எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
திருச்சியில் நாங்கள் இருந்த போது, மாமனாரும் மாமியாரும் ஒரு மாதம் அங்கு தங்க வந்தார்கள்.
அப்போது எனக்கு திடீர் என உடல் நலம் சரியில்லாமல்
போனது.
வந்த இடத்தில் அம்மாவுக்கு வேலை.
அவர் முடிந்ததைச் செய்து பார்த்தார். நீ நிம்மதியாக இரும் நாளைக்குச் சரியாகிவிடும் என்று சஹஸ்ரனாமமும் ஸ்ரீ நரசிம்ஹ அஷடகமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
எப்படியோ நான் தூங்கி விட்டேன்.
நடுராத்திரியில் குழந்தைகள் சாப்பிட்டார்களா தூங்கினார்களா என்று கவலை வந்தது.
சட்டென்று நரசிம்ஹா,நரசிம்ஹா என்ற சப்தம் சுற்றி வருவது போலத் தோன்றியது.
அபரிமிதமான அமைதி என்னைச் சூழ்ந்தது.
மாமியாரைப் பார்த்தேன். அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்தக் கவச மந்திரம் எங்கே இருந்து வந்தது
என்று எனக்குப் புரிந்தது. நாள் முழுவதும் அம்மா சொன்ன நாம ஜபமே
என்னைக் காப்பாற்றி இருக்கிறது. லக்ஷ்மி ந்ருசிம்ஹா என்னை நல்ல இடத்தில் சேர்த்தாய். எப்பொழுதும் எங்களைக் காப்பாய் என்று துதித்துக் கண்களை மூடி உறங்கினேன்.
இந்த ஆழ்ந்த பக்தியை என்னுள் விதைத்த அப்பாவுக்கு, என் மாமியாருக்கும் என்றும் கடன் பட்டிருக்கிறேன்.

8 comments:
நரசிம்ஹா.....
அவன் அருள் என்றும் தொடரட்டும்......
தூங்கும் சமயத்தில் நம் காதில் ஒலிக்கும் சப்தம், இரவு முழுவதும் நம் நினைவுகளில் சுழன்றோடும் என்பது அறிவியல். அதனால்தான் படுப்பதற்கு அரை மணி முன்பு தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிடவேண்டும்.
லக்ஷ்மி நரசிம்ஹர் படத்துக்குப் பதில் நரசிம்ஹர் படம் மட்டும்தானே போட்டுள்ளீர்கள்.
அன்பு வெங்கட், சித்திரா பௌர்மமிக்கு ஊருக்கு வந்துவிடுங்கள்.
வாழ்க வளமுடன்.
அன்பு முரளி , முதலில் ஹீரோ. பிறகு ஹீரோயின்.
உண்மைதான். எங்க மாமியார் அசையாத நம்பிக்கை, உறுதி
இத்தனையும் அவரை ஒரு ஸ்பிரிச்சுவல் லெவலில் எப்பவும் வைத்திருக்கும்.
சிலிர்க்க வைக்கிறது.
உண்மைதான் வல்லிம்மா, நாம் எதை நினைத்து உறங்குகிறோமோ அல்லது நம் மனதில் ஆழ் மனதில் எது ரொம்பவே பதிந்துள்ளதோ அது நமக்குத் தூக்கத்தில் கேட்கும் கனவாய் வரும் என்றும் கனவு பற்றிய அறிவியல் தகவல்கள் சொல்லுகிறதே...நல்லதை நினைப்போம்....நல்ல அனுபவம் அம்மா
கீதா
மிக மிக உண்மை ஸ்ரீராம்.
அவர் போலக் கடவுள் நம்பிக்கை கொண்டவர்
பார்க்க முடியாது. மாமனாருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் வந்துவிட்டது. ஆப்பரேஷன் செய்தே ஆக வேண்டிய நிலை. நல்ல ஆகிருதியோடு இருப்பவர். ஆனால் ஒரு அத்திப் பழம் வாயில் போட்டுக் கொண்டதும் அவர் பட்டபாடு கண்ணால் காண முடியாததாக இருந்தது.
அந்தக்ஷணமே அம்மா உள்ளே வந்து வேண்டிக்கொண்டார். நரசிம்ஹா ,மாமாவுக்கு எது நல்லதோ
அதைச் செய். அவர் கஷ்டப்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்.
அறுவை சிகித்சை முடிந்த ஒரே வாரத்தில் மாமனார் பகவான் திருவடி சேர்ந்தார்.
மிக மிக தைரியசாலி.
அன்பு கீதா,
அதுதான் நடந்தது,. நாள் முழுவதும் நல்லதே நினைக்க
வாழ்வு முழுவதும் நன்மை நடக்கும். அந்த உறுதியை பகவானே அருள வேண்டும்.
Post a Comment