Blog Archive

Monday, June 09, 2014

சில்லென்று சில நினைவுகள் 14......... 1967

பெரியவனும் அவன் கரடியும் இப்படித்தான் இருப்பார்கள். வாயில் விரலும் உண்டு.   கண்ணில் எப்போதும் ஒரு கேள்விக்குறி.
Add caption
சிங்கத்துக்கு முகவும் பிடித்த ஆர்க்கிட்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
குளிரையும் தாண்டி  வந்த புதர். இந்த ஊர் மக்களைப் போலவே சர்வைவர்.


ஏன் இந்தப் பையன்   நம்மகத்தைக் கொள்ளவில்லை. இவ்வளவு  ஒல்லியா  இங்கே  குழந்தை பிறந்ததே   இல்லை.   ரேவதியைத் தான்  கொண்டிருக்கு.  வரவர்கள் போகிறவர்கள் எல்லாம்    சொல்லும் வார்த்தைகள் இவை.  எனக்கு  மிகவும் வருத்தமாக இருக்கும்.  மாமியார் உடனே  குழந்தையை  குழந்தை நல மருத்துவரிடம்                                                                  அழைத்துப் போனார்கள். அவர் பார்த்துவிட்டு  இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை  லாக்டோஜன் கரைத்துக் கொடுக்கச் சொன்னார்.  மற்றபடி   நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறான். கவலை ஒன்றும் இல்லை என்று அனுப்பிவிட்டார்.


நல்ல  வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்றபடி  சிங்கத்துக்கும் கடிதம் போட்டேன். அவர் இன்னும் பத்து நாட்களில் இங்கே வரவேண்டும் என்று பதில் போட்டார்.  கவலைப் படாதேம்மா. இங்க வா. நாம் நல்லபடியாக வளர்க்கலாம்  என்ற உறுதி வேற.      சீனிம்மாவுக்குத் தொலைபேசி  என்னை அழைத்துக் கொண்டு போகச் சொன்னேன்.  மாமாவும் வந்தார். பாரிஜாதத்தில் அப்போது தண்ணீர் கஷ்டம். நிறைய குடும்பத்தினர் வேற வருகை.  முனியம்மா   துணிகளைத் தோய்ப்பதும்       உலர்த்துவதும், காப்பிப் பாத்திரங்களைத் தேய்ப்பதும்  ஆக இருந்தார்.  உள்ளே    சமையலுக்கு இருக்கும் நரசிம்மன்   செய்யும்   குழம்பு.கறிக்கூட்டு எல்லா வாசனையும் மாடிக்கு  மிதந்து  வரும். பசி தாங்காது.  அந்தச் சின்ன வயதில் பொறுமையும் கூடவந்ததில்  எனக்கு அதிசயமே.  பெரியவர்கள் சாப்பிட்டு முடிந்ததும்  அழைப்பு வரும்.  குழந்தையைக் கீழே கொண்டு வந்து கூடத்தில் குட்டி மெத்தை பாய் எல்லாம் போட்டு  கொசுக் கூடாரமும்  வைத்து விட்டால் வாயில் விரலை போட்டுக் கொண்டு எல்லோரையும்    பார்த்த படி இருப்பான்.  மாமனார்  பார்த்துவிட்டுப் பெரிய பிலாசபரா வருவான் பாரு என்பார். சும்மா இரு மாமா. ரேவதி   அவன் நல்ல ஆர்டிஸ்டாக வருவான் பாரு என்பார் இன்னோருவர். நான் சாப்பிட்டதும்    குழந்தையைப் பின்வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சின்ன மாமியாரிடம் கொடுத்தால் அவர்கள் வீட்டுப் பாத்ரூமில் சொகுசாகக் குளிப்பான்.  வீடு இன்னமும் ஆலிவர் ரோடில் இருக்கிறது. மாமியார் தான் இல்லை. மிக நல்ல மனுஷி. என்னடி காமாட்சி என்றுதான் என்னை விளிப்பார்.                                                       

அப்புறம் சில வருடங்கள்  கழித்துத்தான்    புதுவீடு கட்டியது அப்புறம் தண்ணீர் நிலைமை சரியானது.   இன்னும் 67இல்   இருக்கிறொம் இல்லையா. இரண்டு நாட்கள் புரசவாக்கம் போய் விட்டு வந்தோம்.  இங்கே  வீனஸ் காலனி கதா காலட்சேபங்கள்    போய்க்கொண்டிருந்தன. பாலகிருஷ்ண  சாஸ்திரிகள்     பாகவதம் சொல்லிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும் ஆனால்  குழந்தையைப் பார்த்துக் கொள்ள  யாரும் இல்லாததால் நான் வீட்டில்      இருக்க வேண்டியது ஆயிற்று.  பெரியவர்கள் சின்ன வயதில் எனக்கு     விருப்பம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ.   பின்னாட்களில்    சந்தர்ப்பம் கிடைத்தும்      கூட வர  ஆளில்லாததால்  போக முடியவில்லை. சிங்கம்  என்னைக் கொண்டுவிடத்தயார். சாயந்திரம் போய் இரவு வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய எனக்கு இஷடம் இல்லை. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேண்டும்  இல்லையா.   சீனிம்மாவுடன்   சேலம் கிளம்பும் நாளும் வந்தது. வெஸ்ட் கோஸ்ட்  எக்ஸ்ப்ரஸ்   மதியம்  12  மணிக்குக் கிளம்பும் என்று நினைவு. தொட்டில், லாக்டோஜன்,ஃப்ளாஸ்க்,பாட்டில்கள் சகிதம்  ஒரு பிக்னிக்  பாஸ்கெட். என் பெட்டி ஒன்று.சீனிம்மாவின் எளிமையான பை ஒன்று இத்துடன் அம்மா,மாமா,தாத்தா ,ஆஜிப்பாட்டி இவர்களுன் நூறு புத்திமதிகளோடு நாங்களும் கிளம்பினோம். இனி  சேலத்தில் பார்க்கலாம்.

13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் இனிமையானவை

Geetha Sambasivam said...

மெதுவா வாங்க சேலத்துக்கு. நல்ல அருமையான கோர்வையான நினைவுகள். எங்க பெண்ணும் குழந்தையிலேயே ஒல்லி தான். இப்போவும் அவள் அப்படியே தான் இருக்கா. ஆனால் குழந்தை குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம் என நம்மவர்கள் நினைப்பாங்களே! அது எங்க வீட்டிலும் உண்டு. நான் கொஞ்சம் நடுத்தரமாக இருப்பேனா, குழந்தை என்னைக் கொள்ளவில்லை என்று எல்லோரும் சொல்வார்கள். இதெல்லாம் இந்தக் காதில் கேட்டு அந்தக் காதில் விட வேண்டியவை! :)))))))

திண்டுக்கல் தனபாலன் said...

பொறுமையும் என்றும் இனிமை அம்மா...

சேலத்தில் தொடர்கிறேன்...

துளசி கோபால் said...

லஸ் சர்ச் ரோடில் ஆரம்பிச்சு ஆலிவர் ரோடு பின்கட்டுன்னா.... எத்தனாம் பெரிய இடமப்பா!!!!!

வத்தலகுண்டு வாழ்க்கையில் பார்த்துருக்கேன் சில தோழிகளின் (நஜிமுனிஸா, ஸுபைதா ) வீடுகள் இந்தத் தெருவில் ஆரம்பிச்சு பின்னம்பக்கத் தெருவில் முடியும். உள்ளேயே நடந்து அடுத்த தெரு போகலாம். அங்கேதான் நம்ம வீடு இருந்தது.

அந்த நீளவீட்டில் வரிசையா உறவினர்கள் பகுதி ஒன்னுக்குள் ஒன்னாக!!!

ஸ்ரீராம். said...

ஒல்லியாய் இருந்தால் என்ன? ஆரோக்யமாய் சுறுசுறுப்பாய் இருந்தால் போதுமே! :))

பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகள்? மௌலியோட அப்பா?

வல்லிசிம்ஹன் said...

நன்றி. கரந்தை ஜயக்குமார். நினைவுகள் ஒரு ஆறுதலைக் கொடுக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் கீதா. நல்லவேளை முகம் அச்சு அசல் இவரைப் போலவே இருந்தது.இப்போ குரலும் அதுபோலவே இருக்கு. என்னவோ இந்த ஜாடையில் மனிதர்கள் அத்தனை ஈடுபாடோடு இருக்கிறார்கள். அத்ற்குப் பின் என் பெண் பிறந்ததும் கழுக் மொழுக்னு திடமாக இருந்தாள். அதற்கு ஒரே கொஞ்சல். அப்பவும் ஏதோ ஒண்ணும் சொட்டு சொல்வார்கள்.>}} பழகினதனால நானும் கண்டுக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன். எதிர்த்துப் பேசத்தெரியாது. கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதெல்லாம் ஏகப்பட்ட அறிவுரைகள் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். அதெல்லாம் என்னைப் பதப் படுத்தின என்றே சொல்லவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் மௌலியோட அப்பாதான். பிரமாதமாகக் கதை சொல்வார்,. அவர் அனந்தராம தீக்ஷிதர் இவர்களெல்லாம் அந்தக் கால ஜாம்பவான்கள். இப்ப பையனோட பெண்ணும் குச்சிக் குச்சி ராக்கம்மா தான். படு சுட்டி நல்ல உயரம். நல்லவேளை நாங்கள் இருவரும் ஒன்றும் சொன்னதில்லை. நினைத்ததில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மையில் பெரிய இடம் தான். துளசி ஆஜிக்கு எப்படி மனசு வந்ததோ எல்லாவற்றையும் விற்க. ஆனால் சூக்ஷ்மமாக யோசிப்பவர். சரியான வேளையில் பத்து க்ரவுண்ட் நிலத்தை ஒன்று 25 ஆயிரம் என்று 72 இல் விற்றார.இரண்டு க்ரவுண்டில் இப்போ இருக்கும் பாரிஜாதம் உருவானது. குளிக்கக் கொள்ளத்தண்ணீர் இருக்காது. ஆனால் வாய்க்காலில் செடிகள் மரங்களுக்குத் தண்ணீர் பாயும். எத்தனை மலர்கள் .நாகலிங்கம்,வில்வமரம் நெல்லி மரம் விளாம்பழ மரங்கள் ,சஃபோட்டா மரங்கள் என்று அத்தனையும் வெட்டுண்டன.புதிய பாரிஜாத்ததிலும் விளா மரமும் வேப்பமரமும் இருந்தன. அவைகளின் வேர்கள் அஸ்திவாரத்துப் போவதாக யாரோ சொன்னார்கள். அதுவும் வெட்டுக்கு உள்ளானது.சரி பழங்கதை,.விடுகிறேன்.

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவுகள். தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. முடியும் போது தொடருகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்......