எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏற்ற கலங்கள், எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற, சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே*
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் .
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
நந்தகோபன் வீட்டுப் பசுக்கள் அழகைச் சொல்லி முடியாதாம். ஆயர்பாடியில் அத்தனை பசுக்களுக்கும்
கண்ணனின் தொடு சம்பந்தம் இருப்பதால்
அவன் குணங்கள் அத்தனையும் பெற்ற வள்ளல் தன்மை
கொண்டனவாம்.
அவன் தன் அடியார்க்கு அடிபணிவது போலவே
அந்தப் பசுக்களும் நிறைந்த பால் சுரக்கும் மடிகளோடு
எடுக்க எடுக்க சுரந்து கொண்டே இருக்கிறனவாம்.
பாத்திரங்கள் கொள்ளாமல் எதிர்த்து வரும் வெண்மை
வஞ்சமில்லாத நெஞ்சத்தைக் காண்பிக்கிறதாம்.
அப்படிப்பட்ட உன் மாளிகையின் வாசலில்
நாங்கள் காத்திருக்கிறோம்.நப்பின்னைப் பிராட்டியும்
உன்னைப் போற்றிப் பாட,எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.
இன்னும் துயிலெழாதது போல நீ நடிப்பது நல்லதில்லை.
உலகின் பெரும் ஒளியல்லவா நீ.
உன்னிடம் தோல்வியுற்ற அரசர்கள் உன் அடிகளைச்
சரணடைவது போல் இப்போது நாங்கள் உன்னைச் சரண் புகுந்தோம்.
விரைந்து வந்து அருள் புரிவாய் என்று சேவிக்கின்றனர்.
4 comments:
__/\__
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
மனதிற்கு இதமான பாடல் அடிகள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.....!
நன்றிம்மா
Post a Comment