ஐக்கியா கடைக்குள் போஸ்டர்ஸ் |
நேற்றைய மழை |
இதை நாங்கள் வாங்கவில்லை. |
அம்மாவோட பால் தீர்ந்து போச்சு. இதோ எதிர்த்தாப் பில இருக்கிற கோஆபரடிவ்க்குப் போனால் வேலை முடிந்தது.
கைவலி கால்வலி மருந்து,கண்ணுக்கு சொட்டு மருந்து. இருக்கவே இருக்கு பூட்ஸ் பார்மஸி . இவ்வளவு சௌகர்யங்கள் இருக்கும் இடத்தைவிட்டு புது வீடு போகப் போகிறோம்.
அது பள்ளிக்கூடங்கள் இருக்கும் பிரிவு. கூடவே சீனியர் சிடிசன்ஸுக்கு வசதியாக ஒதுக்கப் பட்ட அமைதியான இடம்.
வீட்டுக்கு Townhouse என்ற விதத்தில் அமைக்கப் பட்ட வகை. அதாவது வீடு அடுக்கு மாடிகளாக இருக்கும். அகல வாட்டில் இல்லாமல் நெடுக்கு வாட்டில் அமைக்கப் பட்டிருக்கும். இரண்டு மாடிகளில் நான்கு படுக்கை அறைகள். மூன்று குளியலறைகள் என்றபடி இருக்கும். கீழ் தளத்தில் சமையல்,வரவேற்பறை. மாடியேறினால் இரண்டு படுக்கும் அறை. ஐரோப்பாவில் எல்லோருக்கும் பெரிய இடமாகக் கட்டுவதில் நினைப்பே இருக்காது போல. எல்லாம் குட்டி குட்டியாக ஆனால் வசதிகளோடு கட்டிவிடுகிறார்கள். மூன்றாவது மாடியில் குழந்தைகள் படுக்கும் இரண்டு அறைகள். பேபி பேபியாகவே இருக்குமோ வளராதோ என்று கேட்டேன். வேற வீட்டுக்குப் போய்விடுவார்கள் அம்மா. என்றான் பையன்.
வீடு என்பது சமைக்கப், படுக்க.மிச்ச நேரமெல்லாம் குழந்தைகள் வளர்ப்பகத்தில்,பள்ளியில் செலவழிந்துவிடும்.
மகனிடம் கேட்டால் ,அம்மா உன்னை ஜப்பானில் விடவேண்டும் என்று சிரிக்கிறான். வாடகையைக் கேட்டுவிட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டேன். மஹாராணி ஆளும் தேசம். எல்லாமே பெரிய விலைதான்.
சமைப்பது கூட சொல்ப நேரம் தான். போகும் வழியில் எல்லாம் கிடைக்கிறது. சாப்பிடவும் வைத்து,பள்ளிக்கும் பார்சல். இல்லையா.பள்ளியிலேயே மதிய உணவுக்குப் பணம் கட்டிவிடலாம். தினம் உருளைக்கிழங்கு வேகவைத்தோ அவன் இல் காயவைத்தோ கொடுத்துவிடுகிறார்கள். மரக்கறி சாப்பிடும் குழந்தைகளுக்குக் கொஞ்சம் சிரமம் தான். மருமகள் சொல்லிச் சொல்லி பேத்தி இப்போது சாலட் வகையறா சூப், எல்லாம் எடுத்துக் கொள்ளக் கற்றிருக்கிறாள். இதெல்லாம் இருக்கட்டும்.
மாதிரி டவுன் ஹௌஸ் |
ஐக்கியா பரந்த வாயில். வெளியே வரும்போது மழை யோ மழை. |
21 comments:
ஹூஸ்டன் ஐகியாவுக்குப் போயிட்டுக் கால் வலி தீரவே இரண்டு நாட்கள் ஆயிடுச்சு. அப்புறமெல்லாம் ஐகியவுக்குக் கூப்பிட்டாலே நான் வரலைனு சொல்லிடுவேன். நடக்க நடக்கப் போயிட்டே இருக்கும். :(
ஆனால் பொருட்களின் தரம் அருமைதான். அதை மறுக்க முடியாது.
படங்களும் பதிவும் அருமை.
மூன்று மாடி என்றால் வீட்டுக்குள்ள lift உண்டா?
புது வீட்டில் எல்லாம் இன்பமயம் ஆக இருக்கட்டும் என வாழ்த்துகின்றேன்!
தனிமடல் பார்க்கவும்.
எங்கூரில் ஐகியா இல்லை:(
//எல்லாம் வாங்க ஐகியா என்ற பெரிய மரக்கடைக்குப் போயிருந்தோம்//
ஐக்கியாவை மரக்கடைன்னு சொல்லிருக்கிறதை அந்த ஐக்கியாகாரங்க பாத்தாங்க.... இருக்கு உங்களுக்கு.... ஹா.. ஹா.. ஹா..
முன்னெல்லாம், கட்டில், மேஜை, நாற்காலி சமாசாரங்கள் எல்லாம் மரக்கடைகளில்தான் செய்யச் சொல்லி வாங்குவோம். வீட்டிலேயே மரங்கள் வாங்கிப் போட்டு, தச்சர்களைக் கூட்டிவந்து வீட்டிலேயே இருந்து செய்து தரச் சொல்லுவோம். அவங்களும் வீட்டில்யே ஒருத்தர் மாதிரி டீ, காஃபி, சாப்பாடுன்னு உபசரிப்பு இருக்கும். அதெல்லாம் அப்போ... இப்போ ரெடிமேட் காலம்.
புது வீடு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே
இந்தியாவில் ஐகியா வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
வசதியாக இருந்தால் எந்த வீடும் சரிதான்.
மகனுடன் நாங்களும் ஐகியா போய் இருந்தோம் ஒருமுறை. பார்க்க அவ்வளவு இருக்கு, கால்களுக்குதான் பலம் வேண்டும்.
புதுவீட்டில் எல்லா நன்மைகளும் கிடைக்க இறைவன் அருள்புரியட்டும்.
புது இல்லத்திலும் இனிமை தொடரட்டும் அம்மா...
உண்மைதான் கீதா. முன்னெல்லாம் தெம்பு இருந்தது. அப்பவும்
ஏதாவது ஒரு நாற்காலி. கண்லபட்டால் உட்காரவேண்டியதுதான்.
இப்பவும் அப்படித்தான். பையனும் மருமகளும் போனார்களோ போனார்களொ
இரண்டு மணி நேரம் போனார்கள்.நானும் பேத்தியும் ஆக்கு பாக்கு வெற்றிலை பாக்கு
விளையாடி அலுத்துவிட்டோம். பசி வேற.இனி போக மாட்டேன்.
லிஃப்டா1!!!!!!!!
.மூச்.படி ஏறணும். எனக்கு முதல் மாடிதான். ஏறிடுவேன். ரமா.
தாங்க்ஸ் துளசிமா. பிழை திருத்தம் செய்தாச்சு. நம்ம ஊரிலேயே வந்தாச்சே
வரணும் ஹுசைனம்மா எங்க வீட்டுக் கட்டில் எல்லாம் அப்படி செய்தது தான்.
மரக்கடைன்னு சொன்னால் ஒசத்தி இல்லையோ>}}}}}}}}}} சின்னவன் வீட்டில் பாத்திரமெல்லாம் ஐகியாதான். கப் ஸாசர்,ப்ளேட்ஸ் எல்லாம் கூட அங்கே இருந்துதான்.
நன்றி. ஜெயக்குமார். மிகவும் நன்றி.
ஆமாம் துரை. கூகிள் அப்படிதான் சொல்கிறது.
நன்றி கோமதி.
ஐகியா வில் நடந்தால் இரண்டு நாட்கள் நடைப் பயிற்சி கிடைத்த
மாதிரிதான்.
நன்றி தனபாலன்.இறைவன் எல்லா நலங்களும் அருளவேண்டும்.
வீடு மாறுகிறீர்களா? நம்மூர் மாதிரி சிரமங்கள் அங்கு வீடு மாற்றுவதில் இருக்காது என்று நினைக்கிறேன். விலை உயர்ந்த ஊர்தான்!
:))))))
வரணும் ஸ்ரீராம்.
இத்தனை காலம் சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
இப்போது ஒழுங்காக வீடு அமைந்தது. படு சிரமம். மூன்று மாதங்களாகத் தேடுகிறார்கள்.
நலமாக இருக்கவேண்டும்.
ஐகியா என்றால் நான் ரெடியா என்று கிளம்பிடுவேன் அமெரிக்காபோனப்போ நானும் அதன் உள்ளே போய்பார்த்து பிரமித்திருக்கிறேன்,,, அழகோ அழகு அங்கு எல்லாம் விலை அதிகமாம் ஆனால் பொருள் தரம் என்றார்கள்... உங்க புதுவீட்டுப்படம் அருமை!
எனக்கும் ஐகியா மிகவும் பிடிக்கும் ஷைல்ஸ்.
. பெண்களின் பிரத்தியேக உலகம். கட்லரி,ஓவியங்கள், ஆர்க்கிட்ஸ் என்று எத்தனையோ பலவிஷயங்கள்.
நடக்கத்தான் நாலு கால் இருந்தால் தேவலை>}}}
Post a Comment