Sunday, October 02, 2016

நவராத்திரி நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு.
கொலு  நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்பித்தது.  அக்கம்பக்கம் ஓட
 ஆண்டாள் கோவிலில் கொலு பார்க்க, கடைவீதிகளில் மலர் மணம் வீச பட்டுப் பாவாடை ,குஞ்சலம்   கட்டிய பின்னல் ஆட  குதித்தோடிய   நாட்கள்.

சின்ன கொலு,பெரிய கொலு,பணக்கார வீட்டு கொலு,சாதாரண வீட்டுக்கொலு
என்று பல ரகம். எல்லாவீடுகளுக்கும் விஜயம் சிறு வயதுத் தோழிகளோடு.
எல்லாவீட்டிலும் சுண்டல் உண்டு. குங்குமம் உண்டு. பாட்டு உண்டு.
அருட்புரிவாய் கருணைக்கு கடலே   பாடல் உண்டு.
புதிதாகப் பாட்டுக்கு கற்றுக் கொள்ளும் கமலி கூட அம்பா நீ இறங்காவிடில் புகலேது பாடுவாள்.  நான் மட்டும் ஓஒ   தேவதாஸ் பாடிச் சிரிப்பையும் வாங்கி கொள்வேன்.

அடுத்து ஏதாவது பாடச்  சொன்னால் பூமாலை   நீயென் புழுதி மண் மேலே  என்பதற்குள் எனக்கே அழுகை வந்துவிடும் ஆதலால் அந்தவீட்டுக்காரர்கள் சாக்கலேட் கொடுத்து நிறுத்திய நாட்களும் உண்டு. .]]]

திருமங்கலம் வந்த பிறகு எங்கள் வீட்டிலும் கொலு ஆரம்பித்தோம்.
கடைசிப் படியில் மறையானை,ரப்பார் வாத்து, தம்பியுடைய தேர்   எல்லாம் இடம் பெரும்.
வாசலில் பொம்மை விற்பவரிடம் வாங்கிய வெள்ளை ரங்க நாதர், கிளிகள்,
குட்டிக் குருவிகள், தெப்பக்கு குளம் எல்லாம் கால ஓட்டத்தில்  எங்கோ போயின.
 அப்பா தீப்பெட்டிகளில் இணைத்து செய்த  பீரோ, மேஜை, நாற்காலிகள், பூங்கொத்துகள், வண்ணத்தோரணங்கள் என் பதினாறு வயது வரை இருந்தது .

என் வாழ்வில் எனக்கான ராமன் வந்ததும்,   நவராத்திரி  கொலு ,மழைக் குட்டையாகவும், ரயில் நிலையமாகவும், குழந்தைகள் கார்கள் நிற்கும்  நிலையமாகவும் மாறியது,.

வாழ்க்கையைப் பிரதி பலித்ததோ .  மீண்டும் பார்க்கலாம்.
Friday, September 30, 2016

Navaraaththiri Arambam

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Tuesday, September 27, 2016

தம்பிக்குப் பிறந்த நாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


தம்பிகள் அண்ணாக்கள் அக்காக்கள் தங்கைகள் குடும்பத்தில் அடுத்தாற்போல் பிறக்கணும்
இது என்னைச் சந்தித்த ஒருவர் சொன்னது,.
அவர் வீட்டுக்குச் செல்லப் பெண்.

உலகமே நமக்குச் சொந்தம் தானே என்றேன்.என் இரண்டாவது தம்பிக்கு
 செப்டம்பர் 28 க்குப் பிறந்த நாள்   கொண்டாடுவது எனக்கு வழக்கம். என்
.....    பேத்தி கேட்ட மாதிரி , உனக்குத் தம்பி என்றால் என் உனக்கு முன்னால் உம்மாச்சி கிட்டப் போனார்..... என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தேன். உம்மாச்சி கிட்ட நல்ல  வேலை செய்ய  அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார் என்றார். அவருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.  என்றேன்.

இதோ அவனுக்கு 64 வயதாகப் போகிறது. அவன்   இருந்திருந்தால்  மகள்
திருமணத்தில் ஆனந்த சாகரத்தில் மூழ்கி  இருப்பான். சென்னையில் மழை பெய்திருக்காது. நானும்  சென்னைக்கு வந்திருப்பேன்.
சிங்கம் கூட உயிரோடு இருந்திருக்கலாம்.
அத்தை என்று கம்பிரமாகச் செல்ல மருமக்களுக்குச் சீர் செய்திருக்கலாம்.

ஆஹா அல்நாசர் போல கனவு ஓடுகிறது.

அன்பு ரங்கா ,எப்பொழுதும் அன்பால் என்னைக் கட்டிப் போட்டாய் .

மீண்டும் உன் பெண்  வழி வந்து உலகவாழ்க்கையில் நம்பிக்கை கொடு.
Friday, September 23, 2016

பெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இவளை நினைப்பவர்களுக்கே வீரம் வர வரவேண்டும். தனியே நின்று வென்ற சக்தி அல்லவா.
இக்கரைக்கு அக்கரை 
கருணையின்  பிறப்பிடம் தாய். காப்பாற்றுவாள்.

உரை நடையில் ஒரு எண்ண  ஓட்டம்.
+++++++++++++++++++++++++++++++++++++++

பெண்னெனப் பூமியில்  பிறந்துவிட்டால்  மிகப்
பெருமை உண்டு பாரினிலே.
எங்கிருந்தோ வந்தால்
எங்கோ போகப் போகிறாள்.
 இடையில் கட்டிய அணை பிறந்தகம்.

அவள் சுதந்திர பறவை என்று நம்ப வைக்கப் படுவாள்
 சுற்றிப் பின்னப்  பட்டிருக்கும் வெள்ளி  நூல்கள்
தெரியாமல்   அதற்குள்ளேயே
அடங்கி நடப்பாள்.
என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் என்று
வானம்பாடியாகப் பாடிக்
குஞ்சுகளை வளர்த்து வீட்டுப் பெரியவர்கள் அடிபணிந்து
 நிமிரும்போது அவள் தொலைத்த எத்தனையோ வருடங்கள்
கண்முன் வரும்.
ம்ம்ம்ம். நான் இதைக் கடந்துவிட்டேன். எனக்கொரு வாழ்வு எனக்காகத் தேவை இல்லை.

என் அம்மா, என் மாமியார் வழி நானும் நடப்பேன்.
 வண்டி மாடுகள் போலாகி சீராக
நடக்கும்  ஜோடியில் ஒன்று வீழ்ந்தால்
இன்னொன்று க்கு வழி மீண்டும் மற்றவர்கள் வலையில்
அடைபடுவதுதான். பாதுகாப்பு வேணுமே.

இந்த நிலையில் இருக்கும் மங்கைகளுக்காக
எழுதினேன்.
வெற்றி பெற்ற எத்தனையோ   சாம்ராஜ்ய தேவதைகளுக்கானதில்லை இந்தப் பதிவு.

Saturday, September 17, 2016

நேற்றும்இன்றும் நாளையும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++

கணவர் எழுந்துவிட்டார் என்பது , வஞ்சுவுக்குத் தெரிவதே
அவர் பல் தேய்க்கும் சத்தத்தால் தான்.
அவருக்கு தொண்டை பூராவும் சுத்தம் செய்து கபம் எல்லாம் வெளி வந்து, பல் பளிச்சிடும் வரை பலவித கர்ஜனைகள் வெளி வரும்.

சரியாகப் பாலை க் காய்ச்சி முதல் டிகாக்ஷன் இல் தான் காப்பி வேணும் அவருக்கு.
ஆவின் பச்சைப் பாலில் இருந்து இப்பொழுதுதான் 2 பர்செண்டுக்கு வந்திருக்கிறார்கள்.
என்ன செய்வது மாடு வைத்துப் பால் கறந்து வளர்ந்த குடும்பம்.

பிறகு அவர் வேலை அவருக்கு அவள் வேலை அவளுக்கு.   20 வருஷமாக இந்தத் தணிக்க குடித்தனம் பழகி வருகிறது.

அவ்வப் போது வெளி நாட்டிலிருந்து  வரும் பசங்களும் அவர்கள் மனைவிகள் குழந்தைகள்  என்று  வருடத்தில் இரண்டு மூன்று மாதக் கலகலப்புக்கும் பழகிக் கொண்டார்கள்.
மற்ற நேரங்களில் வித விதமாகப் படுத்தும்  நோய்கள் பேரன் பேத்திகளைக் கண்டால் ஓடிவிடும்.

மருமகள்களுக்கு  இந்தக் காலை கர்ஜனைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

மாமாவுக்கு  என் இவ்வளவு சளித்தொந்தரவு என்று நாசூக்காகக் கேட்டுக் கொண்டார்கள்.

தன்  எழுபது வயதில் அதுதான் ஆதார சுருதி என்று அவர்களிடம் விளக்க முடியுமா.

அது ஒரு நாள் கேட்காவிட்டால் தான் மாடி ஏறி, அவர் ஏன்    எழு ந்திருக்கவில்லை என்பதை பார்க்கப் போகும் திகிலை வர்ணிக்க முடியுமா.

இந்தக் கோடையில் அவருக்கு சளி பிடிக்கும் . பிறகு சரியாகிவிடும். நாள் முழுவதும் இருமி   மற்றவர்களைத் துன்பப படுத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதுதான் இந்தப் பயிற்சியைக் கற்று வந்திருக்கிறார் என்  பதில் சொல்வாள்.

இதோ இப்போது அவரும் இல்லை. இருமல்,பல் தேய்த்து, சுவர் அதிரும் சத்தம் இல்லை.

மருமகள் கள்  இப்போது அவரவர்  கணவர்களிடம்     புத்திமதி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிரிப்புதான் வருகிறது வஞ்சுவுக்கு. டயரியில் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ............
புதிய  ஞாயிறே வருக.

புரட்டாசி பிறந்ததும். மாவிளக்கு வந்ததும் 1962

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்    திண்டுக்கல் 1962
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Add caption
 புரட்டாசியும் சனிக்கிழமையும் சேர்ந்து வந்து நம்மை வாழ்த்துகிறது. 
அந்த கோவிந்தனின் கருணைக்கு நம் காணிக்கை.

அன்பே தகழியாய்,ஆர்வமே நெய்யாக, உயிர்த்திரி இட்டு 
ஏற்றும் அரிசி மாவு வெல்லம் கலந்த விளக்கு.
அப்பாடி அதற்கு 
அம்மா எடுத்துக் கொள்ளும் ஆர்வம்  நமக்கே படபடப்பாக இருக்கும்.
முதல் நாளிலிருந்து மௌனம். எல்லாம் ஜாடைதான்.
அரிசியை ஊற்வைத்து உலர்த்தி. ஈரத்தலையோடு 
உரல் அடியில் நின்று கொண்டு அரிசி இசித்து உலர்த்தி சலிது மாவாகச் செய்து விடுவாள்.
அடுத்த நாள்  இரண்டாம் சனிக்கிழமை யாக இருக்கும்.

நாங்கள் அப்பாவோடு இருப்போம் .அன்று சாப்பாடு லேட்டாகத்தான் கிடைக்கும்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் அம்மா, வாழை இலையில் மாவைக் கூட்டும் அழகே தனி.
அதொடு பொடித்த மண்டை வெல்லத்தை ஆதரவோடு கலப்பாள். வாய் கோவிந்த நாமத்தை சொன்னபடி இருக்கும். 
முதல் நாள் அப்பா வாங்கி வந்திருந்த புத்தம்புது வெண்ணெய் உருக்கப் பட்டு
அம்மா செய்துவைத்திருந்த  ஒரு குட்டி ஆதி சேஷன் போல் இருக்கும் மாவணையில் சேர்க்கப் படும்.
அப்பா, ஜெயா, மணி  எ ட்டரை என்று சொல்லவும்  மிகப் பெரிய நெய்த்திரி நெய்யில் இறங்கும். நாங்கள் கோவிந்தா சொல்ல திரி நெய்க் குளத்தில் இறங்கி தீபம் ஏற்றப்படும். அப்பொழுது அங்கு  உட்கார்ந்தவள் தான்.
 ஒரு மணி நேரம் ஆகும். வாசனையோ எங்கள் மூக்கைத் துளைக்கும்.

பெருமாள் மலையேறப் போகிறார் எல்லோரும் வாங்கோ  என்றதும்,
அப்பா உடனே தேங்காயை அழகாக உடைத்து விளக்கின் இரு பக்கமும் வைப்பார். வெற்றிலை பாக்கு கூட
இருக்கும்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெய் தீர்ந்து சகலமும் கலவையாகி நிஜப் பரம பதம் போல் காட்சி கொடுக்கும்.
விழுந்து விழுந்து சேவிக்கும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து நாங்களும் நி லத்தில் நெற்றி பதிப்போம்.
 பிறகுதான்  அம்மா முகத்தில் சிரிப்பு வரும்.
அதன் பின் எங்கள் வேட்டை தான். அப்பா தேங்காத் துண்டங்களுடன், மாவீளக்கு மாவை ஆளுக்கொரு வாழை இலைத் துண்டில் அமிர்தமாகத் தருவார்.
மற்ற வீடுகளுக்கும் நான் பறப்பேன் மாவிளக்கு டப்பாவுடன்.
  கோவிந்தா  சரணம். அனைவரையும் காத்தருள்.

Sunday, September 04, 2016

நவசக்தி கணபதி பிறந்த நாள் வணக்கங்கள்

 1. என் அன்பு வினாயகா, அருமை கணபதியே,
  சிறு உருவத்திலும் பெரு உருவத்திலும் அரவணைக்கும் 
  கருணைக் கடவுளே.

  எந்த ஊர் சென்றாலும் அப்பா தேடுவது உன்னைத்தான்.
  திருமங்கலத்துக்கு ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் தனி ஆட்சி புரிந்து எங்கள் சின்னக் கவலைகளை எல்லாம் கேட்டுக் கொள்வார்.
  திண்டுக்கல்லில் வெள்ளைவிநாயகர்  எங்கள் கல்வியை  பூரணமாக்கி வைத்தார்.

  சென்னையில் பாட்டி வீட்டுக்கு வெளியில் இருந்தவர்   என் திருமணத்தை நிறைவேற்றினார் ..
  பின் புதுக்கோட்டைப்  பிள்ளையார் பிள்ளைப் பேறு கொடுத்தார்.

  சேலம்  ராஜகணபதி  பிள்ளைகளின் நோய்களை  நீக்கி ,
  திருச்சி உச்சிப் பிள்ளையார் கண்கண்ட தெய்வமாக  அணைத்து எங்களைச் சென்னையை நோக்கி ஆசிகளுடன் பயணிக்க வைத்தார்.
  இங்கே பார்க்கும் இடமேல்லாம் பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன.
  அவர் என்னைக் கைவிடுவதில்லை.

  கணபதி தாள்கள் சரணம்.
  Add caption
 2. அன்னை மனக்கவலையைப் போக்கினார்.
  திருச்சி உச்சிப் பிள்ளையார் கண்கண்ட தெய்வமாக  அணைத்து எங்களைச் சென்னையை நோக்கி ஆசிகளுடன் பயணிக்க வைத்தார்.
  இங்கே பார்க்கும் இடமேல்லாம் பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன.
  அவர் என்னைக் கைவிடுவதில்லை.
  சென்னையில்  மயிலை அனுமனும், நவசக்தி கணேசனும் என்றும் காவல்.
  எப்போதும் காவல். அப்பனே நீ இல்லாமல் நாங்கள் இல்லை. வழித்துணை நீயே ஐய்யா.
  கணபதி தாள்கள் சரணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Add caption
Friday, September 02, 2016

பயணம் இனிமை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
   அப்பா  இந்த பிளேன்ல ஏம்ப்பா டிவி இல்லை .பின் சீட்டிலிருந்து  மழலை. அப்பா சிரித்துக் கொண்டார். அம்மம்மாவிடம்   அடுத்தாற்போல் கேள்வி. அந்த பிளேன்ல சாக்கலேட் கொடுத்தாங்களே இவங்க என் தரவில்லை. என்ன அழகாத்  தமிழ் பேசுகிறது இந்தப் பாப்பா   என்று எனக்கு ஒரே மகிழ்ச்சி.
  இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்கவும் முடியவில்லை. முக்குனு வயசு இருக்குமா என்று யோசித்தேன்.   இந்த பிளேன் கிலம்பாதாப்பா.  கிளம்பும்   செல்லம். மற்ற பிளேன் எல்லாம் கிளம்ப  வேணும் இல்லையா.  ஓ சேரி. இங்கயும் நல்லாத்தான்    இருக்கு.   அப்பா இன்னும் கிளம்பலியே அடுத்த செகண்ட்.  பதில் இல்லை. அப்பா உங்களைத்தான் கேக்கறேன் என் கிளம்பவில்லை என்று பாப்பா சொன்னது   பைலட்டுக்குக் கேட்டது விமானம் உருள ஆரம்பித்தது.ஹய்யா இனி அடுத்து லண்டன்ல தான் இறங்குவோம் கைதட்டியது. எனக்கு உள்ளம் எல்லாம் சுகந்தம்.
 அய்யா இது என்ன இது உருண்டு  கிட்டே இருக்கு  மேலே கிளம்பலியே என் அப்பா.
இப்போ திரும்புமா.  அடுத்த பாதையில் திரும்புமா. வேகம் எடுக்கவே இல்லையப்பா.  பூமியில் தான் சக்கரங்கள் இருக்கின்றன.  ரொம்பச் சின்ன ப்ளெனோ .
அதெல்லாம் இல்ல குட்டி. அது அது முறைப்படி கிளம்பும். ஓ வரிசை என்று  என்று சமாதானப் படுத்திக் கொண்டது அந்தச் செல்லம்.
சட்டென்று கிளம்பியது விமானம். உடனே ஒரே உற்சாகம் .
அச்சோ  மனிதர்கள் எல்லாம் சிரிசாகிவிட்டார்கள். வீடுகள் பொம்மையாட்டம்.

மேகம் வந்துட்டது பா. நிலம்  தெரியாது.  இப்படிப் போகும் போது இங்க ஒண்ணுமே உன்னைக் கொடுக்க மாட்டார்களா  அப்பா.. அந்தப் பிளேனில் பால், மீன், இறைச்சி  எல்லாம் கொடுத்தார்கள் அப்பா என்று மீண்டும் வம்பு இழுத்தது.
தமிழ் தெரிந்தவர்கள் சிரித்துவிட்டார்கள்.

இது சிறிய பயணம் குட்டி.  நாம் லண்டனில் எல்லாம் சுவைக்கலாம் என்கிறார் அப்பா.
ஒரு வழியாக லண்டன் வந்தது.
இந்தப் பாப்பாவுக்கு அளவிட முடியாத  சந்தோசம்.
ஊஊஊ   இது கெட்டிக்கார பிளேன் . நம்மளை லண்டனுக்கு கொண்டு வந்து விட்டது. ரொம்ப ரொம்பக் கெட்டிக்கார பிளேன் என்று  சொல்லிக் கொண்டே வந்தது.

என்ன ஒரு இனிமையான பயணம் என்று நினைத்தபடி இறங்கினேன் நானும்  இரட்டைக் குடுமி துள்ளியாட தன தந்தையுடன் ஓடிவிட்டாள்  அந்தத் தேவதை.

Wednesday, August 31, 2016

லண்டன் அனுபவம் 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

லண்டன்  வந்ததும் பேத்தியின் அன்பு ஆக்கிரமித்துக் கொண்டது. மிக சுட்டி. அழகாகப்  பெரியவர்களை புரிந்து கொள்கிறது.

 என் முழங்கால் வலிக்கு உடனே டைகர்  பாம் கொண்டுவந்து கொடுத்து,  நிறைய நடந்தால் சரியாகிவிடும் என்று புத்திமதி சொல்கிறாள்.

என்னென்ன எல்லாம் எழுதுகிறேன்.  வாட்ஸ் ஆப் நல்லதா, முகநூல்
சரியா.  என்  படம் போடாதே என்ற கண்டிப்பும் கூடவே சொல்லிவிட்டது.
எட்டு வயதுக்கு  நல்ல கூர்மை . இன்னும் பள்ளி ஆரம்பிக்கவில்லை.
 
 பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லாததால் கொஞ்சம் சுணக்கம் .பாவம் குழந்தை.  குழந்தையை என்னிடம்   பேசிக்கொண்டிருக்கச்  சொல்லிவிட்டு நான் கணினியிலோ முகநூலில் உட்கார்வது சரியென்று தோன்றவில்லை . அனைவரும் வாழ்க  வளமுடன்.

Monday, August 22, 2016

நிலவு கண்ட காதலர்கள்

4th   February   1967.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

    ஒரு தை மாத நிலவு.
   ஒரு கணவன் மனைவி. இருவருக்கும் மிக இளவயது.
திருமணமாகி  ஒரு வருட பூர்த்தியைக் கொண்டாட
ஒரு திரைப்படத்தையும்  பார்த்துவிட்டு  வீட்டுக்கு
நடந்தே  வந்து கொண்டு இருந்தார்கள்.
 அதிக அரவற்றமற்ற சாலை. கடந்து போகும் பஸ்களின் வெளிச்சமும். திட்டு திட்டான
டீக்கடைகளும்  அவற்றிலிருந்து  வரும் வெளிச்சங்களுமெ
வழிகாட்டி.
நிறையப் பேச அவர்களது முதல் வருட வாழ்க்கையில் நேரமில்லை.
திருமணம் முடிந்த முதல் மாதமே கருத்தரித்ததாலும்,
பெண்ணின் பிறந்தகம் ,புக்ககம் மாற்றி மாற்றி அழைத்ததாலும்
 எப்பொழுதும் இருக்க வேண்டிய  பாசப் பரிமாறல்கள் குறைவே.
அந்த வாலிபனது பணியும் அவரை இறுக்கக் கட்டிப் போட்டதின் விளைவு.
பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.
ஆனால் அந்த ஒரு நல்லிரவு  நிலா வெளிச்சத்தின் நடையில் கைகள் பின்னிக் கொண்டு நடந்த போது ஒரு அரிய புரிதல் இருவருக்கும் உண்டானது.
உதடுகள் பேசாததை உள்ளங்கள் பேசியது அப்போதுதான் புரிந்தது.
அன்றிலிருந்து நிலவு அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியானது.
இந்த நொடி வரை அப்படித்தான்.
Add caption


Sunday, August 07, 2016

இன்று ஆடிப் பெருக்கு...நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நம் காவேரி
ஆடிப் பெருக்கன்று பதிவு செய்திருக்க வேண்டிய எழுத்து. வேலைகளுக்கு நடுவில் விட்டுப் போனது.  நாங்கள் திருச்சியில் வாழ்ந்த சிலகாலங்களில் பை பாஸ் ரோட்டுக்கு அடியில்  காவேரி தண்ணீரில்  ஓரமாகக் குழந்தைகளை விளையாட விட்டதுண்டு. அப்போதே ஓடை போலத்தான் ஓடிக்கொண்டிருந்தால் காவேரி.  இங்க விட  கல்லணை முக்கொம்பில் நிறையத் தண்ணீர் ஓடும் சார். அங்கே நீச்சல் கூட அடிக்கலாம் என்று அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் சொல்வார்கள்.
 நாங்கள் ஒரு தடவை முக்கொம்பு போய் வந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியாகிவிட்டது.
மறக்க முடியாதாகிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரிடம் பயம் இருக்கக் கூடாது என்பதற்காகவே  இந்த இடத்துக்கு அழைத்து வருவோம்.
 ஸ்ரீரங்கம், சமயபுரம் ,பைபாஸ் காவேரி பிறகு வீடு என்பது ஞாயிற்றுக் கிழமைகளில்  எழுதாத விதி முறைகள்.  ஜங்க்ஷன் வரும்போது எங்கள் கிபியட் சொல்லாமலேயே காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கும் பழைய புத்தகக் கடைக்குப் போய்விடும்.  ஆர்ச்சி, ஹார்வி  காமிக்ஸ், மார்வெல் காமிக்ஸ் என்று விதவிதமாக வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து
சப்பாத்தி செய்யத்தான் நேரம் இருக்கும். இனிய நாட்கள் அவை.

Friday, August 05, 2016

திரு ஆடிப்பூரத் திரு நாள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 1.  அருள் மிகு ஆண்டாள் ரெங்கமன்னார்  வில்லிபுத்தூரை வலம் வருகிறார்கள்.

  .

  .ஆடி வெள்ளி
அதிலும் பூர நட்சத்திரம். 
கோதையின் அவதார நாள். பத்து நாட்களாக நடைபெறும் திருவிழா. அன்னையும் அப்பனுமாக வெவ்வேறு வாகனங்களில்  ,
அரசன் அரசியாக வில்லிபுத்தூரை வலம் வருகிறார்கள்.
கண் நிறையும் காட்சி.
திருமஞ்சனம் முடிந்ததும் கையில் ஏறும் கிளிக்குத் தான் எத்தனை தாபம்.
 அதை உணர்ந்தது போல இருவர் முகத்தில் பளபளக்கும் குறு முறுவல்.
தெய்வ அனுபவம் .மகன் ஏற்பாடு செய்திருக்கும் இணைப்பில் 
காலையில் பார்த்துக் களித்த காட்சிகள். இன்னும் தேர் உலா வரவில்லை. அது நாளைக்கோ என்னவோ.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் அழகைக் கண்டுதான் உணர வேண்டும்.
வலையில் தேடிய போது கிடைத்தக் காட்சியைப் பதிந்திருக்கிறேன்.
ஆண்டாளும்  வடபத்ர சாயியும் நம்மை எப்போதும் ஆண்டு அருளட்டும்.
Add caption

Wednesday, August 03, 2016

யாரடி வந்தார்........Swiss effect.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நேற்று ஆடிப்பெருக்கு.  எல்லாப் பொருட்களும் எடுத்துவைத்தாச்சு.
வடை சுட ,எண்ணெய் இல்லை. மகனுக்குத் தொலைபேசினால் வீட்டின் அடித்தளத்தில் இருப்பதாகச் சொன்னான்.
சரி அங்க போய்ப் பார்க்கலாம் என்று  வாசல் கதவைப் பூட்டி, லிகிப்ட்டில் இறங்கி   செல்லர் கதவைத் திறக்கப் போனால் அங்கிருந்து  தமபதியார் இருவர் வெளியே வந்தனர்.
நான் ஹா வென  பின்னால் என் குரல் கேட்டு அவர்கள் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு விட்டார்கள். ஹா ஹா.
அந்த மனுஷர் என்னை ஒரு டெர்ரரிஸ்ட்ன்னு நினைச்சுட்டாரோ என்னவோ, வழமையான உடுத்தும் ஜீன்ஸ் ஷார்ட் போடாமல் சல்வார் அதுவும் ஒரு மெஜந்தாகி கலரில் கண்ணைப் பறிக்கும்  சல்வார்,பெரிய பொட்டு ....பாவம் அவர்களை பயமுறுத்தி இருக்க  வேண்டும்.

ஒரே ஓட்டமாக மாடி ஏறியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
சாமி. ................அம்மா பயப்படலை. ஐயா தான் பயந்துவிட்டார்.
எனக்கு அங்க எண்ணெயும் கிடைக்கவில்லை. லிப்ட்டில்    ஏறி ய பிறகு
இனம் புரியாமல் சிரிப்பு . எனக்கு.
கொஞ்ச எண்ணெயில் வடை பொறித்து,தேங்காய் சாதம்,தயிர் சாதம் செய்து முடித்து விட்டேன்.
சாயந்திரம் வந்த மகனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும்,
டெரரிஸ்ட் பட்டம் வாங்காத தெரிஞ்சியே  அம்மா. என்று சிரிக்க ஆரம்பித்தான்.
எனக்குச் சொல்லி முடிப்பதற்குள்  மீண்டும் மீண்டும் நகைப்புத்தான்.
பாவம் அந்தத் தம்பதியினர் இனிமேல் படிகள் வழியாகத் தான் போவார்கள் என்று நினைக்கிறேன்.
எலிவேட்டரில் என்னைச் சந்திக்கும் பாக்கியம் அவர்களுக்கு வேண்டாம். ஹா ஹா.


Tuesday, June 28, 2016

இரட்டை அதிசயம்..............

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption   கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. ஒரு நடுத்தர வயது
தம்பதியினர் வீட்டுக்கு வந்திருந்தனர். கல்கத்தாவைச் சேர்ந்த தமிழ் மக்கள்.
இராமேஸ்வரம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நானும் சிங்கமும் அவர்களை  நம் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போகுமாறு கேட்டுக் கொண்டோம்.
.
இருவருக்கும் 60க்குள் தான் இருக்கும்.
ஒரே மகன். திருமணமாகி இருந்தது. குழந்தை இல்லை.
சேது, ராமேவரத்தில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தால்
குழந்தை  பிறக்க வாய்ப்பு உண்டு என்றதால் இவர்கள்
வந்திருக்கிறார்கள்.
நான் கேட்டேன்  ஏன் மகன் மருமகளையும் அழைத்து வரவில்லை என்று.
நம்பிக்கை இல்லை என்று சுருக்கமாகச் சொன்னார்.
இருவர் முகத்திலும் கவலை. நாங்கள் எங்களால் முடிந்த அளவு
சமாதானப் படுத்தினோம்.
போய்த்திரும்பும் வழியில்   இங்கே வருமாறு சொன்னோம்.
 அதே போல்  4,5 நாட்களில் அசதியோடு ஆனல் மகிழ்ச்சியாகத் திரும்பினார்கள்.
சேது,திருப்புல்லணை ராமன்,தேவிபட்டினம் ,கடைசியில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் என்று
எல்லா இடங்களிலும் செய்ய வேண்டிய கர்மாக்களைப் பூர்த்தி செய்து ,
கடவுள் தரிசனமும் செய்துவந்த திருப்தி முகத்தில் தெரிந்தது.
   சென்னையில்  உள்ள உறவுகளைப் போய்ப் பார்த்துவிட்டுக் கல்கத்தாவுக்குப் போய் நல்ல சேதி அனுப்புவதாக  உற்சாகமாகக்  கிளம்பினார்கள்.

மகனுக்கும் தொலைபேசியில் பேசிவிட்டுத் தான் பயணம்.

  கல்கத்தா சென்ற இரண்டு மாதத்தில் தொலைபேசியில் நல்ல செய்தி சந்தோஷம் கொப்பளிக்க வந்தது.எல்லாம் பகவத்  சங்கல்பம் .
  அவர்களின் மகனிடமும் பேசினோம்.வாழ்த்துகளைச் சொன்னோம்.
மாமா  அவர்கள் கிளம்பும்போதே  அவள்  எக்ஸ்பெக்டிங்க் தான். அவர்களது
முயற்சியை நிறுத்த வேண்டாம் என்றுதான்  நான்  சொல்லவில்லை.
  என்று சிரிக்கிறான் அந்தப் பிள்ளை.
  வரப் போகிற குழந்தை ப்ரி மெச்சூர் பேபி,கொஞ்சம் சீக்கிரம் பிறந்து விட்டது என்று சொல்லப் போகிறேன்.
நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் மாமா.
உங்களுக்கு கல்கத்தா ட்ரிப் இருக்கிறது என்று சொன்னான்.
ஓகே டா. உன் ரகசியம் எங்கள் ரகசியம். அப்புறமாவது சொல்லிவிடு
என்றபடி தொலைபேசியை வைத்தார்.
வந்த குழந்தை  அத்தனை சிரமம் வைக்கவில்லை. வைத்தியர் சொன்ன நேரத்துக்கு
தள்ளி பத்து நாட்கள் கழித்துதான் பிறந்தது.
 அதுவும் இரட்டைக் குழந்தைகள். ஒன்று  துர்கா. மற்றொன்று ரமேஷ்.
யார் ஜெயித்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை.

Tuesday, June 21, 2016

கண்களின் மொழி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  வலது கண் தொய்வது போதாதென்று இடது கண்ணும் தொய்ய ஆரம்பிக்கிறது.

எழுதுவதும் படிப்பதும் கடினமாகும் போது பதிவுகளைப் படிப்பதும் பின்னூட்டம்
இடுவதும்  தடைப் படுகிறது.

அருமையான பதிவுகளைப் படிக்காமல் விட்டு விடுகிறேன் நண்பர்கள் மன்னிக்கணும்.Monday, May 30, 2016

#அமெரிக்க அனுபவம் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்#அமெரிக்க அனுபவம் 6
++++++++++++++++++++++++++++
 கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல மெல்ல விழிக்கிறது.
அவளும் நானுமாகப் புதிய செடிகளைப் பதியன்  செய்து கொண்டிருந்த போது, அடுத்த தெரு ஆண்ட் ரூ தன் குட்டி செல்லத்துடன்   வாக்கிங்க் வந்து கொண்டிருந்தார்.
 பெண் அவரிடம் அவர் மனைவியின் உடல் நலம் விசாரித்தாள்.
 இப்போது கொஞ்சம் நினைவுக்கு வருகிறது.
ஹர் மெமரி இஸ் கெட்டிங்க் பெட்டர்  என்று சொல்லி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டுச் சென்றார்.
என்ன விஷயம். மெலனி நன்றாகத்தானே இருந்தாள் என்று விசாரித்தேன்.
50 வயது மெலனிக்கு  இருமல் ,காய்ச்சல் என்று ஒருவாரம் அவதிப்பட்டுப் பக்கத்து ஹாஸ்பிடலுக்குப் போய் எல்லா சோதனைகளையும் செய்து ஒன்றும் பயனில்லையாம்.
அவள் கூட நீச்சல் பயிற்சி செய்யும் இன்னோரு வைத்தியர்
அவளைத் தன் க்ளினிக்கிற்கு   அழைத்துச் சென்று
சோதனைகள் செய்திருக்கிறார்.
உடனே முடிவுக்கு வந்தவராய்  எட்வார்ட் ஹாஸ்பிடலில்   சேர்த்து சிகித்சை மேற்கொண்டதில் உயிர் பிழத்தாளாம். இருதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்
 சேதமடைதிருக்கிறது. அதனால் காப்பாற்றப் பட்டாலும் ஞாபக மறதி வந்துவிட்டது.
மூன்று குழந்தைகளின் பெயரெல்லாம் மறந்துவிட்டுக் கணவனையும் ஜோ என்று அழைத்து வந்திருக்கிறாள்.
இந்த ஆறு மாதத்தில் எத்தனையோ முன்னேறி இருக்கிறாள்.
 மகள் கேட்டதும் அவர் முகம் மலர்ந்து தன் பெயர் அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
இனி கார் ஓட்டப் பழகப் போகிறாள்.
ஷி வில் பி ஃபைன் யூ ஸீ என்று நடையைத் தொடர்ந்தார்.

எல்லா ஊரிலும் எல்லா மருத்துவமனைகளும் சிறப்பு என்று சொல்ல முடியாது.
அதே போல் சிறப்பில்லை என்றும் முடிவு கட்ட முடியாது.
அந்த  சினேகிதர் கவனித்திராவிடில் அவள் இரத்தக் குழாய்   உடைபட்டு இறந்திருப்பாள்.கடவுள் கருணை மிக்கவர்.
வாழ்க வளமுடன்.