Add caption |
Wilhelm Tell |
Luzern top |
william tell |
.
நாங்கள் செர்மாட் எக்ஸால்சியர் எனும் விடுதியில் மாலை 4மணிக்குப் போய்ச்சேர்ந்தோம்.
சுமாரான் மூன்று நக்ஷத்திர விடுதி.
கொஞ்சம் சிறியதோ என்று தோன்றியது.படிகள் ஏறி அறையை அடைந்தோம்.
அறையா கியூபிகிளா என்னும் படி சந்தேகம் வந்தது. இத்தனை காசு கொடுத்து இத்தனூண்டு இடத்திலா, என்று யோசித்தபடி
அங்க்கிருந்த ஒரேஒரு நாற்காலியில் அப்பாடி என்று உட்காரப்
போனேன்.
அம்மா ஒரு நிமிசம்னு"" மகன் சொல்லுவதற்கும் முன் கையோடு கால் வந்துவிட்டது.
தடால்....
சே,னு போயிட்டது.
அம்மா தரையில் திடீரென்று உட்கார்ந்த அதிர்ச்சியிலிருந்து
மகன் மீளுவதற்குமுன்னால் அப்பா கட்டிலில் உட்கார்ந்தாச்சு.
கட்டில் இன்னோரு டமால் ஒரு பக்கமாகச் சரிந்தது.
நம்ம சிங்கம் உஷார் சிங்கம்.உடனே சமாளித்து எழுந்தாச்சு.
மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும்.
சுவரோடு சுவராகக் கட்டில் இருக்கும்.தலைக்கு
மேலெ பாதி சுவர் ஜன்னல்.
அது வழியாக அறுபத்துமூவர் கும்பல் மாதிரி ஒரே சத்தம்.
அதுசரி!!!! சந்தோஷமா இருக்கத்தானே வந்து இருக்கிறார்கள்.!!!!
நமக்கு விழுந்த அதிர்ச்சியில் பாலும் கசந்ததடின்னு
பாட்டு வருது.
மேடராவது ஹார்னாவது.போப்பா சரிதான்னு
தோன்றியது.
இத்தனை குட்டி அறைக்கு 200 ஃப்ரான்க் வாடகை.அட்டாச்சிடு பாத்ரூம் இருக்காம்.
நம்ம ஆகிருதியோ சைட்வேஸ்ல
கூடப் போகமாட்டேன் என்கிறது. எப்படியோ சமாளித்து கிடைத்த காபியை முழுங்கிவிட்டு வெளியே வந்தோம்.
இங்கெ ஒரு சுவையான செய்தி என்னன்னால் புகையே கிடையாது.
மனுஷப்புகை பற்றி சொல்லவில்லை. வாகனப்புகையைச் சொல்கிறேன்.
போக்குவரத்து என்பது குதிரை வண்டியில்,இல்லாவிட்டால் மின்சாரக் காரில்.
சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த ஏற்பாடாம்
ஆனால் இந்தக் குளிருக்கு மனிதர்களின் சிகரெட் புகை அதிகம்.
மலைக்குப் போவதற்குத் தனி ரயில். உச்சியை அடைந்த கணம்
மறக்கமுடியாத தருணம்.அப்படி ஒரு உயரம்,கம்பீரம்.
சூரியன் சிகரத்தில் விழும் ஒளி கண்கூசவைக்கும் ஜாலமாக
இருந்தது.
அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ
தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்
நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.
இந்த அழகும் மேன்மையும் நம் எவரெஸ்ட்,கைலாச பர்வதம்,கங்கை நதி
,ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் , ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.
கொஞ்ச நேரத்தில் சூழ்ந்த மேகங்களும், பனித்திரையும்
மற்ற எதையுமே பார்க்க முடியவில்லை.
அன்றைய வெதர்மேன் எண்ணம் அப்படி.!!
கீழே இறங்கி வந்ததும் சாப்பாடு நினைவு வந்தது.
இவர்கள்தான் எட்டு மணிக்குக் கடைகளை மூடிவிடுவார்கள்.
அதற்குள் நமக்கு வேணும் என்கிற மரக்கறி உணவு கிடைக்கவேண்டுமே
என்ற கவலை.
திறந்த கடை ஒன்றில் வெறும் சாண்ட்விச் கேட்டோம்.
அந்த அம்மாவுக்கு அது பெரிய ஆர்டராகத் தோணவில்லை.
இரண்டு நிமிஷத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள்.
திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.
ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.
அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.
இருந்தபசியில் கண்மண் தெரியாமல் கோபம்.
என்ன செய்வது. சரிம்மாசாதா ப்ரெட் இருந்தாக் கொடுதாயேனு கேட்டு வெண்ணையும் தயிருமாய் இரவு உணவை முடித்தோம்.
நாங்கள் சென்ற காலம் அங்கே அவ்வளவு குளிர் இல்லை.
காலையில் எழுந்து இலவச காலைச்சாப்பாடும் காப்பியும் சாப்பிட்ட கையோடு க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வண்டியைப் பிடித்து
ஆல்ப்ஸ் மலைகளின் ஊடே அது சென்ற வேகத்திலும்,நடுவில் வந்த குகைளின்
அற்புதத்திலும்,
இத்தனை திடமான ரயில்பாதை மலைகளுக்குள்ளே
அமைத்த ஸ்விஸ் எஞ்சினீயர்களின் அதிமேதாவித்தனத்தையும்,
உழைப்பையும் அதிசயத்தவாறே வில்லியம்டெல் கிராமத்துக்கு வந்து
அந்தக் கதையையும் கேட்டுவிட்டு இண்டர்லாகென் வந்தோம்.
அங்கிருந்து போட்.
லுசெர்ன் மறுபடி வந்து ஒருமணிப் பயணத்தில் வீடு வந்து
விழாத கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.
தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.
பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்