எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும் திண்டுக்கல் 1962
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Add caption |
புரட்டாசியும் சனிக்கிழமையும் சேர்ந்து வந்து நம்மை வாழ்த்துகிறது.
அந்த கோவிந்தனின் கருணைக்கு நம் காணிக்கை.
அன்பே தகழியாய்,ஆர்வமே நெய்யாக, உயிர்த்திரி இட்டு
ஏற்றும் அரிசி மாவு வெல்லம் கலந்த விளக்கு.
அப்பாடி அதற்கு
அம்மா எடுத்துக் கொள்ளும் ஆர்வம் நமக்கே படபடப்பாக இருக்கும்.
முதல் நாளிலிருந்து மௌனம். எல்லாம் ஜாடைதான்.
அரிசியை ஊற்வைத்து உலர்த்தி. ஈரத்தலையோடு
உரல் அடியில் நின்று கொண்டு அரிசி இசித்து உலர்த்தி சலிது மாவாகச் செய்து விடுவாள்.
அடுத்த நாள் இரண்டாம் சனிக்கிழமை யாக இருக்கும்.
நாங்கள் அப்பாவோடு இருப்போம் .அன்று சாப்பாடு லேட்டாகத்தான் கிடைக்கும்.
ஒரு பெரிய தாம்பாளத்தில் அம்மா, வாழை இலையில் மாவைக் கூட்டும் அழகே தனி.
அதொடு பொடித்த மண்டை வெல்லத்தை ஆதரவோடு கலப்பாள். வாய் கோவிந்த நாமத்தை சொன்னபடி இருக்கும்.
முதல் நாள் அப்பா வாங்கி வந்திருந்த புத்தம்புது வெண்ணெய் உருக்கப் பட்டு
அம்மா செய்துவைத்திருந்த ஒரு குட்டி ஆதி சேஷன் போல் இருக்கும் மாவணையில் சேர்க்கப் படும்.
அப்பா, ஜெயா, மணி எ ட்டரை என்று சொல்லவும் மிகப் பெரிய நெய்த்திரி நெய்யில் இறங்கும். நாங்கள் கோவிந்தா சொல்ல திரி நெய்க் குளத்தில் இறங்கி தீபம் ஏற்றப்படும். அப்பொழுது அங்கு உட்கார்ந்தவள் தான்.
ஒரு மணி நேரம் ஆகும். வாசனையோ எங்கள் மூக்கைத் துளைக்கும்.
பெருமாள் மலையேறப் போகிறார் எல்லோரும் வாங்கோ என்றதும்,
அப்பா உடனே தேங்காயை அழகாக உடைத்து விளக்கின் இரு பக்கமும் வைப்பார். வெற்றிலை பாக்கு கூட
இருக்கும்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெய் தீர்ந்து சகலமும் கலவையாகி நிஜப் பரம பதம் போல் காட்சி கொடுக்கும்.
விழுந்து விழுந்து சேவிக்கும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து நாங்களும் நி லத்தில் நெற்றி பதிப்போம்.
பிறகுதான் அம்மா முகத்தில் சிரிப்பு வரும்.
அதன் பின் எங்கள் வேட்டை தான். அப்பா தேங்காத் துண்டங்களுடன், மாவீளக்கு மாவை ஆளுக்கொரு வாழை இலைத் துண்டில் அமிர்தமாகத் தருவார்.
மற்ற வீடுகளுக்கும் நான் பறப்பேன் மாவிளக்கு டப்பாவுடன்.
கோவிந்தா சரணம். அனைவரையும் காத்தருள்.
6 comments:
அம்மா கொடுத்த மாவிளக்கு மா வாசனையை நினைவுபடுத்திவிட்டீர்கள். வெங்கடாஜலபதி படம் எந்தக் கோவிலினுடையது?
வெங்கடா சலபதி எந்தக் கோவில் என்று தெரியவில்லை. தோழி அனுப்பிய படம் அப்பா..அம்மா நாட்டு சர்ககரை சேர்பபார். மறந்து வெல்லம் என்று எழுதி விட்டேன்.
தேங்காயும் மாவிளக்கும் சேர்த்துச் சாப்பிட்டால் ஆஹா... அதுவல்லவோ சுவை...
நல்ல பகிர்வு அக்கா..
மிக நன்றி. பரிவை குமார். இந்த மாதம் முழுவதும் தெய்வங்களுக்கும் முன்னோர்களுக்கும் உண்டானது. தேங்காஆய் வெல்லம மாதம்.
மாவிளக்கு - ஆஹா என்று சொல்லவைக்கும் சுவை. சாப்பிடத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு.
அன்பு வெங்கட்,
உங்கள் வீட்டிலும் இந்தப் பழக்கம் இருக்கிறதா.
ஒரு அருமையான புனிதமான தயாரிப்பு மாவிளக்கு. நன்றி மா.
Post a Comment