Thursday, November 30, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


தஞ்சாவூர்ப் பயணமும் வெள்ளமும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அம்மா போட்மெயில் ஏறியதும் எனக்கு வேணும்கிற புத்திமதிகளைச் சொல்லி
வண்டியும் கிளம்பியது.
அப்போது அம்மாவோட அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. உதவிக்கு
அம்மா சென்றார்.
கும்பகோணம் தாண்டி ரயில் மெதுவாகச் செல்ல ஆரம்பித்ததாம்.
தஞ்சாவூர்,திருச்சி அரியலூர் என்று வந்ததும் வண்டி
தண்டவாளத்திலியே நின்று விட்டதாம். தண்டவாளமெல்லாம்
தண்ணீர்.
குடும்பத்தை விட்டுத் தனியாக மாட்டிக் கொண்டோமே.
இந்த இரவு சரியாகக் கழிய வேண்டுமே ,கையில் ,திருமணத்துக்குக்
கொண்டு வந்த நகைகள்,புடவைகள்.
இப்போது நினைத்தாலும் அம்மாவை நினைத்துக் கலக்கம் வருகிறது.
காட்டாற்று வேகத்தில் வண்டியே ஆடியது போல இருந்ததாம்.
அந்த வண்டியைச் செலுத்திய எஞ்சின் ட்ரைவருக்கு எல்லோரும்
மனமார நன்றி சொல்லுகிறபடி அவர் திருச்சி கொண்டுவந்து சேர்த்தாராம்.
மறு நாள் சென்னையை அடைய காலை பத்து மணிக்குப் போய்ச் சேர்ந்ததாம் வண்டி.
நாங்கள் அதற்குள் திண்டுக்கல் வந்துவிட்டோம். அப்பா ஆபீசில் மாமா கொடுத்த
தந்தி வந்திருந்தது.
அம்மா இரண்டு மூன்று நாட்கள் கழித்து வந்தார்.
இனிமேல் நீங்க எல்லாம் இல்லாமல் நான் வெளியே
போக மாட்டேன் என்று டிக்ளரேஷன்.
எனக்கெல்லாம் மிக சந்தோஷம். இரண்டாவது மாமாவுக்குப் பெண் வேறு பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.
எல்லாம் நல்ல படியானால் சித்திரையில் திருமணம் என்று சொன்னதும்
பாட்டியிலிருந்து எல்லோருக்கும் மன நிறைவு.
இந்த சமயத்தில் தான் பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா, பாசமலர்,
கல்யாணியின் கணவன் ,படங்கள் பார்த்தோம். தியேட்டர் சோலைஹால் என்று நினைக்கிறேன்.
பதினோராம் வகுப்பும் வந்தாchchu.. அப்பாவுக்கு பசார் அலுவலகத்துக்கு மாற்றல். தனி ஆபீஸ், ஆபீஸோட ,சேர்ந்த அலுவலகம். பக்கத்திலியே சக்தி தியேட்டர்.....திண்டுக்கல் கோடை ரோடில் இந்த அலுவலகம் இருந்தது. மீண்டும் பார்க்கலாம்..

12 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல நினைவுகள் தொடர்கிறோம் அம்மா

கீதா: வல்லிம்மா இன்று இங்கு மழை புயல் என்பதால் அந்த நினைவு வந்துவிட்டதோ?!! உங்கள் அம்மாவுக்கு அப்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்திருக்கும் இல்லையா...நான் கூட ஒரு முறை இப்படித் தனியாக (பெரும்பாலும் என் பயணம் தனியாகத்தான் இருக்கும்) பயணம் செய்த போது புயல் மழையில் மாட்டிக் கொண்டு ரயில் மெதுவாக மெதுவாக பல மணி நேரங்கள் தாமதமாகப் போய்ச் சேர்ந்தது...நல்ல நினைவுகள் தொடர்கிறோம்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
அங்கே கன்யாகுமரியில் மழை என்று தினசரியில் படித்தேன். இது அந்த நிகழ்ச்சியின் தொடர் தான் மா.
மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து
வைத்துக்கொள்கிறேன். நீங்களுமா. தவிப்பாக இருந்திருக்கும் இல்லையா.

மறக்காமல் வந்து கருத்து சொல்வதற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் அம்மா.

Angelin said...

அழகான நினைவுகள் வல்லிம்மா ..எங்க அம்மா கூட தனியே எங்கேயும் போனதில்லை .
மழை வெள்ளம் இரயில் பயணம் நம்ம ஊரில் ரொம்ப கஷ்டம் பாவம் எவ்ளோ பயந்திருப்பாங்க அம்மா

கோமதி அரசு said...

இது போன்ற இடர் சமயத்தில் தனித்து வரக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும் தான்.

அம்மாவின் பயம் குழந்தைகள், கணவரை விட்டு வந்து இருக்கிறோமே நமக்கு ஏதாவது ஆனால் என்ற பயம் தான் இருந்து இருக்கும்.

ஸ்ரீராம். said...

​அப்போது இருந்த சக்தி தியேட்டர் வேறோ? இப்போது சிம்மக்கல் அருகில் அல்லவா இருக்கிறது?

த்ரில்லான அனுபவங்கள்.​

Geetha Sambasivam said...

ம்ம்ம் நாங்க நிறைய இப்படிப்புயல், வெள்ளத்தில் ரயிலில் மாட்டிக் கொண்டிருக்கோம். முதல் முதல் எங்க பெண்ணை 45 நாள் குழந்தையா இருக்கிறச்சே சென்னைக்கு என்னைக் கொண்டுவிட அப்பாவும், அம்மாவும் உடன் வரப் பயணம் செய்தப்போ! சனிக்கிழமை காலை மதுரையில் ரயில் ஏறி ஞாயிறன்று மாலை சென்னை சென்ட்ரலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அதை எல்லாம் பதிவாக்கி இருக்கேன். அப்புறமா முதல் முதல் மும்பைப் பயணம்! இப்படி நிறையவே உண்டு!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான், ஏஞ்சல், அம்மாவுக்குத் தன்னைப் பத்திக் கவலை அதிகம் இல்லை. புடவைகள் நகைகள் எங்களிடம் கொடுத்திருந்தால் என் திருமணத்துக்கு உபயோகம் ஆகி இருக்குமே என்ற வருத்தம். தூய தாய். கடைசியில் எல்லாவற்றையும் கொடுத்தாள் என் திருமணத்துக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி ,
அம்மாவுக்குத் தன் சம்சாரம் பற்றிய கவலை எப்பொழுதும்.

சீக்கிரம் பயந்து விடுவார். ஆனால் திடமாக முடிவெடுப்பார்.
இனிய அம்மாக்களால் தான் உலகம் சுற்றுகிறது.
அவளே அச்சாணி.

வல்லிசிம்ஹன் said...

இது திண்டுக்கல் ஸ்ரீராம்.
சிம்மக்கல் எனக்குப் பிடித்த இடம்.
சக்தி தியேட்டர் கோடை,பழனிக்குப் போகும் சாலையில் இருந்தது. நடந்து போவோம். Yes no occasion went by without some thrill hahaha.Thank you Raja.

வல்லிசிம்ஹன் said...

நன்றாக நினைவிருக்கு கீதா.
என்ன ஒரு சிரமம். அதுவும் கைக்குழந்தையோட.
ஏதோ பகவான் நம்முடன் இருந்தார்.
திட மனசு தாண்டி வந்தோம்.

பூ விழி said...

திரிலிங்க இருக்கு படிக்கும் எங்களுக்கு ஆனா அவங்களுக்கு பயமாய் இருந்திருக்கும்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பூவிழி. அம்மா கலங்கித்தான் போனார்.பாவம்.