Blog Archive

Saturday, March 07, 2015

மகளிர் தினம் சிறக்க வாழ்த்துகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
வாழ்வில்  உதயம் அஸ்தமனம்  மலர்தல் விழுதல்   எல்லாம் உண்டுதான். இருக்கும் வரை தன்னைக் காத்துக் கொள்ளும் சக்தி எந்தப் பெண்ணுக்கும் வேண்டும். அது சொல்லால் அடித்தாலும் , மறைமுகமாகத் தாக்கினாலும் நான் வீழ மாட்டேன் என்ற உறுதி எப்போது வருகிறதோ அப்போதுதான்  நாம் மங்கையர் தினத்தை உரிமையோடு கொண்டாட  முடியும்.
 நிலவு எனச் சொல்லி,மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேணும் அம்மா என்றெல்லாம் முழங்குவார்கள். அடுத்த நாள் எழுந்து அலையப் போகிறவளும் அதே மங்கைதான்.     நல்ல மனிதர்களை அடையாளத்தில் நிறுத்திக் கொண்டு அல்லாதவர்களைப் புறந்தள்ளவும் உறுதி வேண்டும்.
பயப்படவேண்டிய இடத்தில் பயந்து புத்திசாலித்தனமாக இருக்கப் பழக வேண்டும் பெண்ணுக்குப் பெண்ணே சில இடங்களில் எதிரி. சாமர்த்தியம் இருந்தால மட்டுமே  பிழைத்துவருவது உறுதி.

எதிர் காலத்துக்குச் சேமியுங்கள். உடல் நலனைப் பேணுங்கள் . இணை  நலத்தையும் காத்து மனை நலத்தையும் காப்பதற்கு வேண்டிய சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் .
இதெல்லாம்  நான் எனக்கு நேற்று இரவு சொல்லிக் கொண்ட
சுய உறுதிச் சிந்தனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
வாழ்க மங்கையர் நலம்.

11 comments:

ஸ்ரீராம். said...

சரியாகச் சொன்னீர்கள். மகளிர்தின வாழ்த்துகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பயப்படவேண்டிய இடத்தில் பயந்து புத்திசாலித்தனமாக இருக்கப் பழக வேண்டும் பெண்ணுக்குப் பெண்ணே சில இடங்களில் எதிரி. சாமர்த்தியம் இருந்தால மட்டுமே பிழைத்துவருவது உறுதி.//
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா மங்கையர் தின வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.

சரியாக சொன்னீர்கள்.
மகளிதினவாழ்த்துக்கள் அக்கா.

கோமதி அரசு said...

மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா.

Unknown said...

உங்கள் கூற்று உண்மையே

மகளிர்தின வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்...

வாழ்த்துக்கள் அம்மா...

RAMA RAVI (RAMVI) said...

//அது சொல்லால் அடித்தாலும் , மறைமுகமாகத் தாக்கினாலும் நான் வீழ மாட்டேன் என்ற உறுதி எப்போது வருகிறதோ அப்போதுதான் நாம் மங்கையர் தினத்தை உரிமையோடு கொண்டாட முடியும்.//

மிக அருமையாக சொல்லியிருக்கீங்க மேடம்.
மகளிர் தின வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான அறிவுரை....

மகளிர் தின நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையாகச்சொன்னீர்கள் வல்லிம்மா.

இனிய வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அனுபவத்தில் வழங்கியிருக்கும் ஆலோசனைகளை மனதில் இருத்திக் கொள்கிறோம். நன்றி வல்லிம்மா. தங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!