எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
சமீபத்தில் டவுன் டவுன் சிகாகோ போயிருந்த பொது, ஒரு மியூசிக்லஸ் கடைக்குள் நுழைந்து விட்டேன்.
அவ்வளவுதான் உலகமே மறந்து. என் ஆரம்ப கால இசையிலிருந்து அதுக்கு முன்னால் வந்த எத்தனையோ அருமையான இசைத்தட்டுகள்.
ஒவ்வொன்றாக எடுத்துத் தடவி மகிழ்ந்தேன். மிகப் பழைய இசைத்தட்டுகள் என்பதால் விலை மிக உயர்வு.
க்ஷண நேர பித்தத்தில் ஆயிரம் டாலரை அள்ளிவிட
நமக்கு மனசு வருமா.
அழகாக ஒரு டூர், சுற்றி வந்தோம். அந்த ஏக்கத்தை அங்கேயே
விட்டுவிட்டு,
வெளியில் வரும்போது , அம்மாவோட அம்மா வீட்டில் இருந்த கிராமஃபோன், அதில் கேட்ட எம்.எஸ் , தாண்ட பாணி தேசிகர் பாடல்கள், மதுரை மணி அய்யர் எல்லாம் நினைவிலிருந்து பேரனிடம் சொல்லி வந்தேன்.
உனக்குத்தான் ஆங்கிலப் பாடல்கள் பிடிக்குமே பாட்டி. என் வாங்கலைன்னு கேட்டான்.
நீ எல்லாம் என்ன செய்யறேன்னு கேட்டேன். என் செல் ஃபோனில்
எல்லாம் டவுள் லோட் செய்துப்பேன். காதில் மாட்டிக் கொண்டால் போதும் என்றான்.
பாட்டிக்கு அப்படி வேண்டாம் கண்ணா.
ஏற்கனவே சிறிய வயதில் வாங்கின எல்பி ரெக்கார்டுகள் எல்லாம் உருமாறி அழிந்து போயாச்சு.
அதைப் பார்க்கும் போது ,நாம் எத்தனை விதமாக ஒவ்வொரு பொருளையும் இழக்கிறோம் என்று தோன்றிவிட்டது.
அதனால் நோ மோர் பையிங் என்று சிரித்தேன்.
எஸ் ,யு ஆர் ரைட் என்று ஒத்துக் கொண்டான்.
நானும் என் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளணும் என்று சிந்தனை வேறு ஓடியது அவன் மனதில்.
என்னை மாதிரி அவன் இருக்க மாட்டான். சாமர்த்தியசாலியும் கூட.
இப்பொழுது எல்லாமே இணையத்தில் இருக்கும் போது , இதை போல
அனாவசிய செலவுகளைக் கண்டிப்பாகக் குறைக்கலாம்.
புத்தகம் வாங்குவதிலும் இதைக் கடைப்பிடிக்கப் போகிறேன்.
இணையத்தில் மின்னணுப் பதிவாக வெளிவரும் புத்தகங்கள்
அனைத்தும் அருமை. அதுவும் நமக்குத் தெரிந்தவர்களின் படைப்பு
என்றால் கேட்கவே வேண்டாம்.
நம் காதுகளுக்கும் ,கண்களுக்கும், அறிவுக்கும் விருந்து படைக்கும் அனைவருக்கும் நன்றி. |
12 comments:
உண்மைதான். இவற்றுக்குக் காசு கொடுத்து வாங்கி நிறைய காசு நானும் வீண் செய்திருக்கிறேன். வாங்கியிருக்கும் புத்தகங்களை படிக்கிறேன். புதிதாக புத்தகம் எதுவும் வாங்கவில்லை. பாடல்கள் இணையத்திலும், அலைபேசியிலும் கேட்கிறேன்.
இப்போது இணையத்திலேயே பல விஷயங்கள் கிடைத்துவிடுவதால் வாங்கி வைக்கும் பழக்கம் ரொம்பவே குறைந்திருக்கிறது. என்னிடம் பல கேசட்டுகள் இருந்தன. இப்போது அவற்றை எடுப்பது கூட இல்லை!
பதிவின் தலைப்பு 'இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்' பாடல் என் மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது. தண்டபாணி தேசிகரின் 'தாமரை பூத்த தடாகத்திலே' எனக்கு மிகவும் பிடித்த பாடல். (அவர் பாடலுக்காகவே நான் நந்தனார் படத்தை நிறைய தடவை பார்த்தேன்-வீடியோவில்-என்னிடம் அந்தப் படம் இருக்கிறது)
மின்னூல் சுலபம்தான். இருந்தாலும் புத்தகத்தை ஸ்பரிசித்து படிப்பதுபோல் வருவதில்லை. ஆனால் இசை எம்பி3 அப்படி இல்லை.
உண்மைதான் படிக்க விரும்பினால் நமக்கு பிடித்ததை இணையத்தில் தேடி எந்த ஒரு வித செலவு இல்லாமலும் படிக்கலாம்
இசைத்தட்டு காலத்தைய நினைவுகளைக் கிளப்பின தங்கள் பகிர்வு. சிடி வருவதற்கும் முன்பாக சேகரித்த கேசட்கள் ஒரு மூட்டை அளவுக்கு வெளியேற்றினோம் வீடு மாறும் போது. ஆம், இப்போது எல்லாமே இணையத்தில்.. எளிதாகக் கிடைக்கின்றன.
உண்மைதான் ஸ்ரீராம்,
நமக்குப் பிறகு இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் மேல் சுமத்த ஆசை இல்லை.அருமையான புத்தகங்களைப் பிரியவும் மனதில்லை.
ஆமாம். நெல்லைத் தமிழன்.
சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா எவ்வளவு அருமையாக இருக்கும்.
என் மாமா ராமுவுக்கு இசை மேல் அவ்வளவு ஆர்வம். நன்றாகப் பாடவும் செய்வார்.
இசை மனம்மை நிலைப் படுத்தும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
என் அம்மாவுக்கும் நான் பாட வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.
கற்றதைப் பயிற்சி செய்யாமல் காலம் கழித்துவிட்டேன்.
மின் நூல் பற்றி எனக்கும் அதே அபிப்பிராயம் தான்.
அது இன்னும் நம்மைக் கணினியுடன் கட்டுகிறதே என்று தோன்றும்.
பார்க்கலாம் என் வைராக்கியம் எத்தனை நாள் நீடிக்கிறது என்று.
ஆமாம்.அவர்கள் உண்மைகள்.
இருந்தாலும் கைகளில் புத்தகத்தைப் பிடித்தால் அது ஒரு துணை.
அன்பு வெங்கட்,
நானும் இவரும் எத்தனை ஆசையாக இசைத்தட்டுகள் வாங்குவோம்.....நாள் முழுவதும் இசைதான்.
இப்போது, பீரோவின் அடித்தட்டில் அழுக்குப் படிந்து ,கேட்பதற்கு வழியும் இல்லாமல்
ஓய்ந்துவிட்டன என் நினைவுகளைப் போல.
இனிக் கணினியில் தான் எல்லாம்.நன்றி மா.
அன்பு ராமலக்ஷ்மி,
ரேடியோக்ராம், இசைத்தட்டுகள் வைப்பதற்காகவே வீட்டில் பெரிய காபினெட் செய்தார்.
அதைக் காப்பாற்றி வைக்க ,சென்னை வந்த புதிதில் இடம் கிடைக்கவில்லை.
பெரியவர்களுக்கு எங்கள் இசையில் அத்தனை ஈடுபாடு கிடையாது.
அதனாலெயே அவைகளின் புழக்கம் குறைந்தது.
பிறகு காசெட்.
இப்போது அவையெல்லாம் எங்கெங்கோ சிதறிவிட்டன. சாக்கு மூட்டையில் வெளியேறியவையே அதிகம்.
பழைய நினைவுக்காக Sound of Music album மட்டும் வைத்திருக்கிறேன்.
உங்கள் அன்பு புரிதலுக்கு மிக நன்றி. மா
இணையம் வந்து நம் பழக்கத்தின் முறையை மாற்றிவிட்டது என்பதே உண்மை.
எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன ஐயா.
Post a Comment