Blog Archive

Friday, October 13, 2017

#பயணங்கள், பயணம் ஆரம்பம்

Mahendra malai
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பழைய ...பயணங்கள் 1957
+++++++++++++++++++++++++++++++++++++++
 திருமதி துளசி கோபாலின் பயணக் கட்டுரைகள் Thulasidhalam
Add caption
வலை உலகப் பிரசித்தி பெற்றவை.
அவர் இன்று பதிந்திருந்த திருக்குறுங்குடியைப் பற்றிய
எழுத்துகள்
என்னை ,தாத்தா,பாட்டி, சின்னப்பாட்டிகள் காலத்துக்குத் தள்ளிவிட்டன.
தாத்தாவும், பாட்டியும் பிறந்த ஊர் திருக்குறுங்குடி.
பாட்டியின் தந்தை விவசாயம் செய்த ஊர்.
பாட்டி தாத்தா இருவரும் அத்தை, மாமன் மக்கள்.
அப்பாவும், அவர் அக்காக்கள், தம்பிகள் விளையாடிய ஊர்.

இந்தப் பழைய பயணம் நடந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அப்பொழுது தாத்தாவுக்கும், அவர் மைத்துனருக்குமாக வீடு பாகம் பிரிக்கப் பட்டு
இரண்டு கிணறு இரு வாசல்கள் என்று இருந்தாலும்
ஒற்றுமையாக உறவு கொண்டாடிய  காலம்.

அந்தப் பக்கத்து வீட்டு உறவு என் மாமியார் ஆனதும் இன்னோரு கதை.

திருக்குறுங்குடிக்குப் போக முடிவு செய்த அடுத்த நொடி
 திட்டங்கள் விரிந்தன.
தாத்தாவின் சித்தப்பா பெண் மதுரை T.V . சுந்தரம் அய்யங்காரின் மனைவி.
 அதனால் பயணத்துக்கான வண்டி தயார்.
ஒரு வெள்ளை வர்ணக் கப்பல் போன்ற வண்டி முதல் நாள் இரவே வந்துவிட்டது.
 தாத்தாவின் விருப்பப்படி நாங்களும் திருமங்களத்திலிருந்து வந்து விட்டோம்.
 சின்ன சித்தப்பா, அவர் மனைவி, குழந்தை,என்று கிட்டத்தட்ட பத்துப் பேர் அந்த வண்டியில் பயணம் செய்தோம்.
நவ திருப்பதிகள் போய்வர திட்டம்.
 மதுரையின் காலைப் பொழுதுகள் எப்பொழுதும் இனிமை.
பாட்டியின் கைவண்ண இட்லிகளும் ,தோசைகளும்,
 புளியோதரை, தயிர்சாதங்களும்.
 செய்தவண்ணம் அந்தந்த பாத்திரங்களில் வாழையிலையால் மூடிக் கட்டப்பட்டு, சலங்கை குலுங்கும்  குடங்களில் ,தண்ணீர் சேகரிக்கப் பட்டு, ஒரு நல்ல காலையில் கிளம்பினோம்.
வாழ்க வளமுடன்.

14 comments:

ஸ்ரீராம். said...

தொடருமா? பயணங்களும், பயணங்கள் பற்றிய நினைவுகளும் எப்போதும் இனிமையானவைதானே?

வல்லிசிம்ஹன் said...

தொடரத்தான் ஆரம்பித்தேன் ஸ்ரீராம். ஒன்பது வயதில் புத்தியில்
பதிந்தது, குதுகலமும் ,காலைத் தென்றலும், அம்மாவின் அருகாமையும், பாட்டியின் சுவையான கதைகளும். நன்றி மா. பார்த்த இடங்கள் சில. கோவில்களும் அதில் அடக்கம்.
நினைவுக்கு வந்ததை எழுதுகிறேன் ராஜா.

நெல்லைத் தமிழன் said...

திருக்குறுங்குடியைப் பற்றிப் படித்தபோது உங்கள் தினைவும் வந்தது வல்லிம்மா. பயணத்தில் இணைகிறேன்.

சலங்கை குலுங்கும் குடம் - என் அம்மாவிடம் எவர்சில்வர் குடம் கல்யாணமான காலத்திலிருந்து இருந்தது. அதன் வாய்ப்பகுதியின் உள், மணிகள் போட்டிருக்கும் என நினைக்கிறேன். அந்தக் குடத்தை எடுக்கும்போது கல கல வென மணிச்சத்தம் கேட்கும். அத்தகைய குடத்தைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் (அம்மா திருமணம் 62ல்)

கோமதி அரசு said...

அருமையான பயணத் தொடர்.
சிறுவயதில் பயணம் என்றாலே குதுகலம் தான்.
அதுவும் பாட்டியின் சுவையான கதை என்றால் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன், நீங்கள் குறிப்பிட்டதைப் பார்த்தேன்.
ரொம்ப நன்றி மா.
பாட்டி குடம் பித்தளையிலானது.
என் கல்யாணத்துக்கு சலங்கை எவர்சில்வர் குடம் சீர்.
எங்க திருமணம் 66.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, மிக நல்ல பயணம் அம்மா.
பழங்கானத்ததிலிருந்து திரு நெல்வேலி போனோம்.

Geetha Sambasivam said...

பயணம் தொடரக் காத்திருக்கேன். எனக்கும் எவர்சில்வர்க் குடம் சலங்கை வைத்தது. இப்போத் தான் 2012 ஆம் ஆண்டு இங்கே ஶ்ரீரங்கம் வரச்சே கொடுத்துட்டு வந்தேன். :) உங்கள் பயணத்தில் கொண்டு போன உணவுவகைகளின் மணமும் சுவையும் இப்போது நினைத்தாலும் அருமையாக இருக்கும் எனத் தெரிகிறது. அப்போதெல்லாம் இட்லி, தோசையின் மணமே தனி தான். :)

ராஜி said...

ஆரம்பமே அசத்தல்...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.
மதுரை உளுந்துக்குத் தனி சுவை என்றே நினைப்பேன். பெரிய அரிக்கன்சட்டியில் கறுப்பு உளுந்து ஊற வைத்து ,பாட்டி அரைப்பார். நான் கூடவே உட்கார்ந்து மீண்டும் பார்க்கலாம். தள்ளிவிடுவேன்.
ஊர்க்கதை எல்லாம் அப்போது சொல்வார். அப்போதே பாட்டிக்கு 70 வயது இருக்கும். அசராமல் வேலை செய்வார்.மண்பாண்டங்களில் சமையல். இட்லி, திரட்டிப்பால்,முறுக்கு இது போல சிற்றுண்டிகள் செய்யப் பெரிய பாத்திரங்கள் இருக்கும்.
மீண்டும் பார்க்கலாம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி,
சுவையான அனுபவங்கள். நன்றி மா.

'பரிவை' சே.குமார் said...

பயணங்கள் எப்போதும் இனிமையானவை.
ஆரம்பமே அசத்தல்... தொடருங்கள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார், இது ஒரு மீளும் முயற்சி.
உங்களுக்கு உண்மையாகவே பிடித்தது என்று நம்புகிறேன். நன்றி மா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா திருக்குறுங்குடி என் அப்பா பிறந்த ஊர். அப்பாவின் அம்மா, அப்பா திருக்குறுங்குடியில்தான் இருந்தார்கள். நான் இளங்கலை கல்லூரி படிக்கும் வரை லீவுக்குச் சென்று இருக்கிறேன். வள்ளியூரிலும் இருந்தார்கள் ஆனால் அப்புற்ம திருக்குறுங்குடியில்தான். தாத்தா இறந்ததும் அங்குதான். அதன் பின் பாட்டி தனியாக அங்கு இருந்தார். ஆனால் அதன் பின் எங்களுடன் வந்துவிட்டதால் அப்புறம் செல்லும் வாய்ப்பு இல்லை ஆனால் என் அப்பா சென்ற வருடம் வரை அங்கு தேசிகர் உத்சவத்திற்கும், கோயில் திருவிழாவிறிம் சென்றுவிட்டு வந்தார். அப்புறம் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பார்கள் அதில் தாத்தாவின் உபயமும் உண்டு...அப்பா அதற்கும் சென்றுவிட்டு வருவார். பாட்டி அங்கு மாதர்சங்கத்தில் அப்பளம் இடுவார். நான் மலைநம்பிக் கோயில் எல்லாம் சென்ற நினைவுகள், குளம், ஆறு, ஊரில் விளையாடிய நினைவுகள் எல்லாம் வந்தது...

இனிமையான நினைவுகள் தங்களுக்கும் இதோ அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அப்பாடி எத்தனை செய்திகள் அன்பு கீதா. அப்பா அங்கே கோயில்
பணிகளில் பங்குகொள்ள வேண்டூம் என்றால் எவ்வளவு பெரிய
பாக்கியம்.
எனக்கெல்லாம் இந்த புண்ணியம் கிடைக்கவில்லையே.
அம்மா அப்பாவை நான் மிக விசாரித்து அன்பு சொல்லியதாகச் சொல்லுங்கள்.
வள்ளியூரில் அப்பா தபாலாபீசில் வேலைக்குச் சேர்ந்தார்னு சொல்வார்கள். பிறகு கயத்தாறுக்கு
மாறினார்.
பாட்டி தாத்தா ,சித்தப்பாவுக்காக மதுரை வந்துவிட்டார்கள்.
தம்பி முரளி போன வருடம் கூடத் திருக்குறுங்குடி போய் சேவித்து விட்டு வந்தான்.
என்ன எல்லாமோ நடந்துவிட்டது. நம்பி அழைக்கட்டும் . மீண்டும் பார்க்கலாம்.