Add caption |
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு
மிக மிக நன்றி.
அடுத்த நாள் காலை காப்பி மண த்தோடு விடிந்தது.
அம்மாவும் அகிலா மாமியும் 4 மணிக்கே எழுந்து , பால் வாங்கி வந்து காப்பி டிகாக்ஷன் இரண்டு பெரிய பில்டரில் போட்டு வைத்திருந்தனர்.
சமயலறை நல்ல விசாலம். பற்பசை வாங்க மறந்த நான் மாமியிடம் உமிக்கரி இருக்கா என்று கேட்டேன். மாமி சிரித்துவிட்டாள்.
கட்டாயம் தரேன் என்று கிணற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். சுற்றிவர நந்தியா வட்டையும், செம்பருத்தியும்,
நித்தியா மல்லியும்.
பல் தேச்சுட்டு இரண்டு குளியலறையில் எது சவுகர்யமோ உபயோகப் படுத்துக்கோ. மஞ்சப் பொடி தீத்திண்டு குளி
. உன் புது சாரி பக்கத்து அறையில் இருக்கு என்று சொன்ன படி உள்ளே விரைந்தார்.
அடே யப்பா இந்த வயசில் மாமி சுறு சுருப்பைப் பாரேன்
என்று எனக்கு ஆச்சர்யம்.
தோய்க்கிற கல்லில் உட்கார்ந்து பல் தேய்த்தேன். சுகானுபவம்.
மாமியின் மருமகள் வருவது தெரிந்தது 28 வயதுதான் இருக்கும். கருவுற்ற அழகு பார்க்க அருமை. அக்கா
உங்களுக்கு இங்க சவுகர்யமா இருக்கா என்று ஆசையுடன் கேட்கும் அபிராமியை ஆசையுடன் பார்த்தேன். நீ கேட்கறதே அழகா இருக்கே. கண்ணா. இந்த ஊரில் இத்தனை சவுகர்யம் நான் எதிர்பார்க்கவில்லை என்றேன்.
எல்லாம் அப்பா பார்த்து பார்த்து செய்தார் அக்கா. அம்மா அப்பாவுக்கு இந்தியன் டாய்லெட், எங்களுக்கு வெஸ்டர்ன்
என்று தனியாகக் காட்டினார்.
மழை நாளில் நனையக் கூடாது என்று மேலே கான்க்ரீட்
போட்டு தளம் போட்டார்.
கிச்சனில் எல்லாம் மாடர்ன்.
பாத்திரங்கள் தேய்க்க, துணி தோய்த்து உலர்த்த ,மடிக்க என்று ஆள் இருக்கு.
அம்மா அப்பா துணிகள் அவர்களே மடியாக உலர்த்திக் கொள்வார்கள்.
அப்பாவுக்கு பூஜை செய்ய அதுதான் தோது .
அம்மாவுக்கு ஊஞ்சல் ஆசை. அதையும் செய்து விட்டார்.
நான் ரொம்பக் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று சொல்லும் அந்தக் குழந்தையைப் பார்த்து நெகிழ்ந்தது.
உங்க பொண்ணுக்கு எப்ப அக்கா கல்யாணம் என்று கேட்டதும் சொன்னேன். சி ஏ பாஸ் பண்ணி வேலை யில் இருக்கிறாள். உயரம் ,அதுக்கேத்த ஆறடி நல்லவனைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றேன் சிரித்தபடி.
காமாக்ஷியையும், காஞ்சிப்பெரியவாளையும் தரிசனம் பண்ணுங்கோக்கா. நல்லது நடக்கும் என்று அந்தப் பெரிய மனுஷி சொன்னாள் .
அக்கா உங்களுக்கு மருதாணி ரொம்பப் பிடிக்கும்னு அம்மா சொன்னார். பறித்து அரைத்துக் கொடுக்கிறேன் என்று எழுந்தாள். இரு நானும் வரேன் என்றபடி நான் எழுத்திருக்க என் தம்பிகளின் மனைவியரும் கலந்து கொண்டனர்.
சமையலறையிலிருந்து, அகிலா மாமியின் குரல் அழைத்தது. சீக்கிரம் கிளம்பனும் வாங்கோ பெண் களா ...
அப்படி இப்படி 10 மணி ஆகிவிட்டது.
முதலில் பெரியவா, அப்புறம் காமாட்சியும் ,வரதனும் .இதுதான் திட்டம்.
எல்லோரும் புதுசு புதுசாகக் கட்டிக்க கொண்டு
காஞ்சி மடத்துக்கு விரைந்தோம்.
நல்ல கூட்டம்.
பொறுமையாகக் காத்து. மஹா பெரியவரின் முன் நின்றபோது அம்மாவின் கண்ணில் நீர்.
எல்லாம் நன்னா நடக்கும். நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும். அஞ்ஞானத்தைவிட்டு விடு. என்று பொதுவாகச் சொன்னார்.
இந்த அம்மா எப்பவும் இப்படித்தான்.
வைகுண்டம் மாமாவையும் அப்பாவையும் பார்த்து, நீ திருக்குறுங்குடி,அவன் வைகுண்டம் சரியான ஜோடிதான் என்றார்.
பழங்கள் பெற்று அதீதமான நிம்மதியுடன் வந்தோம்.
எடுத்துக் காமாட்சியின் கடைக்கண் தரிசனம் பெற்றுக் கொண்டு அப்பா வெளியே வந்ததும் வண்டியில் ஏசி போடச்சொல்லி உட்கார்ந்துவிட்டார். மாமா,நான்,அம்மா கூடேவே இருந்தோம். அப்பாவுக்கு சீக்கிரம் தள்ளாமை வந்துவிடும்.
மற்றவர்கள் வரதராஜப் பெருமாளை சேவிக்க விரைந்தனர். நல்ல தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் வந்த பொது ஒரு மணி ஆகி இருந்தது.
அம்மாவும் மாமியும் புது அரக்கு சுங்கிடியில் வெகு அழகாக இருந்தார்கள்.
மாமியே ஆரம்பித்தார். உங்க எல்லோருக்கும் வத்தக் குழம்பு சாதம் கலந்து விட்டேன். தயிர் சாதம் , மோர் எல்லாம் உங்கள் பாத்திரங்களிலேயே வைத்தாச்சு. தனியாக கருவடாம் பொரி த்து வைத்திருக்கிறேன்.
எல்லாம் சுந்தாவும் அபிராமியும் செய்தார்கள். அ கத்துக்கு வந்து ஒரு வாய் தூத்தம் சாப்பிட்டு வீட்டுக் கிளம்புங்கள்
.
அபிராமிக்கு சீமந்தப் புடவை எடுக்க தி.நகர் தான் வருவோம்
என்று ஆவலுடன் சொன்னார்.
அம்மா அகிலாமாமியின் கைகளோடு அனைத்துக் கொண்டார்.
மீண்டும் வீட்டுக்கு வந்து மறக்காமல் மருதாணியை எடுத்துக் கொண்டு,
அபிராமியை அழைத்து, தான் காமாட்சி கோவில் கடையில் வாங்கின வளை களையும், காமாக்ஷி ,பெரியவா சேர்ந்திருக்கும் படத்தையும் கொடுத்தார்.
சென்னைக்கு வா உங்களை அங்கேயே வைத்துக் கொண்டு விடுவேன் என்று சொன்னார்.
அச்சோ
Add caption |
அந்தப் பெண்.
சுபம்.
18 comments:
இனிய நினைவுகள் அம்மா. சகல வசதிகளையும் அந்த வீட்டில் செய்து கொடுத்திருந்த அந்த நல்ல மனிதர் அசத்துகிறார்.
அந்த மாமா, இஞ்சினீரிங்க் என்ற டிப்ளமோ வாங்கி இருந்தார். பிறகுதான் தபால் துறையில் சேர்ந்தார். நல்ல உயரமும்,களையான முகமுமாக இருப்பார். ஸ்ரீராம். சிங்கத்துக்கு அவரை
ரொம்பப் பிடித்து விட்டது.
ஒரு பழைய வீட்டைப் பக்காவாக மாற்றி விட்டிருந்தார்.
வாசலில் திண்ணைக்கு அழி போட்டு அதை ஒரு வரவேற்பறையாக
மாற்றி இருந்தார். பச்சி வர்ண மூங்கில் தட்டிகள் தொங்க விட்டு வெய்யிலே தெரியாமல் இருந்தது
இனிமையான பயணம். எத்தனை நல்ல மனிதர்கள் நம்மைச் சுற்றி.... நாங்களும் உங்களுடன் வந்த உணர்வு. நன்றிம்மா.
அந்தக் காலத்து வீடுகளின் கூடம், தாழ்வாரம், ரேழி உள், சமையலுள், எல்லாமும் வேலை செய்யும்போது களைப்பே தெரியாவண்ணம் கட்டப்பட்டிருக்கும். அத்தகைய தொழில் நுட்பம் இப்போல்லாம் எங்கே? கூடத்தில் படுத்தால் சுகமோ சுகம்! வெறுந்தரையில் படுக்கும்போதே சில்லென்றிருக்கும். வாசல் திண்ணையில் உட்கார்ந்தால் கேட்கவே வேண்டாம்.
அருமையான நினைவலைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பெரியவாள் ஆசீர்வாதங்கள் எப்போதும் துணை நிற்கும்.
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
உங்கள் நினைவுகளில் நானும் பயணம் செய்தேன் அருமை.
பழைய நினைவுகள் என்றும் இனிமை.
நினைவுகள் மிகவும் ரசமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதியிருக்கலாமோ? அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள். அருமை.
உண்மைதான். அப்பாவை அறிந்தவர்கள் அனைவரும்
நல்ல குணம் படைத்தவர்கள்.
அப்பா, கடை நிலை ஊழியரைக்கூட அனாவசியமாக வேலை வாங்க மாட்டார்.
எப்பொழுதும் நல்ல வார்த்தைகளே சொல்வார்.
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் அந்த விஷயத்தில்.
The above comment is for Venkat.thank you ma.
ஆமாம் கீதா.
திண்டுக்கல் வரை நாங்கள் இருந்த பழைய வீடுகளில்
வாசல் கதவைத் திறந்து பின் கட்டின் அழிக்கதவை சார்த்திவிட்டால் போதும். காற்று
வீடு முழுக்கப் பரவும்.
மேல் கூரை உயரமாக இருப்பதால் உஷ்ணமும் தெரியாது.
இப்போது மின்சார வாரியத்துக்கு அள்ளிக் கொடுப்பத்ற்கே
நம் வீடுகள் கட்டப் படுகின்றன,.
வாசல் கதவைத் திறந்து வைக்கும் பழக்கமும் போய் விட்டது.காற்றைத் தவிர
மற்றவர்களும் வர வழியாகிறதே.
இனி இந்த வீடுகளை நாம் தக்ஷின் சித்ராவில் தான் பார்க்க வேண்டும்.
வாழ்க வளமுடன் கோமதி.
மறக்கக் கூடாது என்றே இந்தப் பதிவுகளை எழுதினேன்.
கூடவே பயணித்ததற்கு மிக நன்றி மா.
அன்பு முரளி,
நடந்ததை எழுதிவிட்டேன். இதே போல் திருப்பதி போன போதும் அப்பா
புடவை வாங்கிக் கொடுத்தார். 1995 கடைசி பயணம்.
வைகுண்டம் மாமாவீட்டிலிருந்து கிளம்பி நேரே சென்னை வந்துவிட்டோம்.
மற்ற கோவில்களுக்குப் போகவில்லை.
அதனால் எழுதவும் ஒன்றும் இல்லை மா. கூடவே வந்து படித்ததற்கு மிக நன்றி.மா.
இனிமையானப் பயணங்கள் தொடரட்டும் சகோதரியாரே
வல்லிம்மா... அப்போது வசித்த இடங்களுக்கு இப்போது சென்றால், இந்த இடத்திலா வாழ்ந்தோம், அவ்வளவாக சவுகரியம் இல்லாத, போதுமான அளவு ஸ்பேஸ் இல்லாத இடமே.. இங்கு வாழ்ந்த வாழ்க்கையா நமக்கு அவ்வளவு சந்தோஷத்தையும் நெடுங்கால நினைவையும் கொடுத்தது என்று உங்களுக்குத் தோன்றியிருக்கா?
நன்றி ஜெயக்குமார்.தங்கள் வருகைக்கு மிக நன்றி
அன்பு முரளி,
இப்பொழுது எங்கள் வீடுகூட அவ்வவு பெரிதில்லை.
நீங்கள் மைலாப்பூர் பக்கம் போனால் பார்க்கலாம்.ஸ்ரீராம் வெங்கட், கௌதம் சார்
எல்லாம் வந்திருக்கிறார்கள்.
என் திருமணத்துக்கு முன் இருந்த வீடுகள் எல்லாம் தபால் அலுவலகக் கட்டிடங்கள்.
நல்ல வசதியாக இருந்தாலும்
சிறிதும் பெரிதுமாகத் தான் இருந்தன.
என்னுடைய ஐம்பதாவது வயதில் அந்த வீட்டைப் பார்க்கும் போது மிகச் சிறிய வீடாகத் தோன்றியது.
அம்மா அப்பாவின் அன்பு, நாம் சிறிய வயதில் அதற்கேற்ற
உருவத்தோடு அவைகளைப் பார்க்கையில்
அவை பெரிதாகத் தெரிந்திருக்கின்றன.
வீட்டின் சௌகர்யம் மனதைப் பொறுத்ததே என்பதுதான் உறுதி,.
அம்மாவின் அம்மா புரசவாக்கத்தில் ஒரு பெரிய காம்பவுண்டுக்குள்
பத்து தனித்தனி வீடுகளாக இருந்த அமைப்பில் இருந்தார்.
வாசலில் இரண்டு அறைகள்.
ஒரு கூடம்,ஒரு சமையலறை.
அந்தவீட்டில் நாங்கள் நாலு குழந்தைகள் பிறந்தோம்.
மாமாக்கள் நாலு பேர். பாட்டியைத் தேடி வரும் ஊர்க்காரர்கள் என்று
நிறைவாகவே இருந்தோம். ஒரு மாமாவின் ஸ்ரீமந்தம், குழந்தைகளின் அப்த பூர்த்தி எல்லாமே நடந்தது. மனதளவே சௌகர்யம்,
துளசிதரன்: காஞ்சியில் அதுவும் அப்போதைய வருடங்களில் நல்ல வசதிதான் நீங்கள் தங்கிய்ருந்த வீட்டில் இல்லையா?. நல்ல இனிமையான பயணம் இல்லையா…
கீதா: வல்லிம்மா தோய்க்கற கல்லில் அமர்ந்து பல் தேய்ப்பது அந்தக் காலத்து வீடு என்பது எல்லாம் எனக்கும் என் கிராமத்து நினைவுகள்….எனக்கு அப்போதையது போல வீட்டில் வசிக்கணும்னு ஆசையும் உண்டு….முற்றம் தாழ்வாரம் என்று 2 கட்டு வீடாக இருந்தால் போதும்…இப்பவும் கேரளத்து வீடுகளில் அப்படிப் பார்த்ததுண்டு.
சாப்பாடு மணக்குது வல்லிம்மா….காஞ்சிப்பெரியவா தரிசனம் நல்லதாக அமைந்தது போல…இனிய நினைவுகள் இனிய பயணம்…அம்மா.
அன்பு துளசி,
அந்தக் காலத்தில்தான் இது முடிந்தது.
அந்தப் பெரியவரின் முயற்சியில் பழைய வீடு புதுமை பெற்றது.
படத்தில் இருப்பது அந்தத் தம்பதிகள் தான்.
அன்பு கீதா,
இப்பொழுது ஒருவருடனும் தொடர்பு இல்லை. சின்னத்தம்பி இருக்கும் வரை அடிக்கடி
காஞ்சிபுரம் போய் வருவான். அவர்களும் வரப் போக இருந்தார்கள்.
இப்போது அவர்களும், அம்மா அப்பாவும் இறைவனடி சேர்ந்ததால்
கால நிலை மாறி விட்டது. அந்தப் பாசம் நேசம் எல்லாம் இப்பவும் நம் எங்கள் ப்ளாக் ல இருக்கு. இல்லையா.
Post a Comment