எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
****************************************************************
அக்டோபர் 31 பார்த்து,
நவம்பர் 1 ஆம் தேதி செங்கல்பட்டு சந்திப்பில் ரயில் ஜன்னலில்
மீண்டும் உறுதி செய்து கொண்ட அன்பு
திருமண நாளுக்காகக் காத்து இருந்தது..
சிங்கத்தின் மாமா எனக்குப் பெரியப்பா.
அவர் இறைவனடி அடைந்து 6 மாதங்களே ஆகி இருந்தன.
பெரியப்பாவின் மகனும் இவரைப் போலவே உயரம். ஆனால் 5 வயது
இளையவர்.
பசுமலை வழியாகத் தான் அவர் படிக்கும் தியாகராகஜா எஞ்சினீயரிங்க் கல்லூரிக்குப் போக வேண்டும்.
ஒரு நாள் வாசலில் மாலையில் நான் உட்கார்ந்திருக்கும்போது
இந்த அண்ணா பஸ்ஸிலிருந்து தலை நீட்டிப் பார்ப்பது தெரிந்தது.
அப்பாவிடம் சொன்ன போது, பாவம் நன்றாகப் படிக்கணும் அந்தப் பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்.
அடுத்தனாள் சனிக்கிழமை சாயந்திரம்,
திடும் திடும் என்று மோட்டார் சைக்கிள் சத்தம். அப்பாவின் இன்னோரு தம்பி
பைக் வைத்திருந்தார்.
அப்பா, சித்தப்பா வருகிறார் போல இருக்கு என்றவாறு
படிகளில் இறங்கி போகன் வில்லா வளைவில் போய் நின்று ஆவலுடன் பார்த்தேன்.
அந்த பைக் நிற்காமல் கடந்து விட்டது. ஏமாற்றத்துடன்
திரும்னபினவளுக்கு சட்டென்று அண்ணா முகமும்,
மனதில் பதிந்த முகமும் நினைவுக்கு வர மீண்டும் திரும்பிப் பார்த்தேன்.
அதே பைக் மறுமுனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததது.
அவர்கள் இருவரும் தான்.
நான் திறந்த வாயை மூடி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.
மெதுவாக எங்கள் வீட்டைக் கடந்த பைக் வேகமெடுத்து மறைந்தது.
ஏதோ சோகம் படிய நான் உள்ளே வந்துவிட்டேன்.
அப்பாவும் அம்மாவும் ஏன் ஏதாவது ஊர்வலமா, இல்லை சினிமா நோட்டீசா
ஏ ன் வாசலுக்கு ஓடினே என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெம்பில்லை.
அவ்வளவு பதட்டம் உடம்பில்..
அந்த ஞாயிறு பெரியம்மாவிடம் கல்யாணம் பற்றிப் பேச
பெற்றோர் போய் வந்தனர். அப்போது பெரியம்மா சிங்கம் இரண்டு நாள் வேலையாக வந்துவிட்டுப் போனதைச் சொன்னாராம்.
ரொம்ப நல்ல பிள்ளை.
நான் கூட பசுமலைக்குப் போய் வருகிறயா என்று கேட்டதற்கு
அதெல்லாம் சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.
அன்று எனக்கு வந்த சிரிப்பு
இன்னும் புன்னகை வரவழைக்கிறது.
10 comments:
ஒரே த்ரில்லிங்காக இருந்திருக்குமே! அருமை! நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் நினைவுகள்.இது புதுசு! :)
அருமை
பழைய இனிமையான நினைவுகள் அருமை.
நிஜமாகவே சில் நினைவுகள்தான். சுவாரஸ்யம்.
மதுரை நினைவுகள் என்றும் மதுரம் கீதா..
அவருடைய கடிதம் ஒன்று புத்தகங்களுக்கிடையில் கிடைத்தது. அதில்
உன்னைப் பார்க்கத்தான் சொக்கிகுளத்திலிருந்து வந்தேன். நீ
என்னடா என்றால் என்னை மறந்துவிட்டாய் என்று
கேலி செய்திருந்தார்.>
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
நன்றி நாகேந்திர பாரதி.
நன்றி மா கோமதி.. அசை போட்டு அசைபோட்டு மற்றவைகளை மறந்து விடுகிறேன்.>}}}}}}}}}}}
நன்றி ஸ்ரீராம்..
பழைய சாதமும் தயிருமாகச் சாப்பிட்ட நிறைவு.
//திரும்னபினவளுக்கு சட்டென்று அண்ணா முகமும்,
மனதில் பதிந்த முகமும் நினைவுக்கு வர மீண்டும் திரும்பிப் பார்த்தேன்.
அதே பைக் மறுமுனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததது.
அவர்கள் இருவரும் தான்.
நான் திறந்த வாயை மூடி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.
மெதுவாக எங்கள் வீட்டைக் கடந்த பைக் வேகமெடுத்து மறைந்தது.
ஏதோ சோகம் படிய நான் உள்ளே வந்துவிட்டேன்.//
60 களிலேயே மைத்துனருடன் உங்களை பார்க்க வந்து விட்டு , அதெல்லாம் சரியாய் இருக்காது என்று வேறு .... :)))
ஆனால் ஏன் ஏதோ சோகம் படிய உள்ளே வந்து விட்டேன் என்று எழுதி இருக்கீங்க .
ஏன் சோகம் ?
சசிகலாமா நின்னு நிதானமாகப் பார்க்க முடியவில்லை. அப்பா என்ன நினைப்பாரோ என்கிற பதட்டம். 17 வயதுக்கான உணர்ச்சிகள்.
எல்லாம் தான்.ஏக்கம்னு தான் சொல்லி இருக்கணும். நன்றி. ராஜா.
Post a Comment