எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
நாளை பங்குனி மாதம், யுகாதி நாள் நல் வாழ்த்துக்கள் ,
நாளை பங்குனி மாதம், யுகாதி நாள் நல் வாழ்த்துக்கள் ,
ஸ்ரீரங்கனாதன் ரங்க ராஜாவுக்குப் பிறந்த நாள் என்று எனக்கு ஒரு
ஃபார்வர்ட் செய்தி வந்தது.
திருமலை எம்பிரானுக்குத் திருவோணம் என்றால்
ஸ்ரீராமனுக்குப் புனர்வசு
ஸ்ரீரங்கனுக்கு எல்லோருக்கும் பெரிய பெருமாளுக்குப் பங்குனி ரேவதி நட்சத்திரம் அவதார நாள் என்றால்
மிக அதிசயமாக இருந்தது.
ஆதி அந்தமில்லாத பெரும் சோதிக்கு அவதாரம் அந்தம் ஏது என்று
தெரிந்தவர்களிடம் கேட்டேன்.
சூரிய பகவானுக்கு விஷ்ணு அரங்கனாதனாகப் பாற்கடலில் பள்ளிகொண்ட
திருமாலாகத் தோன்றிய நாள் என்று ஒருவரும்,
ஆதிதயன் தன் குலத்தோன்றல்களான இக்ஷ்வாகு குலதனமாகக் கொடுத்த நாள் என்றும்.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் பூர்த்தியாகி
விபீஷணன் ,ஸ்ரீரங்கவிமானத்தைப் பரிசாகப் பெற்று ரங்கனாதனைக் காவேரிக்கரையில் இருக்க
வைத்த நாள் என்றும்
பலவித சம்வாதங்கள்.
அந்த ரங்கனுக்கு காவேரியை மிகப் பிடித்து அவள் கரையில் பள்ளி கொண்டுவிட்டான்.
எங்கள் குடும்பத்துக்கும் 2003 ஆம் வருடம் அவனைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது. அன்றுதான் இந்த விவரம் எல்லாம் திருக்கோயில் பட்டர் ஸ்வாமிகளிடம்
இருந்து அறிந்து கொண்டேன்.
அரங்கன் அனைவரையும் காப்பான்.
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ நாமும் வாழ்ந்திருப்போம் நலமாக.
11 comments:
அரங்கன் அனைவரையும் காக்கட்டும்....
நல்ல தகவல். நன்றி.
காலையில் அரங்கன் உங்கள் பதிவின் வாயிலாகச் சேவித்தேன்.
மனிதர்கள்தான் இறைவன் உருவத்தையும் பிறந்த நாளையும் தங்கள் மனத் திருப்திக்காக உருவாக்குகிறார்கள்!
நியூஜெர்சியில் இப்போது காலை மணி ஆறு. கண் விழித்ததும் அரங்கனைப் பற்றிய உங்கள் பதிவைக் காண்கிறேன். இன்று நாள் முழுதும் நன்மைகள் விளையும் என்று நம்புகிறேன்.
- இராய செல்லப்பா நியூஜெர்சி
அன்பு வெங்கட் மிக நன்றி ராஜா. யுகாதி நன்னாள் வாழ்த்துகள்.
நான் போட்ட பின்னூட்டம் காணோம்!
அரங்கனுக்குப் பிறந்த நாளா? எல்லா நாளுமே அவன் கொடுத்தவை தானே! :)
வரணும் நெல்லைத் தமிழன். அவனில்லாமல் ஏது வாழ்வு. மிக நன்றி.
நன்றி திரு. செல்லப்பா யக்ஞஸ்வாமி.
இன்னும் குளிர் இருக்கிறதா.
ஜூலை மாதம் அங்கே இருப்பேன் என்று நினைக்கிறேன்.
அரங்கன் நம்மைக் காக்கட்டும்.
இதோ வந்துவிட்டது ஸ்ரீராம். நீங்கள் சொல்லி இருக்காவிட்டால் தெரிந்திருக்காது. அதுக்கு மனம் நிறைந்த நன்றி. நீங்கள் சொன்ன மாதிரியே கிட்டத்தட்ட 27 பின்னூட்டங்கள் வெளியிடப்படாமலே இருந்திருக்கின்றன. எப்படி சரி செய்வது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கீதா, அரங்கனுக்கும் எனக்கும் இந்த சம்பந்தம். அதனால் மறக்க முடியவில்லை.
மற்றபடி அவனுக்கு ஏது தோற்றம்.ஆதி அந்தம் இல்லாத பகவான்.
Post a Comment