எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Sunday, January 13, 2019
ஸ்ரீஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் 29
Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும் .
Add caption
ஸ்ரீஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் 29
இடைச்சியாகத் தன்னை எண்ணியபடியே ஆண்டாள் கண்ணனை விழிக்கிறாள். இன்னும் உங்களுக்கு என்ன எல்லாம் வேண்டும் என்று அவன் இனிமையாகக் கேட்கிறான்.
எங்களுக்கு வேண்டியது உன் திண் சரண் தான்.
அதையே வரித்து வந்திருக்கிறோம். இனி எமக்கு வேண்டியதெல்லாம் உன்னிடம் சரணாகதி அடைவதே.
வேறு பரிசுவேண்டாம். எங்கள் கைங்கரியங்களை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த ஆசைகளும் எங்களுக்கு கிடையாது.
எந்நாளும் , எத்தனை பிறவிகள் எடுத்தபோதும் உனக்கு உற்றவராகவே நாங்கள் இருப்போம். உன் பணிவிடைகளில் எங்கள் பிறவிகள் பூர்த்தியாகும். இந்த வரத்தை அங்கீகரித்து அருள் செய்வாய் கோவிந்தா என்று பூர்த்தி செய்கிறாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை பாடி அருள வல்ல பைவளை யாய், நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி என்ற இம்மாற்றம் யாம் கடவா வண்ணமே நல்கு.
No comments:
Post a Comment