எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
சித்திர விசித்திரங்கள். 1960 ..64.
++++++++++++++++++++++2017 மார்ச் 12.
எங்கள் பள்ளியில் ஆறாம் படிவத்திலிருந்து கலையார்வம் வளர்க்கப் படும். பாட்டு, ஓவியம்,தையல்
விளையாட்டு எல்லாவற்றிலும் கன்யா சகோதரிகள் நிறைய ஊக்கம் கொடுப்பார்கள். மிஸ். க்ளாரா ஜேம்ஸ்
மிகப் பிடித்த மிஸ். அவர்கள் தாவர இயலும் சொல்லித் தருவார்கள். விளையாட்டு நேரங்களில் அந்த சுடு வெய்யிலில் என்னை ஓட வைப்பார்கள்.
இத்தனை உயரத்தையும் வீணாக்காதே. கூடைப் பந்து, ஓட்டம்
எல்லாவற்றிலும் ஈடுபடு என்று விரட்டிக் கொண்டே இருப்பார்கள்.
தொண்டை சதை அழற்சி காரணத்தினால் காய்ச்சல் வருm நாட்களில்,
தையல் வகுப்பு மதர் ரெபெக்காவிடம் அடைக்கலம்.
அங்கே உட்கார்ந்து சித்திரம் வரைந்தது நான் மட்டும் என்றே
நினைக்கிறேன்.
ஆனந்த விகடனில் சாரதி அவர்கள் வரையும் சித்திரங்களை ப்
பார்த்து
கட்டங்கள் வரையைப் பட்ட தாள்களில் அழகாக அளவு குறித்துக் கொடுப்பார்கள்.
அதைப் பின்பற்றி வரையக் கற்றோம்.
கைகள் வரையத்தான் கற்கவில்லை.
என் ஓவியங்கள் இடுப்பளவில் நின்று விடும். ஸ்மைலி போட்டுக் கொள்ளவும்.
என் ஓவிய மங்கைகள் வித விதமாகப் புடவை கட்டுவார்கள்.
அதற்கேற்ற ரவிக்கை.
எல்லாம் ஒரே டிசைன்.
கழுத்துக்குப் போடும் நெக்லஸில் கூட அந்த வடிவு, காதில் தொங்கும்
தொங்கட்டானிலும் அதே. நாக்கில மூக்கில நத்து புல்லாக்கில
கூட அந்த வடிவு பளிச்சென்று சிவப்பு பச்சை வண்ணங்களில்
ஜரிகை தூவி ஜொலிக்கும்.
இடுப்பு ஒட்டியாணத்திலும் அது இருக்கும்.
அதே நெற்றிச் சுட்டியிலும் இருக்கும்.
அதிசயம் என்ன என்றால் அதே போல பல சித்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஒன்று தான் இன்றைய ஃப்ரொஃபைல் படம்.
படம் பார்த்துக் கதை சொல் பாகம் முடிகிறது.

15 comments:
இனிய நினைவுகள் மா....
வரைகிறேன் என்ற பெயரில் நான் கிறுக்கி இருக்கிறேன்.... :)
நீங்கள் வரைந்த சித்திரங்களைக் கற்பனையில் காண வைக்கிறது உங்கள் எழுத்து.
சித்திரம் அழகாய் பேசியது...
அருமை அக்கா.
அருமை
படங்களுக்கு என் கைகளால் வரையப்படும் பாக்கியம் கிடைத்ததில்லை! (ஹிஹிஹிஹி இப்படியும் சொல்லலாம் இல்லை?)
அன்பு வெங்கட் ,நலமாப்பா. நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டது மிக மகிழ்ச்சி. அதுதான் மகள் ஏகத்துக்கு அழகா வரைகிறாளே. உங்கள் திறமைதான் அவளுக்கு வந்திருக்கிறது. அம்மா,அப்பா,ஆதி,ரோஷ்ணி அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.
படமும் நல்லா இருக்கு. உங்கள் அனுபவமும்.
மகிழ்வான நினைவுகள் அம்மா...
என்னுடயடைய கிறுக்கல்களும் இதுபோல் தான்...இப்பொழுது water colour painting முயற்சியில் உள்ளேன்...
இன்றைய ப்ரொஃபைல் படம் என்னவோ என்னைக் கவர்ந்தது. அதை உடனே வரையவும் தோன்றிற்று. சிறு வயதில் இருந்த செம்மை இப்போது இல்லை.
வல்லிம்மா எப்படி இருக்கீங்க நலம்தானே ..
படத்தில் இருப்பவர் போட்டிருக்கும் நகைகள் லைட் வெயிட்ன்னு நினைக்கிறேன் :)
நானும் வரைவேன் கையும் காலும் சொதப்பிடும் அதனால் கையை பை பிடிக்கிற மாதிரி அப்புறம் கால்கள் தெரியாம புற்கள் மறைப்பதுபோல வரைஞ்சி சமாளிச்சுடுவேன் .நானும் கத்தோலிக்க பள்ளியில் தான் படிச்சேன்..ஓவியம் தையல் எல்லாமுண்டு
இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் வரைந்த ஒரு படம் போடலாமே.
ஓரளவு வரைந்து கொண்டிருந்தேன். இப்போல்லாம் கோலம் போட்டாலே கை எங்கோ இழுக்கிறது. ஒரு சப்பாத்தியை வட்டமாக இட முடியவில்லை! :) பிள்ளையும், பெண்ணும் சிரிக்கிறார்கள்! :)
Dear Angelin I am fine kanna. old age.Thanks dear.
MM. podalaam Nellai Thamizhan. podukiren. thanks ma.
Geetha yes . kolam perisu ellaam pOdamudiyaathu. paravaayillai ma.
Post a Comment