எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்.
கோபம்,பாபம் இது அடிக்கடி என் மாமியார்
உபயோகிக்கும் வார்த்தைகள்.
காலையில் எழுந்ததிலிருந்து எங்கள் இருவருக்கும் மேலாண்மையாக
ஆஜிப் பாட்டி.
நான்கு மணிக்கே எழுந்து தான் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வடுவூரார்
த்ரில்லர் படித்துக் கொண்டிருப்பார்.
மாடியிலிருந்து நான் இறங்கும் சபதம் கேட்டதும்,
எனக்குக் கட்டளைகள் பறக்கும்.
என் மாமியார் அதற்கு முன் எழுந்து
காய்கறிகள் நறுக்கி வைத்திருப்பார்.
பாட்டிக்கு தனி சமையல்.
எங்கள் குடும்பத்துக்குத் தனி சமையல்.
எட்டரை மணிக்கு அம்மா தயாராக எல்லாவற்றையும் செய்து வைத்து
தன் மாமியாருக்கு இலை போடும் அழகே தனி.
அப்போதே 60ஐத்தாண்டிய வயது.
மனத்திண்மை ஒன்றே அவரை இருத்தி வைத்தது.
அந்தக் குணத்தில் கொஞ்சமாவது என்னில் படிந்திருக்க வேண்டும்.
தன் மாமியார் வார்த்தைக்கு மறு வார்த்தை சொன்னார்
என்பதே கிடையாது.
கோபத்தில் ஒரு நொடியில் நூறு தவறு இழைத்துவிடலாம்.
அதை அந்த நேரம் கட்டுப் படுத்தினால்
நூறு நன்மைகளுக்கு வழிவகுக்கலாம் என்பார்.
பாட்டியே என் மாமியாரை பொறுமையில் பூமாதேவி என்றே அழைப்பார்.
நேற்று நான் படித்துமுடித்த அனுத்தமா அவர்களது நாவலில் வரும் பாரதி என்கிற
பாத்திரம் அப்படியே என் மாமியாரை நினைவுக்குக் கொண்டு வந்தது.
கூட்டுக் குடும்பத்துக்கு உண்டான அத்தனை லட்சணங்களும் அந்த நாவலில்.
இப்பொழுது அதைப் போல் எதிர்ப்பார்க்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.
இருந்தும் கடந்த காலத்துக்கு அது ஒரு சாம்பிள்.
படிக்கவும் பொறுமை வேண்டும்.

9 comments:
பொறுமையைக் கடைபிடித்தால் என்றுமே நல்லது தான்...
ஆனால் அதைக் கடைபிடிப்பது பலருக்கும் வருவதில்லை....
உங்கள் அனுபவங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....
அனுபவம் படிக்க இனிமையாய் இருக்கிறது.
"கோபம்,பாபம்" அதன் அடுத்த வார்த்தை 'பழி'. கோபத்தை அடக்குவது எளிதா? அந்தக் கோபத்தினால் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் விஷமாகின்றன.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி அன்பு வெங்கட். மிகவும் கடினமான விஷயம் தான். உங்கள் தலைமுறை வரை இந்தப் பொறுமை வந்திருக்கிறது. இனியும்
நீடிக்கும் என்று நம்புவோம்.
நன்றி நெல்லைத் தமிழன். அதற்கு இன்னோரு வார்த்தையும் உண்டு. கோபிக்காமல் இருப்பது கடினமே. எதை எல்லாம் சொல்ல நினைக்கிறோமோ அதை எல்லாம் கடிதமாக எழுதி நாமே வாசித்துக் கொள்ளலாம் என் தோழி ஒருவர் சொன்னார்.:) ,,,
வல்லி சிம்ஹன் அம்மா... ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள், எந்தக் காரணத்தைக் கொண்டும் கோபமான வார்த்தைகளைப் பிரயோகிக்கமாட்டார். என்ன சொல்லவேண்டுமோ அதை அந்த நண்பருக்குக் கடிதமாக எழுதி, தன்னுடைய FILEல்லிலேயே வைத்துக்கொள்வார் என்று படித்திருக்கிறேன். கோபத்தையும் வெளிப்படுத்தியமாதிரி ஆனது, நண்பரையும் (அல்லது எதிரியையும்) பகைத்துக்கொள்ளவில்லை. இதை கண்ணதாசன், 'சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை விலையேதுமில்லை' (நான் பேச நினைப்பதெல்லாம் பாடல்) என்று சொல்லிவிட்டார்.
அவசரப்பட்டு சுடுசொற்களை சிந்தாமலிருந்தால் முதலில் நமக்கு நிம்மதி. எண்ணி எண்ணி வருந்த வேண்டாம்!
இதையும் முகநூலில் படிச்சேன். இங்கே உள்ள எல்லோருடைய கருத்துக்களும் அருமை.
உண்மையே அன்பு ஸ்ரீராம்.
சினம் ஒரு அரக்கன்.
கொன்றுவிட்டுத்தான் அடங்குவான்.
நாமோ பல தடவை அடிகள் வாங்கியாச்சு.
மீண்டும் பாபம் சேர்க்காமல் இருக்க மௌனமே
சிறந்த வழி.
நன்றி கீதாமா. அனாவசியக் கோபம் எல்லாம் நம்மை விட்டுப் போயாச்சே.
Post a Comment