எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே |
அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி.
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி.
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏறிப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணன் நடந்து வந்ததை பார்த்த பாவைகளுக்கு
ஆஹா இந்தச் செந்தாமரைப் பாதங்கள் நடந்தது போதாதா.
நமக்காக வேறு நடந்துவிட்டானே என்று ஆதங்கம் தோன்றிவிட்டதாம்.
உடனே கோதை அந்தப் பாதங்களுக்கு மங்களாசாசனம் செய்யும் முறையாகப் போற்றி சொல்ல ஆரம்பிக்கிறாள்.
முதலில் வாமன் திரிவிக்கிரம அவதாரத்தை போற்றுகிறாள்.
இரண்டாவது அயோத்தியிலிருந்து தென்னிலங்கை வரை நடந்த இராமன் பாதங்களை போற்றுகிறாள்.
அந்த ராமனாவது வளர்ந்த பிறகு நடந்தான் இந்தக் கண்ணன் குழந்தையாக இருக்கும்போதே சகடாசுரனை உதைத்தவன் ஆயிற்றே என்று கேசவனைப் போற்றுகிறாள்.
இரண்டு அசுரர்களை ஒரே நொடியில் ஒழித்தவன்.
ஏழு வயதுக்கு குழந்தையாக இருந்த பொது
கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து தன மக்களைக் காத்தவனைப் போற்றுகிறாள்.
இத்தனை திறலுக்கும் காரணமான உன் கையில் இருக்கும் வேலுக்கும் போற்றி போற்றி என்று வணங்குகிறாள்.
உன் வீர தீர பராக்கிரமங்களை பாடவே நாங்கள்
வந்திருக்கிறோம்.
நீ அருள் செய் என்றும் இறைஞ்சுகிறாள்.
நாமும் கோவிந்தனைப் பாடுவோம்.
3 comments:
ஓங்கி உலகளந்த அந்த கோவிந்தன் நாமம் போற்றுவோம்.
நாமும் பாடுவோம், இறையருள் பெறுவோம்.
கண்ணனின் பொற்பாதங்கள் பணிவோம்....
நல்லதொரு பாசுரமும் விளக்கமும் அம்மா...
Post a Comment