vவெங்கட் கேட்ட மாதா |
சீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.
தஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.
ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))
எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மாத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.
அது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.
சாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.
திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.:))
மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.!!!!!
இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.
பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.?
எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.
பித்தமும் தெளிந்தது.
ஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))
Add caption |
FENGSHUI BEDROOM |
Add caption |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
34 comments:
குழந்தைகள் கிண்டல் செய்கிறார்கள்...! அதுவும் ஒரு சந்தோசம் தான்...
படங்கள் அனைத்தும் அருமை.., வாழைக்குலை பழுத்துட்டுதா?!
எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))
ஹிஹிஹி, அப்போ வராமல் போயிட்டேனே! :))))
//திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.//
கற்பனை பண்ணிப் பார்த்துண்டேன். ஹிஹிஹி, சிரிக்காமல் எழுதினீங்க??? எங்க மாமியாருக்கு இந்த மாதிரியான நம்பிக்கைகள், ருசிகள் எல்லாம் உண்டு. அதுவும் சாமி ஆடுகிறவங்களைக் கண்டால் பயபக்தியோடு விழுந்து நமஸ்காரம் பண்ணுவாங்க. நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நிற்க, என்னைப் பார்த்து, "உனக்கு சாமிங்கற பயமே இல்லை"னு சொல்லுவாங்க. நம்பிக்கை இல்லைனும் சொல்லுவாங்க.
நானோ சாவதானமா, "சாமி நம்பிக்கை இருக்கிறதாலே தான் இந்த ஆசாமிங்க கிட்ட நம்பிக்கை இல்லை. பயந்துட்டு கும்பிடறதுக்குப் பேர் சாமி இல்லை. எந்த சாமி என்னைப் பார்த்து பயப்படுனு சொல்லறது?" னு எல்லாம் வாதாடுவேன்.
சாமியாடி அம்மா கொடுத்தாங்கனு முழு எலுமிச்சம்பழத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவங்க தவிச்ச தவிப்பு இருக்கே! :((((( பெங்க் ஷூயி ஒரு மாதிரியான அடிக்ஷன் என்றால் இதுவும் இன்னொரு மாதிரியான அடிக்ஷன் தான். என்னத்தைச் சொல்றது!
(ஏற்கெனவே எழுதி இருக்கேனோ?)
//சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.//
ஹிஹிஹி, ஆண்டாளம்மாவை அனுப்பி வைக்கவா? :))))))
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.
மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.
மிரட்டித்தான் இருக்கீங்க தோற்றத்தில்..!
//அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.//
சிரிச்சு முடியலை!! மகன்களையே பயமுறுத்திருக்கீங்களே!!
இந்தப் பதிவு கலக்கல். பல வரிகள் நினைச்சு நினச்சு சிரிக்க வைக்கின்றன.
//ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))//
அப்படியே அருள்வாக்கு சொல்ல ஆரம்பிச்சிருந்தா இந்த நேரம் ஒரு ஆசிரமமே உருவாக்கியிருக்கலாமே வல்லியானந்தமஹிம்மா :-)))
//கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.//
ஹைய்யோ!!!! ஹைய்யோ:-))))))
பதிவு முழுசும் சிரிப்போ சிரிப்பு.
எதைச் சொல்ல எதை விட?
ரகளையா இருக்குப்பா:-))))))
இரண்டு பதிவும் நல்ல வெடிச்சிரிப்பு நகைச்சுவை.
(இதை வச்சு ஒரு அன்புமல்லி கதை எழுத அனுமதி குடுங்க)
கலக்கல்....
அப்படி இருக்கும்போது இருந்த புகைப்படம் இருந்தா போட்டிருக்கலாமே! :)
//எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மமத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.//
அப்பாதுரை சார் சொன்னது போல் அன்பு மல்லி கதை எழுதலாம் உங்களைப்பற்றி..
அருமையான கண்ணில் கருணை, சாந்தம், பவ்யம் .
இப்போதும் கண்களில் மலர்ச்சி, கருணை , கனிவு இருக்கே!
பதிவுகள் இரண்டும் தன் குழந்தைகளுக்கு நல்லபடியாக திருமணம் ஆகவேண்டும் என்ற அம்மாவின் தவிப்பை கூறியது.
உண்மைதான் தனபாலன்
குழந்தைகள் கேலி யும் பரிகாசமும் சிரிப்புதான்.:)
வரணும் ராஜி. அது பழுத்து சாப்பிட்டு ஒரு வருஷம் ஓடிவிட்டது:
அப்போ நீங்க வந்திருக்கணும். 2002 ) மிரண்டிருப்பிபிர்கள் கீதா !!
ஒரே பக்தி மான் :))))
PLEASE SEND aNDALAMMAA:)))
பயங்கர மிரட்டல் தான்.
சொர்க்கவாசி மாதிரி நினைப்பு:)
Rajarajeswari!!
நன்றி ஹுசைனம்மா. எனக்கே சிரிப்பு வருகிறது.
அப்பா நீ கண்டுக்கலையஆன்னு சின்னவன் கேட்ட பொது இவர் பாவம்டா அம்மான்னுட்டார்.:)
துளசி :)
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு:)இனிமேல் தமிழில் எழுதலாம்.
/இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.
பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை /
:))!
அம்மனே எழுந்துவந்துட்டாங்கள் :))))))
//சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.//
//மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.// Not able to control my sirippu :)) LOL vallimaa!
நன்றி ராமலக்ஷ்மி:)
நன்றி மாதேவி.
நன்றி தக்குடு.அப்பா.
அன்பு கோமதி. பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அம்மா.
அன்பு மல்லி கதைகள் எழுதிவிட்டீர்களா துரை.
ஹாஹா அருமை அம்மா.
உங்கள அந்த கெட்டப்புல பார்க்காம போயிட்டேனே. :)
மறுமுறையும் ரசித்தேன். சிரித்தேன்:-))))
உங்க படம் சூப்பரா இருக்கு! திருஷ்டி சுத்திப்போட்டேன்!
நன்றி தேனம்மா. நல்ல தமாஷாக இருந்திருக்கும். :)))எனக்கும் இன்னும் ஒரு நல்ல தோழி கிடைத்திருப்பார்.
தான்க்ஸ் துளசிமா. சமீபத்திய படம்.சிங்கத்தோட 70 ஆவது பிறந்த நாளைக்கு எடுத்தது.
70 ஆ? நாங்களும் கலந்து கொண்டோமே, வுட்லேண்ட்ஸில் நீங்க அளித்த விருந்தில்!
சூப்பர்ப்பா!!!!
ஆமாம் துளசி. அசை போடத்தான் இந்தப் பதிவைப் போட்டேன். வுட்லாண்ட்ஸ் நினைவிருக்கா. நல்ல நினைவுகள் போற்றித்தான் வைத்துக்கொள்ளணும். சுற்றிப் போட்:))டாச்சா.
//இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.!!!!!//
ஹா...ஹா...ஹா...
இந்தப் பதிவு எப்படி பார்க்காமல் மிஸ் ஆனது என்று தெரியவில்லை!
அதனால் என்ன ஸ்ரீராம். இப்ப படிக்க முடிந்ததே. மாறுதலாக இருக்கட்டுமே என்று பழைய பதிவைப் போட்டேன்.எத்தனையோ விதமான பைத்தியன்ம் மனிதர்களைப் பிடிக்கிறது. அதுகளில் இதுவும் ஒன்றுமா. நன்றி.
ஹாஹா மறுபடி படிச்சு நினைச்சு நினைச்சுச் சிரிச்சேன். வெங்கட்டுக்காகப் போட்ட மாதா படத்திலே எனக்கு வித்தியாசம் ஒண்ணும் தெரியலையே! பொட்டு மிஸ்ஸிங்கோ? அதாவது ஸ்பெஷல் பூஜை முறைப் பொட்டு????
ஆமாம் கீதா. அந்தப் படம் முதல் பதிவிலேயே போட்டுவிட்டேன். இது சாதாரண ரேவதி:))
Thanks for sharing, nice post! Post really provice useful information!
An Thái Sơn chia sẻ trẻ sơ sinh nằm nôi điện có tốt không hay võng điện có tốt không và giải đáp cục điện đưa võng giá bao nhiêu cũng như mua máy đưa võng ở tphcm địa chỉ ở đâu uy tín.
Post a Comment