பாரீஸ் நகரின் வெற்றி வளைவு+ நினைவு ஸ்தலம்
..அதன் உச்சியில் சந்தித்தோம்.
அன்று வெய்யிலின் அளவு அதிகமாக இருந்தது.
ஐரோப்பியர்களுக்கு அந்த வெயில் உற்சாகத்தைத்தான் கொடுத்தது.
எங்களுக்கு தாகம் தாகம் தாகம்.
சின்னப் பயலுடன் மருமகள் கீழே தங்கி விட்டால். பேத்தியும் மகன்,சிங்கம் ,நான் லிஃப்டில்
ஏறி மேலே வந்துவிட்டோம்.
எங்களுடன் வந்த இந்த வயதான (!) தம்பதியரின் உற்சாகம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.
எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்.
பிரெஞ்ச் பெயர்கள் இரண்டு காதில் விழுந்தன.
புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டோம்.
குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார்கள்.
ஆமாம் என்றதும் நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம்.
உஷ்ணம் தாங்கவில்லை. டெல்லி,தாஜ்மகால்,ஜெய்ப்பூர்
பார்த்துவிட்டு வந்தோம்.
உங்கள் குடும்பமும் இங்கே பாரீசில் இருக்கிறதா என்றதற்கு,
இல்லை என்று தலையசைத்தார்கள்.
எங்கள் மகன் கென்யாவில் அந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இருக்கிறான்.
நாங்கள் அருகில் மூல்ஹௌஸ் நகரில் இருக்கிறோம்.
உடலில் வலு இருக்கும்போது கலைகளின்
தலைநகரமான பாரீசுக்கு வருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இரண்டு வாரங்களாவது
இங்கே இருப்போம். ஹோட்டல் விடுதி செலவெல்லாம் கிடையாது. சிநேகிதர்கள் வீட்டில் இருந்தபடி
ஊர் சுற்றுவோம். என்றனர்.
முற்காலத்தில் நம் ஊரும் இப்படித்தானே இருந்தது.
ஒரு அத்தை, மாமா பெரியப்பா சித்தப்பா என்று யாராவது வருவார்கள், இருப்பார்கள். நாமும் அவர்கள் வீட்டில் போய்த் தங்குவோம்.
போன வருடம் ஷான்
ஒரு அறுவை சிகித்சை மேற்கொள்ள வேண்டி வந்தது. அதனால் வரமுடியவில்லை. அதை ஈடு கட்ட இந்தத் தடவை மேலும் சில நாட்கள் இருப்போம் என்று அந்த அம்மா மகிழ்ச்சியோடு சொன்னார்.
எதோ இருதய சம்பந்தமான சிகித்சை என்பது மட்டும் தெரிந்தது.
அவர் அதற்குள் குறுக்கிட்டு இதோ இவளும் மூட்டு அறுவை சிகித்சை செய்து கொண்டாள். வாக்கர் வைத்துக் கொண்டாவது வருவேன் என்று பிடிவாதம் பிடித்து வந்துவிட்டாள் என்று பெருமையாகச் சொன்னார்.
என் கால் வலியையும் அதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதையும் எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.:(
மனம் மார்க்கம் என்று யோசனை எங்கியோ போனது!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
16 comments:
அருமையான பதிவு நண்பா
இன்று என் வலையில்
பெரியவங்க என்ன சொல்றாங்கனா?
இதுபோல சின்னச்சின்ன சந்தோஷங்களை அனுபவித்து வாழ்க்கையை சுவாரசியம் உள்ளதாக இருத்திக்கொள்ள வேண்டும் தான்.
வருகைக்கு நன்றி நண்பரே.உங்கள் பதிவுக்கு வந்து படிக்கிறேன்.
நானும் பெரியம்மாதான்:)
அன்பு லக்ஷ்மி, உண்மைதான் வாழ்வின் அருமையான தருணங்களை
ஒரு போதும் இழக்கக் கூடாது. அதை உங்கள் பதிவுகளில் ரசித்து அனுபவிக்கிறேன்.
போன பதிவு படஙக்ளைப் பாத்தே ஆச்சர்யப்பட்டுக் கேக்கணுன்னு நினைச்சே. அவ்ளோ உயரத்துக்கு பயப்படாம போய்ட்டு வந்துட்டீங்களேன்னு!!
வயதானபின் தான் துணையின் துணையும், இதமும் தேவை. அது முழுதாய் வாய்த்திருக்கிறது அத்தம்பதியருக்கு. இறைவன் எல்லாருக்கும் இப்பாக்கியம் தரவேண்டும்.
உண்மைதான் வல்லி, நாமெல்லாம் ஒன்றுமில்லாததுக்கே ரொம்பவே அலட்டிக்கிறோம் என எனக்கும் தோன்றும். :( என்ன இருந்தால்லும் அவங்க தைரியமெல்லாம் நமக்கு வராது. :(
நல்லதொரு சந்திப்பின் பகிர்வுக்கு நன்றி.
அன்பு ஹுசைனம்மா, முழங்கால் என்னாவோ வலிக்காமல் இருக்கப் போகிறது இல்லை.
பாதிப்படிகள் ஏறிவிட்டேன். மீதிப்படிகளுக்கு லிஃப்ட் இருந்ததுப்பா.
அவங்களுடைய அன்பையும் சிநேகத்தையும் பார்த்து மிகவும்
ஆனந்தமாக இருந்தது. நமக்கு இத்தனை நெருக்கம் வாய்க்குமா என்றும் தோன்றியது:)
அன்பு கீதா, நாம் அலட்டிக் கொள்வதில்லை.
தாங்கும் சக்தி இல்லை அவ்வளவுதான். அவர்கள் உணவு, உடை,கலாசாரம்
எல்லாமெ வேற.
அதுதான் அங்க முக்கியம்.
வயோதிபம் சிரமம் இருந்தும் மகிழ்ச்சியாய் வாழ்க்கையை ரசித்து வாழும் தம்பதிகள்.
பார்க்கும்போது எமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மன ஒற்றுமைக்கு முன் வயோதிகம் என்னசெய்யும்
அருமை சகோதரியாரே
இப்போது எங்கே... எல்லாமே தனி தனி குடும்பம்...
மீள் பதிவா? நல்லாவே இருக்கு மறுபடியும் படிக்க!
என்ன டிடி, எண்ணங்களிலே உங்களைக் காணவே முடியலையே? ரொம்ப பிசி??? :)
மீள் பதிவாக இருந்தாலும் நான் இப்போதுதான் படிக்கிறேன் முதல் முறையாக. நீங்கள் சொல்வது போல அவர்களைப் போல நாம் இருக்க முடியாது. உங்கள் அனுபவங்கள் எல்லாமே மனதைத் தொடுகின்றன, வல்லி.
அன்புள்ள மரியாதைக்குரிய திருமதி. வல்லி சிம்ஹன் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 28ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/28.html
Post a Comment