எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
யாரைத்தாக்கலாம்?
ஆரம்பித்தது.அந்தப் பனி மழையிலும் இவருக்கு வேர்க்க ஆரம்பித்ததாம்.
இவருக்கும் யா னைக்கும் சதுரங்க ஆட்டம் போல் முன்னேறுவதும் பின் வாங்குவதுமாக அரைமணிப் போராட்டம். அந்தயானையோ அப்பத்தான் எதோ சண்டையில் அடிவாங்கிவந்த ரோஷத்தில் இருக்கிறது.சரி ரிவர்சிலியே போய் விடலாம் என்று நினைத்ததும் அதைப் புரிந்த மாதிரி யானை வெகு வேகமாக வண்டியை நோக்கி ஓடிவந்ததாம். வேறு வழியில்லாமல் சரசர வென்று பின்னோக்கியே வண்டியைச் செலுத்தி வேகம் எடுத்தாராம்.எப்படி அந்த மலைவளைவுகளில் வண்டி ஓட்டினார் என்பது இன்னும் அவரது தோழர்களுக்கெல்லாம் அதிசயம். பாதிவழியில் தன் சகாக்களையும் அழைத்துக் கொண்டு பேஸ் காம்புக்கு வந்துவிட்டாராம்..
திருமணம் முடிந்து திருப்பதி போகும் வழியில் எனக்குச் சொன்ன ஒரு த்ரில்லர். அப்போது திருப்பதி மலை வளைவுகளும் அடர்த்தியான காடுகளக் கொண்டதாக இருக்குமா,எனக்கு பயம் பற்றிக்கொண்டது. ஏம்மா இங்கயும் யானை இருக்குமா ன்னு அவரைக் கேட்டதும்,யானை இருக்காது சிறுத்தை,புலி இதெல்லாம் இருக்கிறதாக் கேள்வி. அங்க புதர்ல பாரேன்,மஞ்சளாக் கண்கள் தெரிகிறது. வண்டியை நிறுத்தட்டுமா.என்னன்னு போய்ப் பார்க்கலாம் என்றார். அன்றுதான் முதல் சண்டை.]}}}.வயது 22 .இடம் திருவனந்தபுரம் .வருடம் 1962
வேலை புகழ்பெற்ற கம்பனியில் வொர்க்ஸ் மேனஜர் .
அனுப்பப்பட்ட இடம் இடுக்கி அணைக்கட்டு வேலை நடைபெறும் இடத்துள் உள்ள மண் லாரிகளை சரிபார்க்க வேண்டும்..
தினம் காலையில் எழுந்து பிடிக்காத சாய் குடித்துவிட்டு ஜீப்பில் நான்கு உதவியாளர்கள் ஏற்றிக் கொண்டு மலை ஏறவேண்டும். காட்டு வழி .யானைகள் நடமாட்டம் அதிகம். மழைக்காலம். கேரளாவில் .
வேற
சீசன் உண்டா!!
கிட்டத்தட்ட முப்பது நாள் வேலை .
அலுப்புத் தெரியாத வயது.
சாதிக்க வேணும்கற பிடிவாதம்.
அப்படி ஒரு நாள் வேலை முடிந்து திரும்ப இரவு 12 மணி ஆகிவிட்டது.
சாரே .... ஒத்தைக் கொம்பான் ஒன்னும் உலாவற தாக் கேள் வி .
உஷாராயிட்ட்டு வண்டி செலுத்தனும், வந்த பணி க்காரர் ஒருவரின் குரலில் நடுக்கம் .... இருட்டு வழியில் ஜீப்பின் ஹெட்லைட்கள் ஒளி போதவில்லை.
சார் சார் வளைவில கரும்பாறை பார்த்து ஓட்டுங்க சார்.!!!!!
அது பாறையில்லை பெரிய யானை என்று சிங்கத்துக்குப் புரிந்தது. இவர்களின் ஜீப் ஒலி கேட்டதும் அது போட்ட பிளீரலில் அரண்டு போன மற்றவர்கள் வண்டியை விட்டு இறங்கி ஓடிவிட்டார்களாம்.சிங்கம் மட்டும் அசயாமல் வண்டியிலியே இருக்க அந்த ஒற்றைக் கொம்பு யானை இருந்த இடத்திலியெ காலை உதை த்து சத்தம் போட்டபடி முன்னேற |
19 comments:
ஐயோ!!!!
சண்டையில் யார் ஜெயிச்சா?
ஹ்ம்ம். துளசி மா. கல்யாணம் ஆன புதுசு. யார் ஜெயிப்பா நீங்களே சொல்லுங்களேன்>
கிலியான அனுபவம். எதிர்கொண்ட விதம் சுவாரஸ்யம். முதலாவது கேள்வியையும் அதற்கான பதிலையும் இரசித்தேன்:).
வரணும் ராமலக்ஷ்மி. இனியவையும் எழுதலாம் என்கிற எண்ணம் தான்.
என்னவொரு தைரியம்...! நினைத்துப் பார்த்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது அம்மா...!
நினைக்க முடியாத சூழ்நிலை. திகிலான சூழ்நிலையில் கால்கள் ஸ்தம்பித்து விடும். ஓடக் கூடத் தோன்றாது. அந்நிலையில் துணிச்சலான முடிவு! அதுவும் ரிவர்சிலேயே... அடேங்கப்பா...!
இனிமையான நினைவுகள். அருமையான பகிர்வுகள். முத்தான அனுபவங்கள்.
இனிமையான நினைவுகள்.....
அவரின் குறும்பும் ரசிக்க முடிந்தது.....
இனிமையான நினைவுகள் அருமை.
பெயருக்கு ஏற்ற கம்பீரம். துணிச்சல்.
திருப்பதியில் உங்களை வம்புக்கு இழுக்கும் சீண்டல் எல்லாம் ரசித்தேன்.
ஆமாம் தனபாலன். அவரும் ஜீப்பை அங்கேயே விட்டு வந்து இருக்கலாம். யானையின் ஆவேசம் வண்டியைத் துவம்சம் பண்ணி இருக்கும். தன்னை நம்பி ஒப்படைக்கப் பட்ட வண்டி பத்திரமக எடுத்துச் செல்லவேண்டும். விலைமதிப்பில்லாத உபகரணங்கள் அதில் இருந்தன. நன்றி மா.
சேலம் கோயம்பத்தூர் டிவிஎஸ் இல் கேட்டால் இவர் செய்த பெரு மாற்றங்கள் தெரிய வரும் .ஆனால் இவரைச் சேர்ந்த நண்பர்கள் எல்லாம் எங்கெங்ஓ இருக்கிறார்கள்.நன்றி ஸ்ரீராம்.
ஆமாம் கீதா.அவருடன் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்த சமயத்திலும் தைரிய லட்சுமி அவர் பக்கம் தான். நன்றி மா.
ஓ} குறும்புக்கு ஒன்றும் குறைவு இல்லை. வெங்கட் ஒரு லைவ்லி பர்சன். சாதாரணமாகத் தெரியாது. கண்களைப் பார்த்தால் புரியும்.
வரணும் கோமதி. துணிச்சல் கூடப் பிறந்தது. அந்தப் பதிமூன்று நாட்கள் வந்து போன அவரின் ஒன்றுவிட்ட தம்பிகள் அண்ணாவின் பெருமையைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள். என்றும் இன்யவராகிவிட்டார். பொல்லாங்கு பேசமாட்டார்.நல்லதையே நினைன்னு எனக்கு அறிவுரை சொல்வார்.
ஐய்யோ! அந்த நிலையில் யாராக இருந்தாலும் பயத்தில் உரைந்து போயிருப்பார்கள்...
சிங்கம் சார் ஹீரோ தான்..
சிங்கத்தின் முன்னால் கொம்பனெல்லாம் எம்மாத்திரம் :-))
@துள்சிக்கா :-))))))))
//கேரளாவில் வேற
சீசன் உண்டா!!//
//singam part 2"//
போகிற போக்கில் எழுதப்பட்டவை போலத் தெரிந்தாலும், வெகு சுவாரஸ்யமான வாக்கியங்கள். மிகவும் ரசித்தேன் வல்லிமா.
ஹீரோ தான்.
இனிமையான நினைவுகள்.
விட்டுப் போன பதிவுகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கினேன். ஒற்றைக் கொம்பன் யானை. படிக்க இன்று சுவாரஸ்யம். ஆனால் அன்று அவர் ரொம்பவே டென்சனில் டிரைவ் பண்ணியிருப்பார்
Post a Comment