Blog Archive

Monday, January 05, 2015

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

செங்கண்  சிறுச்சிறிதே  எம்மேல் விழியாவோ
சந்திரன்
ரத்னாங்கி சேவையில் அரங்கன்
தாமரைக் கண்ணன்

 கோதை தாள் வாழ்க.  22ஆம் நாள்
************************************
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
****************************************************
தோழியரும்  கோதையும் கண்ணன்  துயிலும்
அறையில்   அவன் விழித்தெழக் காத்திருக்கிறார்கள்.அவனோ யோக நித்திரை செய்யும் அரங்கன் போல உறக்க நாடகம் ஆடுகிறான்..
கூப்பிய கைகளோடு ஆண்டாள்  பாவைப் பாடலைப் பாட ஆரம்பிக்கிறாள்.

கண்ணா, உலக அரசர்கள் அனைவரும்  உன் அரசவைக் கட்டிலின் பக்கம் வந்து நீ ஒரு நல்ல வார்த்தை சொல்ல மாட்டாயா,உன் நட்பு  தங்களுக்குக் கிடைக்காதோ   என்று  காத்திருப்பது போல
நாங்களும் அதே ஆர்வம் ஏக்கம் கொண்டு நீ கண் விழிக்கக் காத்திருக்கிறோம்.

உன் அழகியதாமரை போலச்  சிவந்த கண்கள்  கொஞ்சமே கொஞ்சம் திறந்தால் கூடப் போதும். எங்கள் மேல் உன்  பார்வை பட்டால் எங்கள் பாவங்கள் அனைத்தும் தூசாகும்.
உன் கண்களோ  சூரியன் போல ஒளியோடும் சந்திரன் போலக் குளிர்ச்சியுடனும் விளங்குகின்றன.நீ கண்களைத் திறந்தால் ஆதித்யனுன் திங்களும் ஒன்றாக எங்களுக்கு  அருள் புரிவது போல நீ  சிறிது சிறிதாக விழிக்க வேண்டும்.
பகவானின் முழுப் பார்வையின் தீக்ஷண்யம் தாங்க முடியாதாம்.

அதனல் கண்கள் குளிர்ச்சியை மட்டும் எங்கள் மேலே
மெல்லமெல்லப் படருமானால்  வாழ்வின் அத்தன பாக்கியங்களையும் பெறுவோம்.எங்கள் தாபத்தையும் பாபங்களையும் போக்குவாய்  தாமரைக் கண்ணா
என்று வேண்டுகிறாள்  ஸ்ரீகோதா.
அவள் வழி நாமும் அவன் கண்திறந்து அருள் செய்யும் காலத்துக்குக்
காத்திருப்போம்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

11 comments:

துளசி கோபால் said...

அருமை!!!!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

நாச்சியார் தந்த நறுந்தமிழை உன்னுடைய
மூச்செனக் கொண்டாய் முனைந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு. கருத்தும் அழகு அக்கா. நான் இன்று தாமரை கோலம் தான் போட்டேன்.
தாமரை படம் வெகு அழகு.

sury siva said...

// அவனோ யோக நித்திரை செய்யும் அரங்கன் போல உறக்க நாடகம் ஆடுகிறான்..////

இதே சமாசாரம் தான் ஒரு நாலு அஞ்சு பாடல்களுக்கு முன்னே ' கிடந்து " என்ற சொல்லுக்கும்.

தாயார் நித்திரையிலிருந்து எழுந்து விடுகிறாள். காதில் கோதை பாடும் பாடல் கேட்கிறது.
தங்களை ரக்ஷிக்கவேண்டும் என்ற அபயக்குரல் கேட்டு எந்த தாயுள்ளம் இரங்காமல் இருக்கும் ?
தாயார் எழ் நினைக்கிறாள். பர்த்தாவை துயிலிருந்து விழிக்கச் செய்யவேண்டும் என நினைக்கிறாளாம். அப்பொழுது து, அரங்கனின் கரம் அவர் மார்பில் ' கிடந்து " இருக்கிறது.

அவரோ தூங்குவது போல,

உறக்க நாடகம் ஆடுகிறார். ( ன் வேண்டாம் ) /???????

அது நாடகமா ? இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். என்று சொல்கிறாராம்.

பிரதிவாதி பயங்கர அண்ணாச்சாரியார் வியாக்கியானம்.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி துளசி.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் கவிஞர் ஐயா.
வருகைக்கும் இந்த எளிய முயற்சிக்கு நீங்கள் கொடுத்த பாரட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அப்படியும் கிங்கிணி வாய்ச் செய்தவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. கேட்டிருக்கிறேன் மறந்துவிட்டேன். நானும் தாமரைதான் இன்று. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார், நம் கண்ணnதானே

என்று ''ன்'' போட்டுவிட்டேன். இனிமேல் ''ர்'' போடுகிறேன்.
ஆமாம் அப்பா சரி சொன்னால்தான் அம்மா வெளியே வர முடியும். அவருக்குத்தான் பக்தர்களிடம் முதல் உரிமை. அதை நிலை நாட்டிக்கொள்கிறார்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

படங்களும், விளக்கமும் அருமை!

ராமலக்ஷ்மி said...

விளக்கம் அருமை.

படங்கள் அற்புதம். குறிப்பாக முதல் படம்!

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமும் படங்களும் அருமை அம்மா...