Blog Archive

Wednesday, January 03, 2018

மார்கழிப் பாவை 19 ஆம் நாள் பாசுர நாயகி நப்பின்னை.


Add caption
Nappinnai Piratti
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
திருப்பாவை தனியன்கள்
அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
நாங் கடவா வண்ணமே நல்கு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்.
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
 குவலயா பீடம் என்ற அசுர யானையை வென்று அதன் நான்கு
தந்தங்களையும் கொண்டு வந்த கண்ணன் செய்த
கோட்டுக்கால் கட்டிலில் மெத்தென்ற பஞ்ச சயனத்தில்
உறங்கும் கண்ணன் நப்பின்னையுடன் அணைத்தவாறு படுத்திருக்கையில்
கோதையின் பாசுரம் ஒலிக்க, தானே அருளவேண்டும் என்று
நப்பின்னைப் பிராட்டி எழும்ப,
இல்லை நானே செல்வேன் என்று கண்ணன்
விலக்க,
அவனை மைபூசிய கண்ணால்  கட்டுப் படுத்துகிறாளாம்
பிராட்டி.
இதை அறிந்த கோதை பிணக்கம் கொள்ளாமல்
வந்து கதவைத் திறக்க வேண்டும் என்று
இறைஞ்சுகிறாள் ஆண்டாள். திறக்காமல் இருந்தால் அது தத்துவம் அன்று தகவும் அன்று
என்றும் உறுதியாகச் சொல்கிறாள்.

10 comments:

ஸ்ரீராம். said...


அருமையான பாசுரம் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

தொடரட்டும் பாசுரங்கள்.

Anuprem said...

ஆண்டாள் திருவடிகளே சரணம்...



முடியும் போது இங்கு வந்து பாருங்க அம்மா....
https://anu-rainydrop.blogspot.in/2018/01/19.html

பாவை பாடல்களுடன் ...ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவையும்..

நெல்லைத் தமிழன் said...

உங்கள் இடுகை, அன்றைய திருப்பாவையை மீண்டும் நினைவுபடுத்துகிறது. நன்றி.

பல்பதியம் பாடினாள். இன்னிசையால் நற்பாமாலை, - இதை அர்த்தம் என்று எடுத்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால், பன்னுதிருப்பாவை பல்பதியம், இன்னிசையால் பாடினாள் நற்பாமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்லு என வரவேண்டும்.


பைவளையாய். நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி - பல் வளையாள், நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி

Thulasidharan V Thillaiakathu said...

பாடலும் பொருளும் அறிந்தோம்...இன்னும் சில நாட்களில் மார்கழியும் முடியப் போகிறது ஓடுகிறது நாட்கள்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், மிக நன்றி மா.
சொல்லிப் பழக்கமானதை எழுதி விட்டேன்.

தவறான மனப்பாடம்.

ஆதிகேசவன் கோவில்
ஒலிப்பதிவை மீண்டும் கேட்டுத் திருத்திவிட்டேன்.
நல்ல வேளை மிகப் பிழையாய்ப் போயிருக்கும்.
குளிரும் ,தலைவலியும்
பாவைக்குப் பிழை செய்ய இருந்தன. பாவை சொல்ல வேண்டும் என்கிற தாகம் மட்டும் அடங்கவில்லை. இனி கவனமாக இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா,
மார்கழி விளக்குகள் வாசலை அலங்கரிக்கும் நாட்கள்
முடியப் போகின்றன.
நாம் தினமும் சொல்லிப் பயன் பெறலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், தொடர்ந்து படிப்பதற்கு ரொம்ப நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு, வெங்கட்,

தொடர்ந்து நல் வார்த்தை சொல்வது மிக இனிமை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா,
கட்டாயம் சென்று பார்க்கிறேன்.
அரங்கனைப் பார்ப்பதில் உள்ள சந்தோஷம் வேறு எதில் இருக்கிறது.