எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும் இந்த ஊர் சுவிஸ் நாட்டிற்குள் இருந்தாலும் இத்தாலி எல்லையில் அமைந்திருப்பதால் ஜெர்மனும் இத்தாலிய மொழியும் கலந்தே பேசுகிறார்கள். கடையில் தன பென்னிர்காகப் பெரியவன் வாங்கிய பூனைக்குட்டி கள் அழகாக வரைந்த தட்டிற் காக ,,,,அவன் பேரம் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. :))
யும் கொண்டு வந்திருந்தேன்.
|
படிகள் படிகள் வசதிதான். |
|
ஏரிக்கரையில் ஊற்று.அழகான சிற்பங்களுடன் |
நாங்கள் கிளம்பிய வண்டி சரியாக மதியம் 1 மணிக்குப் போய்ச்சேர்ந்தது. முன்பு போல வெளியே சாப்பிடுவது அவ்வளவாக ஒத்துக் கொள் வதில்ல. கையில் கட்டுச் சோறாகத தயிர்சாதமும் ,தோசைகளையும் கொண்டு வந்திருந்தது வசதியாகப் போய்விட்டது.
|
தங்கிய விடுதி ஹோட்டல் FEDERALE
எங்கள் மூவருக்குமாக ஒரு அரை பதிவு செய்திருந்தார் பெரிய பையன். நல்லவசதியான படுக்கைகளும் ,குலுக்கும் அரை வசதி ,FRIDJE என்று இரு நாட்களுக்குத் தங்க அருமையான இடம். எங்கள் அரை விடுதின் பின்பக்கம் ஏரியைப் பார்த்த வண்ணம் இருந்தது. எரிக்கும் விடுதிக்கும் இடைப்பட்ட மழைப் பகுதியில் வில்லாக்களும் வீடுகளும் மாதாகோவில்களும் அங்குல இடைவெளியின்றி நிரம்பி இருந்தன. .ஒருபக்கம் சரேல் என்று இறங்கும் சாலை. மறுபக்கம் படிகள். அங்கு இருப்பவர்கள் யாருக்கும் வியாதியே வராது என்று நினைக்கிறேன். இத்தனை படிகள் ஏறி இறங்கினால் தேகப் பயிற்சி முடிந்துவிடுகிறது இல்லையா.
|
|
மலையின் உச்சியில் வீடு |
11 comments:
அழகான காட்சிகள். இத்தனை படிகள் ஏறி இறங்கினால் நிச்சயம் வியாதியே வராது தான் அம்மா..
படங்களும் பகிர்வும் அருமை வல்லிம்மா. தொடருங்கள்.
ஆமாம் ஆதி . இறங்கும்போதாவது பரவாயில்லை .மீண்டும் ஏறி வரும்போது மகாக் கஷ்டம்.வழி நெடுக ஹாலிடே கும்பல். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். பார்த்துக் கொண்டே வந்ததில் ஒன்றுமே தெரியவில்லை. நன்றி மா
மிக நன்றி ராமலக்ஷ்மி. எல்லாம் ஐபாடில் யெடுத்தது. ரெசல்யூஷன் சரியாக வந்திருக்கிறதோ என்ற ஐயம் இருந்து வருகிரதும்மா.
சுவிஸ் மிக அழகிய ஊர். படங்கள் அழகு மேம்.
படங்கள் அழகோ அழகு
படிகளில் தினம் ஏறி இறங்கினால், நலமே
முதல் பாராவில் சில வரிகளைக் காணோம்! :))))))
இந்தக் கட்டிடங்களை அமிதாப் படம் ஒன்றில் பார்த்திருக்கிறேன்! :))))) தி கிரேட் காம்ப்ளர்?
நல்ல உடற்பயிற்சி தான் அம்மா...
அழகிய படங்கள்.
இனிதாய் அமைந்த சுற்றுலா.... மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.....
இன்றைக்கு பிறந்த நாள் என்று கீதா சாம்பசிவம் மூலம் அறிந்தேன். உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
என் மகன் பட்டப்படிப்புடன் மேற்படிப்பும் ஸ்விஸ்ஸில் தான் படித்தார். அதனால் இங்கேயெல்லாம் வந்து ரசித்திருக்கிறோம்! உங்கள் படங்களும் அழகு!
அருமையான பதிவு. அற்புதமான படங்கள். நன்றி.
Post a Comment