Blog Archive

Monday, August 17, 2015

மாற்றம் ஒன்றே மாறாதது.


  • எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  • முன்பு எப்பொழுதோ  முதுமை வருவதும் ,அதை  எப்படி சமாளிப்பது என்றும் 
    • எழுதிய  நினைவு.
    • ஆறெழு வருடங்கள் இருக்கலாம்.

    • சுவாரஸ்யமான விவாதங்கள் தொடர்ந்தன.கண்முன்னே 
    •  நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தேறி விட்டன.
    • முதுமை முழுதாக வரவில்லை என்றாலும் அதற்கான அலுப்பு வந்துவிட்டது.

    • சென்னையில்  பக்கத்துவீட்டை இடித்துக் கட்டப் போகிறார்களம்.
    • 1972இல்  கட்டப்பட்ட  பத்து வீடுகளில் எங்கள் வீடு மட்டும் இனி
    • தனியே தெரியும். மற்றவீடுகள் ஏற்கனவே  மாறி யாச்சு,.

    • பாட்டி  எப்படித் திட்டம் போட்டாரோ .தன்னிடம் இருந்த  நிலங்களைக் கூறு போட்டு
    • விற்றுவிட்டு, வீட்டையும்  இடிக்க ஏற்பாடு செய்யும் போது  மனம் என்ன
    • பாடு  பட்டதோ.
    • அந்தப் பெரிய வீட்டை இடிக்க பத்து மாதங்கள்  தேவைப்பட்டது.

    • பாட்டி  வீட்டை  இடிக்கும்போது ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லையாம்.
    • புது  வீடு கட்டும்போது மட்டும்  வந்து பார்த்து செய்ய வேண்டிய 
    •  வேலைகளைச் சொல்லி இருக்கிறார்.
    • சிறுகக் கட்டிப் பெருக வாழ நினைத்து வந்தது. அவரது 80ஆவது வயதில்.
    • அப்போது என் மாமனாரும் மாமியாரும் அவருக்குத் துணை.

    • அதற்குப் பிறகு பல மாற்றங்கள். ஓய்வெடுத்து  இருக்க நினைத்தபோது நாங்கள்
    • ஐவரும்  வந்தோம்.
    • சிங்கத்துக்குச் சென்னைக்கான மாற்றல்.

    • வேறு வீடு பார்த்துக் கொண்டு போக  பாட்டி அனுமதிக்கவில்லை. மயிலையில்
    • குழந்தைகள்  படிக்கட்டும்.
    • தன் பேரன் மவுண்ட் ரோட் போய் வர பஸ்ஸும் வீட்டு வாசலில் வந்து கொண்டு இருந்தது.
    • தங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது என்று தீர்மானித்துவிட்டார்.

    • இது நடந்து  நாற்பது வருடங்கள் ஓடியாச்சு.

    • இப்போது மீண்டும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்று 
    • இந்த  சிறுவீடு  கேட்கும் காலம்.  ஒன்றும் செய்யப் போஅதில்லை. உனக்கு வயசாகவில்லை.
    • இன்னும் திடமாக இருக்கிறாய். எங்கள் அடைக்கலமே நீதான்.  நலமுடன் 
    • இன்னும் பலகாலம் நலமாக இரு என்ற சேதியை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

    11 comments:

    ஸ்ரீராம். said...

    பக்கத்து வீட்டை இடித்துக் கட்டப்போவது இப்போதைய செய்தியா, பழைய செய்தியா?

    ஸ்ரீராம். said...

    பக்கத்து வீட்டை இடித்துக் கட்டப்போவது இப்போதைய செய்தியா, பழைய செய்தியா?

    வல்லிசிம்ஹன் said...

    புது செய்தி ஸ்ரீராம். வீட்டைக் காலி செய்து வேறு இடம் போய்விட்டார்கள். இன்னும் பத்து மாதங்களில் முடிந்துவிடுமாம். வீட்டுக்குள் லிஃப்ட் எல்லாம் வைத்துக் கட்டப் போகிறார்களாம். பங்களூர் காண்ட் ராக்டர்.

    திண்டுக்கல் தனபாலன் said...

    மனதிற்கு வயசில்லை... திடமாக வைத்துக் கொள்ளுங்கள் அம்மா...

    Geetha Sambasivam said...

    ம்ம்ம்ம்ம்ம், அம்பத்தூரில் எங்கள் தெருவிலும் இப்படித்தான் இரு பக்கத்து வீடுகள், எதிர் வீடுகள் என இடித்துக் கட்டிக் குடியிருப்பு வளாகமாக மாறி ஐந்து அல்லது ஆறு பேர் மட்டுமே இருந்த வீடுகளில் ஒரு வீட்டுக்கு நான்கு, ஐந்து நபர் என கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேல் மக்கள் குடிவர, எங்கள் வீடு மட்டும் இல்லை, நாங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்க் கிளம்பி இங்கே ஶ்ரீரங்கம் வந்து நான்கு வருடம் ஆகப் போகிறது. விளையாட்டுப் போல் இருக்கிறது. அரங்கன் காப்பாற்றி வருகிறான். :) ஆண்டாளம்மாவும் சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டாள். :)

    வல்லிசிம்ஹன் said...

    வரணும் தனபாலன்.
    மனதிற்கு உரம் நல்லோர் சங்கம்.
    தமிழும் சேர்ந்தால் இன்னும் சிறப்பு.
    திடமாகஏ இருக்கிறேன் அப்பா. கடவுள் காப்பார். நன்றி அப்பா.

    வல்லிசிம்ஹன் said...

    ஸ்ரீரங்கன் உங்களை அழைத்துத் தன்னிடத்தில் இருத்திக் கொண்டது அருமையிலும் அருமை
    கீதா. உங்கள் இருவரின் மேன்மையான குணத்திற்கு என்றும் குறைவு வராது.

    நகரம் மாறிக் கொண்டே வருகிறது. நல்ல வழியில் மாறுகிறதா என்று தெரியவில்லை.
    தண்ணீர்க் கஷ்டம் கொண்டு வருகிறது இந்த மல்டி ஸ்டோரி கட்டிடங்கள் தான்.
    ஸ்ரீரங்கமாவது மாறாமல் இருக்கணும். பகவான் சித்தம்.

    ”தளிர் சுரேஷ்” said...

    பார்த்து பார்த்துக் கட்டிய வீட்டை இடிப்பது என்றால் கஷ்டம் இருக்கவே செய்யும்! செப்பனிட்டு சீர்பண்ண முடியும் வரை அப்படியே தொடரலாம்!

    வெங்கட் நாகராஜ் said...

    அடடா இன்னுமொரு பழைய தனி வீடு இடிபடப் போகிறதா? அங்கும் அடுக்கு மாடி கட்டிடம் வந்துவிடும்! :( திருவரங்கத்திலும் எங்கெங்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள் தான் - வீதிகளில் கூட பழைய வீடுகளை இடித்து அடுக்கு மாடிகள் [இரண்டு மாடி மட்டும்!] கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

    Ranjani Narayanan said...

    சொந்த வீட்டின் மேலும் பாசம் வைத்துவிடுகிறோமே! பல வருடங்கள் அங்கே இருந்ததினாலும், நிறைய இனிமையான நினைவுகள் அந்த வீட்டைப் பற்றி நினைத்தவுடன் வருவதாலும், சொந்த வீடு என்பது ஒரு பிரிக்க முடியாத பந்தமாகிவிடுகிறது.
    ஸ்ரீரங்கத்தைப் பற்றி வெங்கட் சொன்னது ரொம்ப நிஜம். நாங்கள் சிறுவயதில் பார்த்த ஸ்ரீரங்கம் எங்கே என்று கேட்க தோன்றுகிறது.

    இங்கும் பெங்களூரில் பழைய வீடுகளை இடிப்பதைப் பார்த்தால் மனதிற்கு மிகுந்த வருத்தம் ஏற்படும். இதைப்போலஓர் வீட்டை எழுப்ப யார்யார் எப்படியெப்படி பாடுபட்டார்களோ என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை.

    வல்லிசிம்ஹன் said...

    ஆமாம் தளிர் சுரேஷ். அதுதான் இப்போதைய திட்டம். நன்றி மா.