எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
பயணங்களில் இனிய நினைவுகள்
***************************************************
திருச்சி, சேலம் நகரங்களில் இருக்கும் போது
அடிக்கடி சென்னைக்கு வந்து சிங்கத்தின் பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவோம்.
அப்படித் திரும்பி வரும் அழியில் விக்கிடரபபாஅண்டி அருகே எங்கள் ஃபியட்டுக்கு
உடம்பு அரியில்லாமல் போயிட்டது. அப்போதெல்லாம் மரங்கள் அடர்ந்த சாலை ஒரு வழிப் போக்காக்த்தான் இருக்கும்.
சிங்கம் பானெடைத் திறந்து பார்க்கவும் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தவேண்டுமே. அங்கேயே வயலருகில் குடிசையில் அமர்ந்திருந்த
பதம்பதிகள் வெளியே வந்தார்கள்.
சாமிக்கு தண்ணி ஏதாவது வேணுமா. சூடேறிக்கிடுச்சா என்றபடி வந்தான் அந்த இளைஞன்.
பிள்ளைங்களும் ,அம்மாவும் இப்படி பெஞ்சில உக்காரட்டும் வாங்கம்மா
என்றழைத்தாள் அந்த இல்லத்தரசி.
முதலில் தயக்கமாக இருந்தாலும் வெய்யில் சகிக்காமல்
அந்த வேப்ப மரத்தடி பெஞ்சுக்கு வந்துவிட்டோம்.
அதற்குள் சிங்கம் கார்புரேட்டர் கோளாறாகிட்டதும்மா. நான் திண்டிவனம் வரை போய் ரிப்பெர் செய்து எடுத்துவரணும்.
வுட் யூ பி ஓகே என்றார் கவலையோடு.
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அவரைத் துரிதமாகப் போய் வரச் சொன்னேன்.
மீண்டும் அருகில் வந்து எங்கள் சுக நலங்களை விசாரித்தனர் தம்பதியர்.
எங்க சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்காதே என்னப்பா சாப்பிடுவீங்க என்றாள்
அந்தக் கறுப்பழகி வனமல்லி.
நான் மதுராந்தகம் போய் இட்லி வடை வாங்கி வரவா என்றான் அந்த வாலிபன் புருஷோத்தமன்.
நான் இருவரிடமும் அன்பைத்தான் பார்த்தேன்.
இரவுக்கு என்ன சாப்பிடுவீர்கள் என்றதும்
கத்திரிக்காய் கடைஞ்சு,சாதம் வடிச்சிடுவேன் மா.
புழுங்கலரிசிதான் என்றாள்.
எங்களுக்குக் கொடுத்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்றேன்.
இல்லமா. இந்தக் காணி முழுவதும் எங்களதுதான்.
நாங்க சாமி புண்ணியத்தில் செழிப்பாகத் தான் இருக்கிறோம் என்றாள் மல்லி.
சிறிது நேரத்தில் நானும் அவளுடன் குடிசைக்குள் வந்துவிட்டேன்.
அழகான அமைதியான் இடம். இருள் தெரியாமல் சிம்னி விளக்குகள்.
இறகு நிதானமாக எரிய 45 நிமிடங்களில் அமுதமாகச் சமத்து இட்டாள்.
தொட்டுக்க (உணக்கையாக!) மிளைகாய்,கருவேப்பிலைத் துவையல்.
பத்து மணி அளவில் சிங்கம் வந்தார் வெற்றிகரமாக.
கையில் குழந்தைகளுக்கான பிஸ்கட், சாக்கலெட்,ப்ரட்.
அதில் சாக்கலட்டை அந்த இனிமையான தம்பதிகளுக்குக் கொடுத்து,
பெட்டியிலிருந்து புதிதாக வாங்கி இருந்த கண்ணாடி வளையல்கள் ,குங்குமம்
எல்லாவற்றையும் ஒரு சொளகில் வைத்து அவளிடம் நீட்டினேன்.
அவள் கொண்ட நாணமே அழகாக இருந்தது.
ஐயா சாப்பிடலீங்களா என்றார்.
நான் அங்கேயே சாப்பிட்டுவிட்டேன் மா.
இப்ப கிளம்பினால் திருச்சி சேர 1 மணி ஆகீடும்.
என்றார்.
பாரதியின் காணி நிலமும் பத்தினிப் பெண்ணும்,அந்தக் காளையும் என் மனதில் இன்னும் இருக்கிறார்கள்.
பசி அமர்த்தின அன்னபூரணியாயிற்றே.
பிறகு அந்த வழி செல்லும்போதெல்லாம் தேடுவேன். குடிசை சென்று நால்வழிப் பாதை ஆகி இருந்தது.
அவர்களும் வீடு கட்டிக் கொண்டு சென்றிருப்பார்கள். குழந்தைகளும் பிறந்திருக்கலாம். அவர்கள் வாழ இன்றும் பிராத்திக்கிறேன்.

16 comments:
நிச்சயம் நன்றாக இருப்பார்கள்.
நல்ல மனிதர்களைப் பற்றிய நல்லதொரு பதிவு.
//எங்க சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்காதே என்னப்பா சாப்பிடுவீங்க என்றாள்
அந்தக் கறுப்பழகி வனமல்லி//
எளிய மனங்களின் உபசரிப்பு உண்மையாக இருக்கும். சும்மா வார்த்தைக்கு கேட்க்காமல் உண்மையான அக்கறை .
அன்பு சசிகலா. கிட்டத்தட்ட 41 வருடங்கள் ஆகிவிட்டது.
பசியில் நாங்கள் துடித்திருப்போம். இது போல எத்தனை பேருக்கு உதவி இருப்பார்களோ.
நல்ல குடும்பம். நன்றாக இருக்க வேண்டும்.
அவள் பெயர் எனக்கு மறக்காததற்க்குக் காரணம் வெகு புதுமையான
தமிழ்ப் பெயராக இருந்ததுதான். நன்றி மா..
அன்பு ராமலக்ஷ்மி,
உளமார்ந்த அன்பை அன்று பார்த்தேன்.
மிக நன்றி மா.
அருமை
என்ன ஒரு அனுபவம்! இது போன்ற மனிதர்களைச் சந்திக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நிச்சயம்
நன்றாக இருப்பார்கள்
நல்ல நிலையில் நலமோடு வாழ்வார்கள் அம்மா...
வெள்ளந்தி மனிதர்கள்! நலமுடம் வாழ்வார்கள்!
அன்பு சசி கலா. எவ்வளவு இதமான மனிதர்களை நாம் கடந்திருக்கிறோம் என்பதில்
மிக மகிழ்ச்சி தான்.
கருத்துக்கு மிக நன்றி நாகேந்திர பாரதி.
ஆமாம் ஸ்ரீராம். இப்போதும் இது போல நடக்குமா தெரியவில்லை.
இருக்கலாம்.
சிங்கத்தின் பாட்டி இது போல வழிப்போக்கர்களுக்கு உணவு கொடுப்பதை அறிந்திருக்கிறேன்.
அப்பா வழிப்பாட்டியும் அது போலத்தான்.
ஆமாம் கரந்தை ஜெயக்குமார். தர்மம் தலை காக்கும் என்பதுதானே நம் பழமொழி.
வரணும் தனபாலன். மிக்க மகிழ்ச்சி. நன்றாகவே இருப்பார்கள் அந்தத் தம்பதியர்.
மனிதம்...... இன்று வெகு சிலரிடமே இருப்பதைப் பார்க்க முடிகிறது.
அந்த மனிதர்கள் நன்றாக இருக்கட்டும்.....
இப்போதெல்லாம் தேடிப் பிடிக்கணும், இத்தகைய மனிதர்களை! அருமையான மனிதர்கள்.
Post a Comment