எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
மூட்டை கட்டியாகிறது மாதா கர்ப்பத்தில் பத்து மாத வாசம் தந்தை தாய் கவனத்தில் பதினேழு வருஷம். மிச்சம் 48 வருடங்கள் சிங்கத்தின் வசம். இப்போழுது பெற்ற பிள்ளைகள் வசம். நான் என் வசம் இருந்து நாட்களாகின்றன. மனம் முழுக்க யோசனைகள் நினைவுகள் துக்கங்கள் மகிழ்ச்சிகள் பிரிவுகள் உறவுகள் எல்லாவற்றையும் நேற்று மருமகளிடம் பகிர்ந்து கொண்டு வந்தேன். தன் வேலைகளுக்கு நடுவே அவளும் காது கொடுத்துக் கேட்டு வந்தாள். அப்பா உங்களோடுதாம்மா இருப்பார். அந்த நினைவோடு நீங்கள் நிம்மதியாகக் கிளம்புங்கள். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு இருக்கிறோம் என்று சொன்னவார்த்தைகள் என்னை ஒருமுகப் படுத்தின. இனி போகும் பாதையில் நாங்கள் பெற்ற செல்வங்கள் நலமே இருக்க இறைவனை வேண்டுகிறேன். எனக்கும் என் சுய கௌரவத்துக்கும் பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பா என்று ஷிர்டி சாயி, எங்கள் நரசிம்ஹன் எல்லோரிடமும் பிரார்த்தித்த வண்ணம் புறப்படுகிறோம்.. மீண்டும் சந்திக்கலாம். |
19 comments:
அனைத்தும் இனிதாக அமைய வேண்டுகிறேன் அம்மா...
சென்னைக்கு வருகிறீர்களா?
எப்போது ?
சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி
அம்மா....
ஷீர்டி பாபா உங்கக்கூடவே உங்க கைவிரல் பற்றிக்கொண்டு இருக்கிறார் இருப்பார் கூட... அப்பா எப்போதும் உங்க சுவாசத்தில் நிறைந்திருக்கிறார். இந்த பலம் உங்களை ஒவ்வொரு நொடியும் பலப்படுத்திக்கொண்டே இருக்கும்.. கவலைகள் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தாய்மையும் கருணையும் நிறைந்த மனதில் எல்லோரின் நலனுக்கான பிரார்த்தனையும் கவலையும் இருக்கும்... உங்கள் உடல்நலனையும் பார்த்துக்கோங்க அம்மா... எனக்கு மறக்காமல் தொலைபேசி எண் தரனும்... அப்படியே மறக்காமல் நான் கேட்ட கண்ணன் பாடலும்.... லவ் யூ அம்மா.... த.ம.1
பயணம் என்று? எங்கு? எங்கிருந்தாலும் இணையத்தில், இணைப்பில் தொடர்ந்து இருங்கள்.
எல்லாம் நல்லவிதமாக அமையும்.
ஆம். தொடர்பில் இருக்க நானும் கேட்டுக் கொள்கிறேன்.
adhaanee?
சென்னைக்கு வருகிறீர்களாம்மா?இணையத்தில் தொடர்பில் இருங்கள்.
உங்கள் துக்கங்களையும், சந்தோஷங்களையும் காது கொடுத்து கேட்க நாங்களும் உங்களுக்கு இருக்கிறோம். சிங்கம் சார் உங்களோடு தான் இருக்கார்... கவலை கொள்ள வேண்டாம்.
வணக்கம்
அம்மா
எல்லாம் நல்ல படியாக நடக்க இறைவனை வேண்டுகிறோம் அம்மா....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவருக்கும் நன்றி. சிகாகோ நகரக் குளிர் என்னை வரவேற்கக் காத்திருக்கிறது. அங்கே இருப்பு முடிந்ததும் மீண்டும் சென்னை வருவோம். கண்டிப்பாக இணையத்தொடர்புடன் தான் வாழ்க்கை. தனிதனியாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
உங்களுக்காக ஸ்பெஷல் வெதர் சொல்லி வச்சிருந்தேன்.. மே மாசம்.
பரவாயில்ல.. வாங்க வாங்க.. இப்ப வெளில காதைக் கிழிக்கற குளிர்னாலும் -6°F தான்.. எவ்வளவோ தேவலை.
பேசாம போத்திக்கிட்டு வீட்டுக்குள்ள இருந்திங்கன்னா இதா வந்துரும் மே மாசம்.
மனக்கலக்கம் வேணாம். எல்லாம் நல்லபடியே நடக்கும். நடக்கணும்.
உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளவும். வேளைக்கு மருந்து எடுத்துக்கணும்.
உடலில் தெம்பு இருந்தால் மனசுக்கு தைரியம் வரும்.
டேக்கேர்.
கலக்கம் வேண்டாம்மா.....
உங்கள் சிங்கம் என்றும் உங்களுடன் தான்.....
தொடர்ந்து இணையத்தின் வழியாக சந்திப்போம்.....
சிகாகோ செல்கிறீர்களா வல்லி? அந்தக் குளிர் உங்களுக்கு ஒத்துக் கொண்டு உடல் நலமே இருக்கப்பிரார்த்திக்கிறேன். உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளவும். உங்கள் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனைகள்.
அன்பு துளசி கவனமாக இருக்கிறேன். அன்பு வெங்கட் நன்றி மா. ஆமாம் கீதா சிகாகோ குளிர் ஜாஸ்தியாகத்தான் இருக்கு. உடலை முறுக்கிப் போடுகிறது. மீண்டு வரலாம்.
சிகாகோ வுக்கு போனா
சிவனே அப்படின்னு ஊட்டுக்குள்ளே இருப்பதா ??
நோ. நோ.
அங்கன ஒரு பெருமாள் இருக்கார்.
அவரை போய் பாருங்கோ.
அந்த குளிரிலும்
அட்டகாசமா
நித்திரையில் இருக்கார்.
சுப்பு தாத்தா. மீனாட்சி பாட்டி
ஸ்கைப் கொடுத்தீங்கன்னா பேசிகினே இந்த மீனாட்சி பாட்டி யோட பேசலாம் இல்லையா. ?
சுதர்சன நரசிம்மருக்கு
அபிஷேகம் இங்கே
சிகாகோ இஸ்கான் கோவிலிலே
பாருங்க.
சுப்பு தாத்தா.
https://www.youtube.com/watch?v=CrebOryYK8c
வரணும் சுப்பு சார். இன்னிக்குத்தான் கொஞ்சம் தெளிவாக இருக்கேன். கோவிலுக்கு வெள்ளிக் கிழமை போவோம். நரசிம்ம சுதர்சன தரிசனத்திற்கு ரொம்பவும் நன்றி. அதுவும் இன்னிக்கு இவருக்குப் பிறந்த நாள்.இந்த பாக்கியம் கிடைச்சது. ஸ்கைப்பில் வல்லிசிம்ஹன்னு பெயரில் ஐடி இருக்கு. பார்க்கலாம் கண்டிப்பாக. மீனாட்சி மாமிக்கு வணக்கங்கள்.
சிகாகோ போய்ச் சேந்தாச்சா வல்லிமா? குளிரில் எது பெரிசு - ஸ்விஸ்ஸா, சிகாகோவா? :-)
ஆமாம் ஹுசைனம்மா. வந்தாச்சு .23 நாட்கள் ஆகிறது. ஸ்விஸ் குளிர் எல்லாம் தென்றல் இது புயல்.
Post a Comment