Blog Archive

Saturday, April 21, 2018

1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.

பிடித்த தம்பதிகள்.
Add caption
ஸ்ரீ பெருந்தேவி தாயார்.
உபநிஷத  திருமஞ்சனம்.
 ஸ்ரீ வரதராஜனின் திருக்குளம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
காஞ்சிப் பேரருளாளன்
   அடுத்த வருடம்  2019, அத்தி வரதர் . வெளியில்  வருவார்.
யாருக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறதோ.

12 comments:

ஸ்ரீராம். said...

படங்கள் அருமை அம்மா.

Geetha Sambasivam said...

எல்லாம் அருமை. அத்தி வரதரைப் பார்க்க ஆசை இருக்கு. ஆனால் அந்தக் கூட்டம்! :( இப்போல்லாம் நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது. தொலைக்காட்சியில் காட்டினால் பார்க்கலாம்.
தம்பதிகள் படம் அருமை. நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் சிறப்பு.

அத்தி வரதர் கதை - பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

கோமதி அரசு said...

அத்திவரதர் வரலாறு அருமை.
காஞ்சி உலாவுக்கு நாங்களும் உங்களுடன் வருகிறோம்.

நெல்லைத் தமிழன் said...

அருமை அருமையான தகவல். ப்ராப்தம் இருந்தால் நாங்கள் தரிசிப்போம் (என் மனைவி அப்போவே என் பெண்ணிடம் சொல்லிட்டாளாம். 10 நாட்கள்தானாம் தரிசனம் செய்ய இயலுமாம்)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். காஞ்சிபுரம் பிறகு பலதடவை போய் வந்தோம்.
அந்தப் பயணம் போல் அமையவில்லை.79இல் அத்தி வரதரைப் பார்க்க வந்த கூட்டத்தில் நிற்க இயலவில்லை. பார்க்காமலே வந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
நாம் அந்தக் கூட்டத்திலும் வெய்யிலிலும் நிற்கவே முடியாது.
அத்தனை தூரம் போய்த் தரிசிக்காமல் திரும்பினோம்.
உண்மையே தொலைக்காட்சியில் காண்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டார்களானால்
மிகவும் சந்தோஷம்.

பகவத் விஷயத்தில், சேர்த்து வைத்த பணத்தை வேறு வகையில் செலவழிக்க மாட்டார்.
அவருக்கு இந்தப் பிறந்த நாள் அரிதாக அமர்ந்தது.
எங்களுக்கும் தான். நல்ல உள்ளம் கொண்ட தம்பதியைக் காண நேர்ந்ததும்
நன்மையே.
இப்போதெல்லாம் சொந்தக் காரர்கள் வீட்டுக்குப் போவதே
அரிது.
முதலில் ஹோட்டலில் புக் செய்துவிட்டுத்தான் சென்னையே வருகிறோம்.
கஷ்டமாகத்தான் இருந்தது. இப்பொழுது பழகியும் விட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், , பாட்டி எல்லாம் அந்த நாட்களில் பார்த்திருக்கிறார்கள்.
அந்த உடல் தெம்போ ,உறுதியோ என்னிடம் இல்லை.
இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டியதுதான் மா.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் வரணும் கோமதி. ஒரு மனம் கொண்டவர்கள் சேர்ந்து பயணம் செய்வது
ஒரு பாக்கியமே. அப்படி ஒரு காலம் வரலாம்.வாழ்க வளமுடன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ. த, முன்னாடியே நல்ல வசதி கொண்ட
விடுதியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஒரு நாள் இல்லாவிட்டால் மறு நாள் பார்க்கலாம். காஞ்சீவரத்தில் தெரிந்த பட்டாச்சாரியர் இருந்தாலும் நல்லதுதான்.
உங்கள் கண் வழி நாங்களும் பார்க்கிறோம்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் எல்லாம் அருமையா இருக்கு வல்லிம்மா. அந்தப் பெரியவர்கள் உங்கள் பெற்றோரா வல்லிம்மா? என் வணக்கங்கள்.
கீதா: வல்லிம்மா அபூர்வமா வருவதால் அத்தி வரதரா? படங்களும் அழகா இருக்கு

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன், அவர்கள் திரு, திருமதி வைகுண்டம். அப்பாவின் தோழரும் மனைவியும்.
அன்பு கீதாமா, அவர் அத்திமரத்தால் ஆன பெருமாள்
அதனால் அத்தி வரதர் கண்ணா.