Blog Archive

Wednesday, June 26, 2019

தாயார்..

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும். தாயார்

அன்பின்  உருவாக்கவே எனக்கு சம்பந்தி வாய்த்தார்.
அதிரப்  பேசி நான் பார்த்ததில்லை.
நல்ல வட்ட முகத்தில் குங்குமமும் புன்னகையும் ஆபரணங்கள்.

ஐந்தாறு வருடங்களாகவே  உடல் நலம் சரியில்லை.
அனைத்தையும் வெகு பொறுமையாகப்
பொறுத்துக்க கொண்டவர்.

அவருக்கு வாய்த்த மருமகள்களும் மாமியாரின் அருமை தெரிந்து
அனுகூலமாக நடந்து கொண்டவர்கள்.
அதிலும் முதல் மருமகள்   மஹாலக்ஷ்மியின்
பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்ட
நல்ல பெண்.

மாமனாரின் மதிப்பைப் பெற்ற  மருமகள் .
திருமணமானதிலிருந்து மாமியாரைப் பிரியாதவள்.

அவர்கள் பெற்ற செல்வங்களைபி போற்றி வளர்த்தவர்கள் இந்த மாமியாரும் மாமனாரும்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன் தன கணவர் பிரிந்ததிலிருந்து,
மாமியின் முகத்தில் ஒளி இல்லை.

இருவரும்  அத்தனை ஒற்றுமையான தம்பதி.
மனைவியிடம் அதீதப் பாசம்  வைத்திருந்தார்,
திரு கஸ்தூரி ரங்கன்,.

மூத்த மகனும் மருமகளும் இடைவிடாத அறிய சேவை செய்து பார்த்துக் கொண்டார்கள்.
எங்கள் மாப்பிள்ளை இங்கிருந்து தினமும்  ஸ்கைப் வழியாக அம்மாவிடம் இரண்டு மணி நேரம் செலவழிப்பார்,
இன்னொரு மகன் அடிக்கடி பெங்களூரிலிருந்து வந்து
பார்த்துக் கொள்வார்.
அன்பு மகள் வருடத்துக்கு ஒரு முறையாவது
அமெரிக்காவிலிருந்து போய் அம்மாவுடன் இருந்து விட்டு வருவார்.

இந்த நால்வரின் அன்புத் தாய், சென்னை உஷ்ணத்தில் வயதான காலத்தில்

நிமோனியா வந்த இரு நாட்களில் அவர்கள் குலதெய்வம்
அரங்க நாதன் திருவடி அடைந்தார்.

எல்லாப் புதல்வர்களும் கூடி அம்மாவுக்குச் செய்ய வேண்டிய
கிரியைகளை செய்து வருகிறார்கள்.
என்னுடைய அன்பு சிநேகிதி 
கணவருடன் இறைவனின் திருப்பாதங்களில் மகிழ்ந்திருப்பார்.











19 comments:

KILLERGEE Devakottai said...

அவர்களது ஆன்மா இறைவனின் காலடியில் உறங்கட்டும்.

நெல்லைத்தமிழன் said...

அவங்க படத்தைச் சேர்க்க விட்டுட்டீங்களே

கோமதி அரசு said...

சம்பந்தி அன்பின் வடிவம் என்று தெரிகிறது.
அன்பான உங்களுக்கு வேறு எப்படி அமையும் ! இப்படித்தான் அமையும்.

சம்பந்தி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.
அரங்க நாதன் திருவடியில் மகிழ்ந்து இருப்பார்.

அவர்களின் குணநலன்கள், மற்றும் மருமகள் குணநலன்கள்
படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காணொளி மிக அருமை.

ஸ்ரீராம். said...

அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு தேவகோட்டைஜி.
அன்னையின் இடத்தை இட்டு நிரப்ப முடியாது.
அவரது அமைதிக்கு நாம் பிரார்த்திக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா.
மாப்பிள்ளைக்கோ பெண்ணுக்கோ குடும்ப படங்களை வெளியிடுவதில் விருப்பம் கிடையாது.
அதனால் போடவில்லை.

துரை செல்வராஜூ said...

இனி இறைவன் பார்த்துக் கொள்வான்..
இறைவனின் திருப்பாதங்களில் மகிழ்ந்திருக்கட்டும்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
எனக்காவது கோபம்வரும் . அவருக்குக் கோபம் என்று சொல் கூட வராது. குழந்தைகள் நல்ல வார்த்தையே பேசவேண்டும் என்று நினைப்பார்கள்.

வாத வலியில் மிகச் சிரமப்பட்டார்கள். சுமி அம்மான்னு என் கிட்ட வாத்சல்யம்
அவர் செய்யும் அரிசி உப்புமா, தேங்காய்த் துகையல்
எனக்கு டப்பாவில் கட்டித் தருவார்.
நன்றி கோமதி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஸ்ரீராம். வேதா மாமி இப்போது மாமாவுடன்
நிம்மதியாக இருப்பார்.

Anuprem said...

அவர்கள் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியடைந்து இருக்கும் மா...

எத்தனை அன்பான குடும்பம் ...இவை எல்லாம் அவர்களின் அன்பின் பிரதிபலிப்பு அல்லவா ...

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அன்பானவர் என்று தெரிகிறது. அவர்களின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய எங்களின் பிரார்த்தனைகள். நிச்சயமாக அமைதி அடைந்திருக்கும் அந்த அமைதி ஆத்மா.

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,

மரணம் சில,பல சமயங்களில் விடுதலை தந்து விடுகிறது.
அவருக்கு வலியிலிருந்து விடுபட்ட நிம்மதி கிடைத்திருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அனுப்ரேம்,
கட்டுப்பாடும்,அன்பும் மிகுதி அந்தக் குடும்பத்தில்.
அதுவும் மூத்த மருமகள் அனைவரின் மதிப்பையும் பெற்றவர்.

நன்றி மா. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி ,அன்பு கீதா
இரண்டு வருடங்கள் முன் சென்னையை விட்டுக் கிளம்பும்போது

அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் கிளம்பினேன்.
அப்பொழுதே படுக்கையை விட்டு எழுந்தாலே வலி இருந்தது.

பெண்ணின் பெயரோடு ஒரு அம்மா சேர்த்து என்னை
அழைப்பார்.குறும்பும் ,நகைச்சுவையும் சேர அவர் பேசும் அழகு இனிமை.

அமைதி அடைந்திருப்பார்.நன்றி மா.

Geetha Sambasivam said...

உங்கள் சம்பந்தியின் ஆன்மா நற்கதி அடையட்டும். அம்மாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மனமார்ந்த வருத்தங்கள்! காலம் இந்த துக்கத்திலிருந்து அவர்களை மீட்டு எடுக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. அவர் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்.அவர் வரை இது ஒரு வரம். அவர் பெற்ற மக்களுக்குத் துனம். கட்டாயம் மீண்டு விடுவார்கள். நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

அவரது ஆன்மா எம்பெருமானின் திருப்பாதங்களில் அமைதி அடையட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

மாதேவி said...

இறைவன் பாதங்களில் சாந்தி பெறட்டும்.

வல்லிசிம்ஹன் said...

Dear Venkat,
Dear Maadhevi thank you very much.