Blog Archive

Tuesday, September 27, 2016

தம்பிக்குப் பிறந்த நாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


தம்பிகள் அண்ணாக்கள் அக்காக்கள் தங்கைகள் குடும்பத்தில் அடுத்தாற்போல் பிறக்கணும்
இது என்னைச் சந்தித்த ஒருவர் சொன்னது,.
அவர் வீட்டுக்குச் செல்லப் பெண்.

உலகமே நமக்குச் சொந்தம் தானே என்றேன்.என் இரண்டாவது தம்பிக்கு
 செப்டம்பர் 28 க்குப் பிறந்த நாள்   கொண்டாடுவது எனக்கு வழக்கம். என்
.....    பேத்தி கேட்ட மாதிரி , உனக்குத் தம்பி என்றால் என் உனக்கு முன்னால் உம்மாச்சி கிட்டப் போனார்..... என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தேன். உம்மாச்சி கிட்ட நல்ல  வேலை செய்ய  அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார் என்றார். அவருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.  என்றேன்.

இதோ அவனுக்கு 64 வயதாகப் போகிறது. அவன்   இருந்திருந்தால்  மகள்
திருமணத்தில் ஆனந்த சாகரத்தில் மூழ்கி  இருப்பான். சென்னையில் மழை பெய்திருக்காது. நானும்  சென்னைக்கு வந்திருப்பேன்.
சிங்கம் கூட உயிரோடு இருந்திருக்கலாம்.
அத்தை என்று கம்பிரமாகச் செல்ல மருமக்களுக்குச் சீர் செய்திருக்கலாம்.

ஆஹா அல்நாசர் போல கனவு ஓடுகிறது.

அன்பு ரங்கா ,எப்பொழுதும் அன்பால் என்னைக் கட்டிப் போட்டாய் .

மீண்டும் உன் பெண்  வழி வந்து உலகவாழ்க்கையில் நம்பிக்கை கொடு.




7 comments:

'பரிவை' சே.குமார் said...

மீண்டும் பிறப்பார் அக்கா..

ஸ்ரீராம். said...

நினைவுகள் அழிவதில்லை.

கோமதி அரசு said...

மீண்டும் பிறப்பார் அக்கா. அன்பு அழிவதில்லை.

ராமலக்ஷ்மி said...

இறுதியில் சொல்லியிருப்பது நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார்,
அன்பு ஸ்ரீராம், அன்பு கோமதி,
அன்பு ராமலக்ஷ்மி

மிக மிக நன்றி மா. அனைவரும் ஒரே மாதிரி நல்ல வார்த்தை சொல்லி
இருக்கிறீர்கள். இறைவன் சித்தம் அதே போல இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார்,
அன்பு ஸ்ரீராம், அன்பு கோமதி,
அன்பு ராமலக்ஷ்மி

மிக மிக நன்றி மா. அனைவரும் ஒரே மாதிரி நல்ல வார்த்தை சொல்லி
இருக்கிறீர்கள். இறைவன் சித்தம் அதே போல இருக்கட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்..... மறக்க முடியாத நினைவுகள்....

நல்லதே நடக்கும் அம்மா....