Blog Archive

Friday, July 13, 2018

1409 காசி, கயா,ரிஷிகேஷ்...தொடரும் பயணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 அடுத்த நாளும் வந்தது. முதல் நாள் கங்கையில் குளித்த கையோடு
அன்ன பூர்ணாதேவியின் ஆலயத்தில் வழிபட்டு,
அங்கு வெளியே இருந்த நெருக்கம்
நிறைந்த வீதிகளில் மாடுகளைக் கவனமாகப் பார்த்தபடி

குடும்பத்தாருக்கு வேண்டிய அன்னபூரணி விக்கிரகங்களை வாங்கிக் கொண்டனர்.
கூடவே பெரிய பெரிய கங்கை சொம்புகள். கையில் அன்னம் ப
வழங்கும் கரண்டியும் கண்ணில் ஈடு இணையில்லாத கருணையும் பொங்கும் தேவியைத் தரிசித்தது மன நிறைவைக் கொடுத்தது.
அடுத்தாற்போல் காசி விஸ்வ நாதன் கோவில்.

சொல்ல முடியாத கூட்டம். நடேசன் செய்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருந்தது,
அனைவரும் சுற்றி நிற்க பால் அபிஷேகம் ஸ்வாமிக்கு நடந்து கொண்டிருந்தது.

வட இந்திய வழக்கப்படி  எல்லோரும் தொட்டு மலர்களைத் தூவி
வணங்கிக் கொண்டிருந்தார்கள். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒருவரான
விஸ்வனாத ஸ்வாமி, உலகத்துக்கே நாதராக வழிபடப் படுவதுடன்,
காசியில் வந்து இயற்கை எய்தினவர்களின் காதுகளில்
இறைவன் நாமத்தைச் சொல்லி அவர்களை மோக்ஷப்பாதையில் அனுப்புவதாக
கூட வந்த நடேசன் சொன்னார்.
காசி வழக்கப்படி ஏதாவது இஷ்டமான பொருளை விடவேண்டுமே
என்று வாசு சொல்ல, நாராயணன் நான் வெற்றிலை போடுவதை விட்டு விடுகிறேன் என்றார்.
லக்ஷ்மிமா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த
வஞ்சுமா இது நிஜமா என்று கேட்க
வைத்தியர் அறிவுறுத்தலின்படி அவர் செய்ய வேண்டிய வேலை இது.

வயிற்றில் அல்சர் வந்து இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்
என்று சொன்னபடி  இறைவனை மீண்டும் வணங்கினார் லக்ஷ்மிமா.

இனி ஒரு தொந்தரவும் வராது பாருங்கள் என்று வாசு சொன்னது,
 வஞ்சுமாவுக்குக் கண்ணில்  நீர்.
ஹேய், உனக்கு என்ன ஆச்சு என்றவாறு அணைத்துக் கொண்டார் கணவர்.

வாழ்க்கைதான் எத்தனை மேடு பள்ளங்கள் கொண்டது.
ஏதோ நல்ல டாக்டர் கிடைத்தார். நானும் சுலபமாக
வெளியே வந்தேன்.
இந்தக் காசிப்பயணம் நம் துன்பமெல்லாம் போக்கட்டும்

 என்று அவளும் வணங்கினாள்.
இந்த ஆலயமே ஆறுதடவை இடிக்கப் பட்டிருக்கிறது அம்மா.
ஏழாவது தடவையாக மராத்திய மன்னர் கட்டின கோவில் இது.
நீங்கள் இந்தத் தலபுராணத்தைப் படியுங்கள் என்று கொடுத்தார்.

அன்னபூர்ணா தேவி சிவபிரானுக்கு அன்னம் கொடுத்துக் காசிப் பஞ்சத்தையே
நீக்கிவிட்ட அன்னை.
மஹா புண்ய க்ஷேத்ரம் அம்மா என்று சொன்னவருக்கும்
ஏதோ நினைவு வந்தது போல முகம் சொன்னது.
அவர் இங்கே வந்த கதையைக் கேட்க வேண்டும் என்று நினைத்தபடி
விடுதிக்குத் திரும்பினர் தம்பதியினர். ஸ்ரீ விஸ்னாத ஸ்வாமி சரணம்.
அன்னபூர்ணே சதா பூர்ணே,சங்கர பிராண வல்லபே.
தாயே சரணம். எல்லா வளங்களையும் அள்ளிக் கொடுப்பாய்.
ஸ்ரீ மாதா அன்னபூர்ணேஸ்வரி சரணம் ....
காசி வீதி.

13 comments:

ஸ்ரீராம். said...

நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரி
நிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரி
ப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி !!!

எஸ் பி பி குரலில் மனதில் ஓடிய வரிகள்... நித்ய பாராயண ஸ்லோகங்கள் என்று ஜெயேந்திரர் முன்னுரையுடன் எஸ் பி பி கொடுத்த சங்கீதா கேசெட் வைத்திருந்தேன்!

ஸ்ரீராம். said...

சிலர் தனக்குப் பிடிக்காதவற்றை விடுவதாக வேண்டிக்கொண்டு வருவார்கள்! ஏற்கெனவே அவற்றை அவர்கள் தொடமாட்டார்கள்!

ஸ்ரீராம். said...

மருத்துவருக்கெலாம் மருத்துவர் ஈசனிருக்க, அவர் அருளிருக்க, மருத்துவர் இவர்களை குணப்படுத்தாமலிருப்பாரா?

தொடர்கிறேன் அம்மா.

KILLERGEE Devakottai said...

அழகிய தரிசனம் கண்டேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காசிப்பயணத்தின்போது அன்னபூரணி கோயிலுக்குச் சென்றோம். சிறிய கோயிலாக இருந்தாலும் அழகாக இருந்தது. சந்து நெறிசலில் செல்லவேண்டியிருந்தது.

Geetha Sambasivam said...

காசியில் பிரபலமான எல்லாக் கோயில்களும் சின்னச் சின்ன சந்துகளில் தான் இருக்கும். உள்ளே போனால் பெரிதாக இருக்கும். காசி விஸ்வநாதரைப் பார்க்காமல் திரும்பி இருப்பார் மஹா மஹா மஹா பெரிய நந்தி!:)))) அதன் காரணம் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

சங்கரா தொலைக்காட்சியில் தினம் சாயங்காலம் ஹொரநாடு தங்க அன்னபூரணியைக் காட்டுவதோடு கூடவே ஆரத்தியும் காட்டுகின்றனர். அப்போப் பின்னணியில் அன்னபூர்ணாஷ்டஹம் ஒலிக்கும்.

Anonymous said...

மிக மிக உண்மை ஸ்ரீராம். நம் ஊர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு
பெற்றோருடன் நிறைய போயிருக்கிறேன். அவர்கள் அப்போது திருவான்மியூரில் இருந்தார்கள்.

அப்போதெல்லாம் நிறைய தலைவலி வரும்.
பா ல ஆரம்பிக்கும் மருந்து பெயர் மறந்து விட்டது.

அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டு வேலை
ஆரம்பிப்பேன்.வைத்தியர்னு போனதில்லை..மருந்தீஸ்வரர் தான்
டாக்டர். அழகான ஸ்லொகத்தை எழுதி மீண்டும் அந்த நாட்களை நினைவு செய்கிறீர்கள். சிவானந்த
விஜயலக்ஷ்மி அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பிறகு எம்.எஸ் அம்மா இசைத்தட்டு வந்துவிட்டது.
காசிக்குச் சென்று வருபவர்கள் கொண்டு வரும்
கங்கையும் அன்னபூரணித் தாயும் நிறைய நம் பூஜை அறையில் இருக்கிறார்கள்.

Anonymous said...

அன்பு ஸ்ரீராம் , யாரோ கத்திரிக்காய், கொத்தவரங்காயை விட்டேன் என்றார்கள்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.
பிடித்ததை அல்லவா விடவேண்டும்.

Anonymous said...

ஆமாம் முனைவர் ஐயா. நெருக்கமான தெருக்களுக்குப் பெயர் போனது காசி. மக்களும்
லட்சக் கணக்கில் வருகிறார்கள். காசியும் தாங்குகிறது.

Anonymous said...

காசியை மனக்கண்ணால் பார்த்துக் கொள்கிறேன் கீதாமா.
அத்தனை பாசிடிவ் உணர்ச்சி கிடைத்ததாக அம்மா சொன்னார். அவருக்கு என்றுமே அம்பாள் தரிசனம் மிகப் பிடிக்கும். அதுவும் காமாக்ஷி என்றால்
மிகப் பிரியம்.
நந்தி பகவானைத் திருமால் அம்சம் என்பார்கள் இல்லையா.

யாரிந்த மஹா மஹா நந்தி. சிரமம் இல்லைன்னால் சொல்லுங்கள்.

சங்கரா டிவி கிடைத்தால் சௌகரியம் தான். கொடுப்பினை வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

பெரியவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கப்பெற்றிருப்பார்கள் நிச்சயமாக. அவன் சித்தருக்கெல்லாம் சித்தன் அல்லவா. அருமையான அழகான பயணம். நாங்களும் கூடவே தரிசனம் செய்து வருகிறோம்.

துளசிதரன், கீதா

வெங்கட் நாகராஜ் said...

உத்திரப் பிரதேசத்தின் பல பிரபல இடங்களில் இப்படி நெருக்கமான சந்துகள் தான். விருந்தாவனம் உட்பட....

நல்லதோர் தரிசனம் கிடைத்தது. தொடர்கிறேன்.