருக்கு அல் சைமர் வந்ததிலிருந்து அவரைத் தாய்க்கு மேல்
கவனித்துக் கொள்ளும் நடிகை ஸ்ரீரஞ்சனியின் நடிப்பு.
காதல் மனைவியுடன் அழகாக்க கொஞ்சும் கிஷோர்.
கர்னலுக்குத் தன மனைவியை, தான் பரிபூரணமாக நேசித்த காதலியை அடையாளம் தெரியவில்லை.
ஆனால் அவள் சொல்லுக்கு கட்டுப்படுகிறார்,
மழையின் போது அழகாக வெளியே சென்று வருகிறார்.
கடைசி நிமிடம் வரை வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார்.
//இது என் வீடு .நான் இதை விட்டு நகர மாட்டேன்// அதற்காகத்தான் இந்தப் பெயர் படத்துக்கு வைக்கப் பட்டிருக்கிறது //
அவருக்கு ,தன திருமணம், தன ராணுவ நடவடிக்கைகள்
எல்லாம் நினைவிருக்கிறது.
இப்பொழுது பெய்து கொண்டிருக்கும் பிரளயத்தை பி புரிந்து கொள்ளவில்லை.
மனைவி ராதாவாக வரும் நடிகை ஸ்ரீரஞ்சனி எத்தனை
புரிதலோடு கணவரைக் கையாளுகிறார்.
கவிதையாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.
மகளும் தங்கையும் கெஞ்சியும் கிளம்பத் தயங்கும் மனைவி .
அவரை அழைத்துச் செல்லும் இடத்தில் அவர் முரண்படுவாரே என்கிற பயம்.
இதெல்லாம் தான் சோகம்.
இனிமை சேர்க்கும் பாலக்காட்டுத் தமிழ். இனிமையான பாடல்கள்.
நல்ல வேளையாக அவர்கள் இறக்கும் காட்சி வரவில்லை.
ஆனால் கடைசி நிமிடம் வரை மனையின் போராட்டத்தை கர்னலால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மனம் படபடக்க வைக்கும் காட்சிகள் அவை.
நல்ல படம் நீங்களும் பார்க்கலாம்.

15 comments:
மறக்க முடியாத சென்னை வெள்ளத்தில் நடந்த அந்த சம்பவம் எனக்கும் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதை வைத்துப் படமா? லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கெனவே சில படங்கள் இயக்கியிருக்கிறார். இது பிறகு பார்க்க வேண்டும்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
லக்ஷ்மி த்ரில்லர் படங்கள் எடுத்திருக்கிறார்.
அவரும் கணவரும் நல்ல ஜோடி.
இந்தப் படத்தில் மனதை மிகவும் தொட்டது மனைவியாக நடித்தவரின் உழைப்புதான்.
யப் தொலைக்காட்சியில் வந்தது.
முடிந்த போது பாருங்கள் மா.
விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது அம்மா.
எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
தொலைக்காட்சியில் வைத்தால் பார்க்கலாம்.
தியேட்டர் போய் பார்த்து பல வருஷம் ஆச்சு.
தொலைக்காட்சியில் வந்ததா? எந்த சேனலில் வைத்தார்கள்?
இதைப் பார்த்தவர்கள் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் கதைக்கரு இது தான் எனத் தெரியவில்லை. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அழகாகப் படம் எடுத்துள்ளார் என்பதையும் அதில் சொல்லி இருந்தார்கள்.முடிஞ்சால் பார்க்கணும்!
சென்னையைத் தாக்கிய வெள்ளம் யாராலும் முடியாது. அப்போது படித்த செய்தி//
அந்தச் செய்தி இன்னமும் நினைவில் இருக்கிறது வல்லிம்மா. அந்த முதியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தது மனம் கனத்துவிடும் இப்போது அதை நினைத்தாலும்..
லட்சுமி ராமகிருஷ்ணம் இதற்கு முன்னும் படங்கள் இயக்கியுள்ளார். அவர் எடுக்கும் படங்கள் அத்தனையும் மிக மிக வித்தியாசமானவை. நான் ஓரிரு காட்சிகள் தான் பார்த்திருக்கிறேன்...அதுவே மனதைக் கவர்ந்தது. அவரது படங்கள் பார்க்க வேண்டும் என்று சென்னை மக்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன். இந்தப் படமும் சேர்த்துக் கொண்டுவிட்டேன். நீங்கள் சொல்லியிருப்பதும் படம் பற்றிச் சொல்லிவிட்டது அருமை என்று தெரிகிறது...
கீதா
பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது
அன்பு தேவகோட்டைஜி,
நான் அல்சைமர் பற்றி எழுதின அன்று இது yupp tv yil
வந்தது. நல்ல படம். இருவரும் ரொம்பப் பாவம்.
ஆனால் அவர்கள் காதல் மனதை தொட்டது.
அன்பு கோமதி,
முன்பே வந்துவிட்டதா. நான் தான் ஆமை. ஹாஹ்ஹா.
நல்ல படம்மா. Yupp tv இந்த ஊரில் இருக்கிறது. நமக்கு வேண்டும் என்றால்
பார்க்கலாம்.
மகன் அனுப்பிக் கொடுத்திருக்கிறார்.
இங்கே பேரனுக்குத் தமிழ்ப்படங்களில் வரும் வசனங்கள்
தேவை இல்லாதவை என்று மகள் கருதுவதால் நான் அதிகம்
பார்ப்பதில்லை.
இந்தப் படத்தை ஐ பாடில் பார்த்தேன்.
நல்ல டைரக்ஷன். கிடைத்தால் பாருங்கோம்மா.
அன்பு கீதாமா,
லக்ஷ்மி அவர்களே ,, இந்தப் பட டைரக்டர் அந்த நிகழ்வு அவர்களுக்கு ஒரு கற்பனைதூண்டலாக
இந்தப் படம் எடுத்தார்களாம்.
படத்தின் கடைசிப் பகுதி நம்மை அழுத்தி விடுகிறது.
yupp tv இங்கே ஐ பாடில் பார்க்கலாம்.
அது வழியாகத் தான் பார்த்தேன்.
கட்டாயம் பாருங்கள் திரு. முருகானந்தம்.
ஒரு நல்ல அனுபவம். சிறிதே சோகம்.
உங்களுடைய பதிவு நன்றாக இருக்கிறதம்மா...
இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தேன்....
நிலமதில் வாழ்க்கை நில்லாது ஓடும் நீரின் குமிழி - என்றார்கள்..
பட்டப்பகலில் நீர்க்குமிழியைப் பார்த்தால் அது பல வண்ணங்களுடன் பளபளக்கும்..
அவைதானோ வாழ்க்கையின் இன்பங்கள்!?...
அவை தான்... அவ்வளவு தான்...
அன்பின் துரை செல்வராஜு,
இவ்வளவு சின்ன வயதில் எத்தனை முதிர்ச்சியான வார்த்தைகள். எங்கள் பெரிய மகனுமிப்படியே சொல்வான்.
எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படாதேம்மா.
என்ன நடக்குமோ அது நடக்கட்டும். சமமாகப் பாவித்துக்கொள்
என்பான்.
நன்றி ராஜா. எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருங்கள்.
ஆடி வெள்ளி எல்லா நலங்களையும் வழங்கட்டும்.
நல்லதோர் படத்தை பகிர்ந்துள்ளீர்கள்.பார்க்க முயற்சிக்கிறேன்.
உங்கள் பதிவு, இப்படத்தினைப் பார்க்க வேண்டும் என நினைக்க வைத்திருக்கிறது. தில்லியில் வெளியாக வாய்ப்பில்லை. இணைய வழி கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்.
நல்ல அறிமுகத்திற்கு நன்றி வல்லிம்மா...
Post a Comment