Blog Archive

Thursday, September 03, 2015

பைத்தியக்கார தோசை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  30  வருடங்களுக்கு  முன்னால்  செய்த  பலகாரம்.
வீட்டுக்கு  வந்த உறவுக்கார   அம்மாவுக்கு    என் திறமைகளில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம்  இல்லை.
  என் மாமியார் என்னை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.  
இந்த   அம்மா  வந்த நேரம் நாங்கள் எல்லோரும் சாயந்திர பலகாரம் முடித்துவிட்டு   பள்ளி சென்று வந்த பிள்ளைகளுக்கு உணவு   கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த நேரம்.
அப்போது   வண்டியில்  வந்து இறங்கினார்  இந்த அம்மா. 
இவரை அவ்வளவாக ரசிக்க  மாட்டார்கள் குழந்தைகள்.
அதனால் வேகமாக  மாடிக்கு ஓடிவிட்டார்கள்.

மாமியாரே சுதாரித்துக் கொண்டு அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார் ஆனார்.
நான் சமையலறைக்குள் செல்லத் தயாரானேன்.😅😅😅😅😣
உடனே  என்னை அழைத்துவிட்டார். 
இன்னிக்கு  என்ன பலகாரம்   என்று கேட்டார்.  ப்ரெட் உப்புமா என்றேன்.
ஏகாதசி ஆச்சே. எப்படி    நீ இதை  அனுமதிக்கிறாய்  கமலா என்று என் மாமியாரிடம் கேட்டார். மாமியார். இங்க குழந்தைகளுக்குத்தான் முதலிடம். எனக்கு   எப்பவும் ப்ரெட் பிடிக்கும். நான்  விரதங்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்   டயபெடிஸ்க்கு ஒத்துக்காது என்று விட்டார் அம்மா.
அப்ப எனக்கு ஏதாவது பலகாரம் செய்து கொடு ரேவதி.கபாலி 
கோவிலில் இருந்து வருகிறேன்.அர்ச்சனை அது இதுன்னு நேரம் போய்விட்டது.
வீட்டுக்குப் போவதற்கு நேரமாகும் .செய்கிறாயா  என்றார்.

நான்  அக்ஷயப் பாத்திரத்தைக் கவிழ்த்த திரௌபதி  போல விழித்தேன்.
மாமியார் உதவிக்கு வந்தார். ரவா கரைச்சு  தோசை வார்த்திடும்மா. என்றார். அவருக்குத் தெரியாது.
பக்கத்துவீட்டிலிருந்து அப்பத்தான் வேலைக்காரப் பெண் வந்து   இருந்த   ரவையை வாங்கிக் கொண்டு போயிருந்தாள். 
அரிசி உப்புமா செய்யட்டுமா என்று கேட்டேன்.
வேண்டாம் . நீ செய்யும்  ரவாதோசைதான் வேணும். என்றார் அந்த அம்மா.
 ஸ்டோர் ரூமுக்குப் போய் ஆராய்ந்தேன்.
மாதாந்திர   ஜாபிதா  எழுதி வைத்திருந்தேன்.
அப்போதுதான் சென்னகேசவ செட்டியார் கடைக்குத் தொலைபேசி இருந்தேன்.வர ஒரு மணி நேரம் ஆகும். எல்லாப் பொருட்களும் கடைசி லிமிட்டுக்கு  வந்திருந்தன. 
பலகார மாவுகளைச் சேர்த்தேன். சேமியா, ரவை,கோதுமைமாவு,அரிசிமாவு,கடலை மாவு.  எல்லாவற்றையும் மோர் விட்டுக் கலந்து  சீரகம் தாளித்து   இரண்டு மூன்று ,நாலு என்று தோசைகளும் வார்த்து விட்டேன்.
முதல் தோசை முரண்டு பிடித்தது. கரண்டியும் தோசைக்கல்லும்  யுத்தம் சத்தமில்லாமல் செய்தன.
பிறகு சரியாகி விட்டது.

மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த  பெரியம்மாவிடம் கொடுத்தேன்.
என்ன தோசை இது என்று சந்தேகத்தோடு.பார்த்தார்.  பஞ்சவர்ணத்தோசை. எங்க பாட்டி செய்வார் என்று சொன்னேன்.
நான் இதற்குப் பைத்தியக்கார தோசைன்னு பேர் வைக்கிறேன்.  
என்றார். 
மாமியார் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
எனக்குக் கோபம் வரவில்லை.
இப்படிப் பெயர் வைக்க இன்னோரு பைத்தியத்தால் தான் முடியும் என்று பிறகு மாமியார் சொன்னதும் சிரிப்புதான் வந்தது.
சிங்கமும் அப்போ வந்து இந்தத்  தோசை சாப்பிட்டார். வெங்காயம் ஏம்மா போடலை. சூப்பரா இருக்குன்னு  மாடிக்குப் போய்விட்டார்.
புராணம் முடிந்தது. அதற்குப் பிறகு இந்தத் தோசை வார்க்கவில்லை.
 சென்னகேசவலு செட்டியார் கடையிலிருந்து 
எல்லா  மளிகைப் பொருட்களும் வந்து சேர்ந்தன.
பெருமூச்சுடன் 😀  எல்லாவற்றையும் எடுத்துவைத்தேன்.
மனிதர்களில் இப்படியும் சில பேர்.

11 comments:

Nagendra Bharathi said...

அருமை

ஸ்ரீராம். said...

பத்திய, கார தோசை.... பைத்தியக்கார தோசை!

இவ்வளவு பொருட்களை இட்டும் தோசை எடுபட்டதே... பெரிய விஷயம்தான்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நல்லா இருக்கு அம்மா...

Abi Raja said...

பஞ்சவர்ண தோசையா ??? நீங்க சாப்பிடலையா அம்மா?அந்த அம்மா என்ன சொன்னாங்க அத சொல்ல வே இல்லையே

வல்லிசிம்ஹன் said...

அட பத்திய கார தோசை. பதம் பிரித்தால் வெகு அழகு ஸ்ரீராம்..

பேரு வச்ச வேளை அப்புறம் செய்யவே இல்லை மா.
உண்மைதான் தோசைக்கல்லை விட்டு அது வெளியே வந்ததே அதிசயம்.

அந்த அம்மா வேற தோசை வார்த்த கையை கல்லில வச்சுத் தேய்க்கணும்னு சொல்கிற டைப்.................





.













வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்,. பதிவர் மீட்டிங்குக்கு தோசை வார்த்துடலாமா
..........]]]]]]]]]]]]

வல்லிசிம்ஹன் said...

அந்த அம்மா சாப்பிட்டாங்களே. நல்ல பசி.
பாராட்டி ஒண்ணும் சொல்லலை. அபிநயா.
நானும் சாப்பிட்டேன் வித்தியாசமா இருந்தது.........]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

அப்பாதுரை said...

அடடே! ஸ்ரீராம் அங்கே இருந்திருக்கணும்!

சமீபத்தில் கோதுமை தோசை என்று என் நண்பனும் நானும் சேர்ந்து கூத்தடித்தோம். கோதுமை மாவிலே தோசை வார்க்கலாம்டா - அரிசி சுகராச்சே என்று ஏதோ சொல்லி கோதுமை மாவை கரைக்க கரைக்க அது அங்கேயும் இங்கேயும் ஈஷிக்கொண்டு.. கல்லில் வார்க்கத்தொடங்கினால் உப்பிக்கொண்டு.. ஒரு மாதிரி ஈரத்துணி வாடையுடன்.. யாராவது வேண்டாத விருந்தினர் வந்தால் கொடுத்திருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அடக் கடவுளே துரை.
கோதுமை மாவும் அரிசி மாவும் சேர்த்தால் நல்ல தோசை வார்க்க வருமே.

அடுத்த தடவை சரியாகப் பண்ணிடுங்க.
ஈரத்துணி வாசனையா. பெருமாளுக்குத்தான்
உடுத்திகளைந்த பீதக ஆடை என்று கொடுப்பார்கள். திருப்பதி
கோவிலில் பார்த்திருக்கிறேன்}}}}}}}}}}}}}}}}}}}}}}

'பரிவை' சே.குமார் said...

பைத்தியக்கார தோசை...
ஹா... ஹா...
சமயோகிதம்...
அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமார். அம்மான்னு சொன்னதுமே நான் பட்ட சிரமம் எல்லாம் போய்விட்டதுப்பா. நன்றி குமார்.