Blog Archive

Monday, May 20, 2019

நீண்ட பயணம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்.

உலக வாழ்க்கைப் பயணம் 
நீ ஒப்புக்கொண்ட பயணம் 
அது முடியும் பொது தொடரும் 
தொடரும்போது முடியும்.
இது ஒரு  அவசிய நாடகமே.

19 comments:

KILLERGEE Devakottai said...

வாழ்வின் உண்மைநிலை அம்மா.
நினைவுகள் சங்கீதமாகட்டும்...

ஸ்ரீராம். said...

அது உலக வாழ்க்கை நடனம் இல்லையோ?

ஆமாம், எதற்கு இந்த வரிகள் அம்மா? பயணம்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, ஆமாம் சகித்துக் கொண்டு
கடக்க வேண்டியதுதான்.

You like to live in the past நு உற்றார் சொல்வது காதில் விழுகிறது.
என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அம்மாவின் நினைவு நாள் இன்று. அடுத்து தம்பியின் நினைவு நாள்.
பாட்டில் நடனம் தான் உண்டு.
எனக்கு இது பயணம். ஒப்புக்கொண்டு பயணிக்கணும்னு நினைக்கிறேன் மா.

கோமதி அரசு said...

அம்மா, அப்பா, தம்பிகளின் பழைய படம் மிக அருமை.
அம்மாவுக்கு வணக்கங்கள்.

KANNAA NALAMAA said...

அம்மாவின் நினைவு நாள் !!
நம்மைப்பெற்று சீராட்டி வளர்த்து புகழ்பெறச்செய்து புகழ் பெற்று
சீரும் சிறப்புமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த
அன்பு தெய்வத்தை நினையாத நாளுமுண்டோ !
நினைக்கின்ற நாளெல்லாம் நினைவுநாள்தானே ?
எனினும் அவர்கள் நம்மைவிட்டு இப்புவுலகைவிட்டு மறைந்தநாளை மறக்காமல்
அன்று அவர்களை நினைத்து வழிபடும் அன்பு மகன்களும் போற்றுதற்குரியவர்கள்தானே ??

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு கணபதி,
தங்கள் கருத்து உண்மையே.
அந்த நினைவைச் செய்து வந்த என் தம்பிகளும்
என்னை விட்டுப் பிரிந்தனர்.
அதன் விளைவே இரண்டு வருடங்களாக
இந்தப் பதிவு.

தங்களை வருந்த இதைச் சொல்லவில்லை.

அம்மா இல்லையேடா என்று சொல்லி வருந்த தம்பிகளும் இல்லை.
இணையத்தில் என் மேல் பாசம் வைத்திருக்கும் தம்பிகள் இருக்கின்றனர்.
தங்கைகள் இருக்கின்றனர்.

நீங்களும் சகோதரராக வந்திருக்கிறீர்கள். நன்றி மா. என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி இனிய காலை வணக்கம்.
படங்களில் என்றுமே வாழ்கிறார்கள். நலமுடன் இருங்கள் மா.

கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன் said...

வாழ்க்கையொரு அவசிய நாடகமே...

Geetha Sambasivam said...

படங்களும், பதிவும் அருமை. உங்கள் பெற்றோரும், தம்பிகளும் எங்கிருந்தாலும் வாழ்த்துவார்கள். நலமே விளையட்டும்.

Bhanumathy Venkateswaran said...

வயதாவதில் உள்ள துயரம் நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது. ஆனால் நீங்கள் பகர்ந்திருப்பதை போல இது நாம் ஓப்புக் கொண்ட பயணமாயிற்றே. பயணிப்போம் அன்புடன்.

மாதேவி said...

அவர்களுடன் களித்த இனிய நினைவுகளே மனதிக்கு ஆறுதலாக அமையட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நாடகமே தான் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

உணர வேண்டிய உண்மை அன்பு பூந்தோட்டக் கவிதைக்காரன்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். ,கீதா மா.
காமிராவைக் கண்டு பிடித்தவர்க்கும் புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றியதற்குமெ
நன்றி சொல்லணும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,
நல்லெண்ணங்களை என்னுள் விதைத்து விட்டுத்தான் போயிருக்கிறார்கள்
பெற்றோரும், தம்பிகளும். உடன் பிறந்தான் என்று சொல்லுக்கு ஏற்ற அன்பு இருவரிடமும் அபரிமிதம்.
தங்கள் வார்த்தைகளுக்கு என் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
நாடகம் என்பது புரிய இத்தனை நாட்களானது ராஜா.
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

என் அன்பு மாதேவி,
நன்றி ராஜா. அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
உங்கள் அன்பு இருக்கும் போது எனக்குக் கவலை குறைகிறது அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா படங்கள் சூப்பர் இனிய நினைவுகள் இல்லையா இந்த நினைவுகள் தான் தாலாட்டிச் செல்லும் நாட்கள்.

தங்களுக்காகப் பிரார்த்தனைகளும்..

துளசிதரன், கீதா