Sunday, April 30, 2017

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

இதெல்லாம் மற்றவர்களுக்குத்தான் எனக்கில்லை சொக்கா.
இப்ப எல்லாம்  வருத்தம் விலகிவிட்டது.. சர்க்கரை பதப்  படுத்திவிட்டது.
2004 ஆம் வருடம் ஒரு எதிர்பாராத நாள் தம்பி  மறைந்தான்.
சின்னவன். காலை  சுற்றி வந்தவன்.
 பத்து நாட்களில் மகன் களுக்குத் திருமணம்.
முதல் நாள் அத்தனை மாடிகள் ஏறி இறங்கி
எல்லோரையும்  அழைப்பிதழ் கொடுத்து  மனைவியும் கூட அழைத்துப்போய், மயில்கண் வெட்டி புரள புரள அவன் வந்த காட்சி,என்னை திகைக்க வைத்தது.
   டே ,,, யாருக்கு கல்யாணம்   . உனக்குன்னு யாராவது தப்பா
நினைத்துக் கொள்ளப்  போகிறார்கள், என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது .

பிறகு வந்ததெல்லாம் கனவு.  திருமண முதல்நாள் தலை சுற்றி விழுந்தது
காலை உடைத்துக் கொண்டது எல்லாம் முன்னுரை.
முழுப் பரிசோதனை தொடர்ந்தது.
கண்டு பிடித்தார்கள்  என் உடலில் ஓடும் இரத்தத்தில்  சர்க்கரை அளவு 400
எட்டி இருந்தது. அதுவும்   ஃ பாஸ்டிங் 😈
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் பக்கவாத்தியம் .
டி  ஜெ. செரியன்  முதல் டாக்டர்.  என்  குடும்பத்துக்கு  காட் ஃ பாதர்.
அவர் போட்ட மிரட்டலில்  45 நிமிடம் தினம் நடக்க ஒத்துக் கொண்டேன்.
சிங்கத்தையும் மிரட்டினார். அவ  விழாம கூட நட .
நான் சிரித்துக் கொண்டேன்.
மெல்லநட சரோஜாதேவி நான்.  நாலு கால்  ஓட்டம் அவருடையது.
வண்டியில் மெரினா போவோம்.
கடலைப் பார்த்தே நிற்பேன்.
சைலன்ட் உரையாடல் அதனுடன். அதற்குள் அவர் நேப்பியர் பாலம் வரை போயிருப்பார். நானும் ஆடித்தேர் மாதிரி  வேக நடைக்காரர்களுக்கு வழிவிட்டு  கிரேசி மாது, பாலாஜி, மொட்டை பாஸ்கி, நம்பியார், சிவக்குமார் அவர் மனைவி   எல்லோருக்கும்  வணக்கம் போட்டுவிட்டு நடப்பேன். தி எம்  எஸ் கூட நடக்க வந்திருக்கிறார்.
விஸ்வநாதன் சார்.  ஒரு மகிழ்ச்சியான வேலைகள் அவை.
நான் பாதி தூரம்  கடக்கும் போது  சிங்கம் திரும்பி வந்து கொண்டிருக்கும்.
  எனக்குப் பசி எடுக்கும். முகத்தைப் பார்த்து சரவணபவன்
போலாமா  என்பார். ஆமாம் கால் வலிக்கிறது. திரும்பிடலாம் 😊
என்று சிரிக்காமல் சொல்வேன்.

இப்படி ஒழுங்காக நடந்ததால்  இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மாதிரி  ஒரு லெவலுக்கு வந்தது.      
 இந்த புராணம் இப்ப எதுக்குன்னு சொல்கிறேன்.
ஊரை வீட்டுக் கிளம்பும்போது ஒரு பத்துமாதத்துக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.
அப்படியும் ஒரு தேசம் போய் அடுத்த தேசம் போவதற்குள், நடுவில்
அங்கங்கே மேற்கொள்ளும் பயணங்கள்
எல்லாம்  சர்க்கரையை மேலே கீழே தள்ள ஆரம்பித்தன.
நயாகரா போகும்போது மருந்தெடுக்க மறந்தேன். அங்கே இருந்த வைத்தியரிடம் சொல்லி அவர் மிக நல்லவராக  இருந்த காரணத்தால் எப்படியோ சமாளித்தேன்.
கூட வருபவர்கள் பாடு யோசித்துப் பாருங்கள். பாவம் இல்லையா
இதோ ஹிஸ்டரி  ரிப்பீட்டிங் .இங்கே  செப்டம்பர்  மாதம் வரும்போது ஆறு மாதத்துக்கான  மருந்துகளே எழுதி எடுத்துக் கொடுத்தார்.
இதோ ஏழு  மாதங்கள் கடந்து விட்டன.
மருந்து தீரும் நேரம். மகன்  வேலை பொறுப்புகள் நிறைய. அவன் என்னைக் கூட்டிப் போய்  மீண்டும் திரும்ப வேண்டும் மருந்துகளை வாங்கிக்  கொண்டு.
 கடவுளே தவிப்பு அதிகமானது/ அப்போதுதான் எழுத்தாள திருமதி வித்யா சுப்பிரமணியம் இந்தோனேசியா வர போவதைச் சொன்னார்.
எனக்கு அப்போ கூட உரைக்கவில்லை.
பெண் தான் உற்சாகம் கொடுத்தால். நீ அவர்கள் உதவியைக் கேளும்மா. மறுக்க மாட்டார் என்று.
மிகத்தயக்கமாக இருந்தது.
தைரியம்  வரவழைத்துக் கொண்டு உள்பெட்டியில் கேட்டேன்.
உடனே சரி என்றுவிட்டார். மருந்துகளைக் கடையில் சொல்லி வல்லபா ஸ்ரீனிவாசனி டம் கொடுத்து அது வித்யா அம்மாவையும் அடைந்து இதோ அவர் மகள்  வீட்டில் இருக்கிறது.  முக நூல்  அறிமுகம் மட்டுமே. நேரில்  இன்னும் பார்க்கவில்லை. வல்லபா எங்க ஊர்ப் பெண். வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவர் செய்த உதவி சொல்லில் அடங்காது.

எல்லோருக்கும்  மேலே  இருக்கும்  கடவுளின்  கருணை.
குருவாயூரப்பன் பக்தை வழியாக  வந்த வைத்தியம்.
அனைவரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.
13 comments:

நெல்லைத் தமிழன் said...

சர்க்கரை அளவு 400லிருந்து 2 வருடத்தில் நல்லா குறைந்துவிட்டதா? பதிவின் படம், நீங்கள் மிஸ் செய்யும் இனிப்பைப் படமாகவாவது போட்டுக்கொள்ள ஆசைப்பட்டதுபோல் தெரிகிறது.

நல்லவேளை... எப்படியோ மருந்துகள் உங்களை வந்தடையப்போகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நெல்லைத் தமிழன். எப்பவோ செய்த பாதாம் அல்வா.:) இரண்டு வருடங்களில் எத்தனை மாத்திரைகள் உள்ள போச்சுன்னு கணக்கு பார்த்தால் தலை தான் சுத்தும். இப்போ ஸ்டெடி. இருந்தாலும் இவரை சிரம்ப் படுத்தினேனேன்னு வருத்தம். நன்றி மா.

நெல்லைத் தமிழன் said...

இந்த மாதிரி படத்தைப் பார்த்தால், உடனே அல்வா சாப்பிடணும்னு தோணுது. சுகர் வந்துவிடும் என்று பயம் இருந்தாலும், ஆசை யாரை விட்டது.

வல்லிசிம்ஹன் said...

அப்படி எல்லாம் ஷுகர் வராதுமா. எங்கள் அகத்தில் என்னைத் தவிர யாருக்கும் கிடையாது. என் பாட்டி க்கு இருந்தது. ஸ்டரெஸ் and no activity are major causes for diabtes. நெல்லைத்தமிழன். கவலை வேண்டாம்.

Angelin said...

மருந்துகள் உங்களுக்கு வரப்போகுதே இறைவன் கிருபையால் நல்ல நட்புக்களால் ..சந்தோஷம் வல்லிம்மா ..எங்க வீட்ல மெஜாரிட்டி நானும் மகளும் ஸ்வீட்ஸ் தொடாத மக்கள் :) அதனால் இந்த ஸ்வீட்ஸ் செய்முறை கூட நான் யோசிச்சதில்லை :) எப்பவாச்சும் once in a blue moon குலாப் ஜாமுன் மிக்ஸ் வாங்கி செய்வேன் அதை கணவரே முடிச்சிடுவார் :) அதனால்தான் பார்க்கா நலல இருந்தாலும் அவல் பாதம் ரெசிப்பி கேக்க மாட்டேன் :)
வாக்கிங் மற்றும் அலைகளுடன் டாக்கிங் இனிமையான அனுபவங்கள் வல்லிம்மா ..நானும் தினமும் 10000 ஸ்டெப்ஸ் நடந்திடறேன் .

வல்லிசிம்ஹன் said...


Chellappa Yagyaswamy has left a new comment on the post "சர்க்கரை இனிக்கிற சர்க்கரை":

வெளிநாடு போய்விட்டு மருந்துகள் இல்லாமல் போவது கொடூரமே. நல்லவேளையாக உங்களுக்கு உதவி கிடைத்துவிட்டது. இல்லையெனில் சங்கடம் தான். உங்களை நீங்கள்தானே கவனித்துக்கொள்ளவேண்டும்? உங்கள் கட்டுரை என் மனைவிக்கும் பயன்படும். நன்றி.

-இராய செல்லப்பா நியூஜெர்சி

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நன்றி கண்ணா. வாழ்க்கை முழுவதும் படிப்பினைகளைக் கொடுக்க எத்தனையோ சம்பவங்கள்.

சரியாகப் புரிந்து கொண்டு ,உடனே வெளிவர முயற்சிக்க வேண்டியதுதான்,.
நீங்கள் சர்க்கரை பக்கம் போவதில்லையா. நல்லதுதான்.
palmsugar அவ்வளவு கெடுதி இல்லை என்று படிக்கிறேன்.
வளமாக இருக்க உங்களுக்கும் Sharon க்கும் மனம் நிறைஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் மனைவிக்கும் டயபெடிஸ் இருக்கிறதா. அட ராமா.
நான் மிக ஜாக்கிரதையாகத்தான் மருந்துகள்
எடுத்துவந்தேன் மா. இங்கு சர்க்கரை அளவு திடீரென ஏறவும்
இங்குள்ள வைத்தியர் அறிவுரைப்படி டபிள் டோஸ்
எடுக்க வேண்டி வந்தது. அதில் அளவு குறைந்து விட்டது.
எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட மாதங்களுக்கு மேலாகவே
எடுத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
மிக நன்றி திரு Chellappa Yagyasawamy.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிக நன்றி மா. இனி எச்சரிக்கையுடன் இருப்பேன்.

கோமதி அரசு said...

தம்பி, சார் இருவரின் நினைவு பகிர்வுகள். என்றும் நீங்கா நினைவுகள்.
நல்ல உள்ளங்களின் உதவி ஈடு இணைஇல்லாதது.
மருந்துகள் கிடைத்தது இறைவனுக்கு நன்றி. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா.

Geetha Sambasivam said...

கவனமாக இருங்க ரேவதி! நெ.த. உங்க பாதாம் அல்வா பத்திக் கொடுத்திருந்த கருத்தைப்படிச்சுட்டு இதைத் தேடி வந்தேன். நல்ல சமயத்தில் வித்யா சுப்ரமணியம் உதவி கிடைத்தது. மருந்துகளும் கிடைத்தன! கடவுளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, ஆமாம்
அதிர்ஷ்டவசமும், அன்பும் என் மருந்துகளைக் கொண்டு வந்திருக்கின்றன.
இனி எச்சரிக்கையாக இருப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அலையப் போகிறேனோ
கீதா,


தெரியவில்லை. இறைவன் கிருபைக்கு நன்றி