Blog Archive

Saturday, July 14, 2018

1410 இனிக்கும் முதுமை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கிழவன் கிழவி.90 வயதில்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
  வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே
வயதும் கூடிப் போச்சே
வருஷம் ஆனால் என்ன கிழவி
மனசில் திடம் இருக்கே.

சுருக்கம் விழுந்து போச்சே கிழவா
சுருக்கம் விழுந்து போச்சே

  தோளைப் பிடிச்சு நீ
நீவி  விடுகையில் சுருக்கம் ஓடிபோகும்
கிழவி சுருக்கம் ஓடிப் போகும்.

பல்லு கொட்டிப் போச்சே கிழவா
பல்லுக் கொட்டிப் போச்சே.
உணக்கமா நீ கீரை கடைஞ்சு, சோறும்
மசித்துக் கொடுக்கும் போது
பல்லு போனால் என்ன
பொஞ்சாதி நீ இருந்தா போதும்.

காலு தளந்து போச்செ கிழவா
காலு தளந்து போச்சே.
தடியும் கிழவி கையும் இருக்கையில
காலு நடக்கும் தானா கிழவி காலு நடக்கும் தானா.

நானும் படுக்கையில் விழுந்து கிடந்தால்
நீ என்ன செய்யப் போறே கிழவா
நீ  என்ன செய்யப் போறே.
  ஊரு சனம் வேண்டாம்
நீ ஒருத்தி மட்டும் போதும்
நீ படுக்கும் கட்டிலில் நானும்
 படுத்து விடுவேன்.

அதுவரை
 மகிழ்ச்சியா வாழ்வோம்
இந்த நாளை என்றும் ருசிப்போம்.

   #என்றோ தோன்றிய  பாட்டு 




24 comments:

நெல்லைத் தமிழன் said...

இப்படி மகிழ்ச்சியாக சேர்ந்து முதுமையை அனுபவிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். பாட்டு ரசிக்கக்கூடியதாக இருக்கு.

KILLERGEE Devakottai said...

முதுமை இனிப்பதே பிறவிப்பயன் அம்மா.
கவிதை ஸூப்பர் நாட்டுப்புற மெட்டில் பாடினால் நன்றாக வரும்.

Anonymous said...

இப்போதிலிருந்தே ஆரம்பித்தால், இனிமையாக்கி விடலாம்.
முரளி மா.
நேற்றிலிருந்து சசலதிருந்த மனது இப்போது சமாதானமானது.

Anonymous said...

அன்பு தேவகோட்டையாரே.

இது கிராமப் பாட்டுதான். நல்லதம்பி என்று பழைய எனெஸ்கே
படத்தில் வரும் மனுஷனாகிப் போனேன் பாட்டின் மெட்டு இது.
அதற்கேற்றார்ப் போல எழுத்துகளை அமைத்தேன். இன்னும் இருக்கு. நீளம் கருதி

சுருக்கி விட்டேன். மிக நன்றி மா.

Anonymous said...

அன்பு தேவகோட்டையாரே.

இது கிராமப் பாட்டுதான். நல்லதம்பி என்று பழைய எனெஸ்கே
படத்தில் வரும் மனுஷனாகிப் போனேன் பாட்டின் மெட்டு இது.
அதற்கேற்றார்ப் போல எழுத்துகளை அமைத்தேன். இன்னும் இருக்கு. நீளம் கருதி

சுருக்கி விட்டேன். மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

வாவ்! அம்மா அருமையா எழுதியிருக்கீங்க....நாட்டுப்புற பாடல் ஸ்டைலில் செமையா இருக்கு...பாஸிட்டிவா இருக்கு...எல்லோருக்கும் இப்படியான இனிமையான முதுமை கிடைக்கணும் கிடைக்குமா!!?

இப்பத்தான் வெங்கட்ஜி பதிவிலும் இனிமையான முதுமை என்ற பாசிட்டிவ் வரிகளைப் பார்த்துவிட்டு வந்தேன்...

கீதா

ஸ்ரீராம். said...

அருமையா எழுதி இருக்கீங்கம்மா.. கீதா ரெங்கன் பார்த்தால் ஒரு டியூன் போட்டு விடுவார்.

Geetha Sambasivam said...

கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் நினைவில் வந்தார் இந்தப் பாடலைப் படித்ததும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முதுமையை ரசிக்கும் முறை அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி....

நல்ல பாட்டும்மா....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

காமாட்சி said...

மீசை நரைச்சுப்போச்சே கிழவா உனக்கு ஆசைநரைக்கவில்லையே என்று ஆரம்பமாகும் இம்மாதிரி பாட்டு ஞாபகம் வந்தது. வரிகளும் இப்படித்தான் போகும். ஆனால் ஸரியாக ஞாபகம் இல்லை. இரண்டுபேரும் நல்லபடியாகப் போகவேண்டும் என்ற கோரிக்கை கடவுளிடம் வைத்துக் கொண்டே கிழவரும்,கிழவியும் காலந்தள்ளுவார்கள். பாட்டு ரஸிக்கும்படி இருக்கிறது. எங்குதான் பதிவாகிறதோ? நன்றி. அன்புடன்

Bhanumathy Venkateswaran said...

பாட்டு நன்றாக இருக்கிறது. நீங்கள் கட்டியதா?

வெங்கட் நாகராஜ் said...

சோதனை முயற்சியாக மீண்டும் ஒரு பின்னூட்டம்.

கோமதி அரசு said...

அருமையான பாடல்.
தேவகோட்டை ஜி சொன்னது போல் நாட்டுபுற மெட்டில் பாடினால் நன்றாக இருக்கும்.உங்கள் இனிமையான குரலில் பாடி அனுப்பி விடுங்கள்.

vallisimhan said...

test comment

ஸ்ரீராம். said...

அடடே....

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மாதிரி
நாச்சியாரை மீட்ட வல்லிம்மா!

vallisimhan said...

அன்பு கீதா ரங்கன், எல்லோரும் காணும் கனவுதான் மா. இது.

இனிமையும் முதுமையும் கலந்தால் வாழ்வு இனிக்கும். திருமணம்
ஆகும்போது இருக்கும் இனிமை நடுவில் கசக்க சந்தர்ப்பம் உண்டு.
அதை மீண்டும் இனிமையாகக் கிடைப்பதே இந்த முதுமைதான்.

இந்த வரம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நன்றி மா.

vallisimhan said...

அன்பு ஸ்ரீராம், எல்லோருக்கும் இது போல வாய்க்க வேண்டும் என்பதே
என் ஆசை. நன்றி பாராட்டுக்கு.
அனேகமாக அனைவருக்கும் வரும்
தோன்றும் எண்ணங்கள் தானே. ...நாலைந்து நாட்களுக்கு முன் நடக்கப் போகும்போது ஏரிக்கரை பெஞ்சில் வயதான ஆனால் ஆரோக்கியமான தம்பதிகளைப் பார்த்தேன்.
அப்ப வந்த கற்பனைதான் இது.

vallisimhan said...

அதே தான் கீதா. சில நினைவுகள் மறக்க முடியாமல் போவது போல கலைமணி கொத்தமங்கலம் சுப்பு ஐய்யாவையும் மறக்க முடியாது.
அவர் பேரன் ஆனந்த் சுப்பு ,பெரியவனுடன் கல்லூரியில் படித்தான்.
தாத்தா புத்தகங்கள் ஏதாவது படித்திருக்கியாமா என்று கேட்டேன்.

படித்ததில்லை என்று சொல்லிவிட்டான்.
அவர் இருக்கும்போது போய்ப் பார்க்காமல் விட்டோமே
என்று வருத்தப் படுகிறேன் மா. ராதாகிருஷ்ணா சாலையில் தான் வீடு
இருந்தது.
அவர் பெயர் தாங்கிய பலகையும் இருந்தது.

எத்தனையோ நல்ல மனிதர்களைத் தயக்கம் காரணமாக
சந்திக்காமல் விட்டுவிடுகிறோம்.

vallisimhan said...

அன்பு வெங்கட், நீங்களும் ஆதியும்,குழந்தையும்
என்னாளும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
திருச்சிக்குத் திரும்பும் நாள் சீக்கிரமே வரட்டும். மனம் நிறை நன்றி ராஜா.

vallisimhan said...

ஓ. அது வள்ளிதிருமணம் படத்தில் வரும் பாட்டு இல்லையா
காமாட்சி மா.
எத்தனையோ சிரமங்களைத் தாண்டி முதுமை வரும்போது , உடல் தளர்ந்தாலும்
மனம் தளர்வதில்லை.
சேர்ந்திருக்கும் பாக்கியம் சிலருக்கே கிடைக்கிறது.
இந்தக் கற்பனைத்தாத்தா பாட்டியாவது நன்றாக இருக்கட்டும்.
மிக நன்றி காமாட்சிமா.

vallisimhan said...

அன்பு பானு, இந்த எளிமையான வசனப் பாடல்
எனக்குச் சுலபமா வரும். நானும் தம்பிகளும் இந்தப் பாட்டு விளையாட்டுகள்
நிறைய விளையாடுவோம். நன்றி மா.

vallisimhan said...

அன்பு கோமதி. ஓ பாடலாம். நான் மதுரைக்கு வந்து பாடுகிறேன்.

குரல் தளர்ந்துவிட்டது. நிஜமாவே கிழவி பாடுகிறமாதிரி இருக்கும்.
இந்த அன்புக்கு நான் என்ன சொல்ல. மிக மிக நன்றி தங்கச்சி. வாழ்க வளமுடன்.

vallisimhan said...

மிக மிக நன்றி ஸ்ரீராம். நல்ல பட்டமா இருக்கே. தளம் ஒழுங்கா இயங்கணும். அப்பதான் இந்தப் பட்டம் என்னுடன் தங்கும்.