எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Friday, January 10, 2014
நினைவுகளின் நறுமணம்
அடுத்தவீட்டுக் குழந்தை ஆசையாகப் பொ ட்டு வைத்துக் கொண்டது.
Add caption
குளிரில் முயல்கள்
இரட்டை ஜோதி
ஹீரோவும் ஹிரோயினும்
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Buttercup colour flowers
ஏதேதோ நினைவுகள் . இப்படிச் செய்திருக்கலாமோ. அப்படிச் செய்திருக்கலாமோ
ஏன் திருமணவாழ்வைச் சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் '??
நான் என்னை மட்டுமே சொல்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை அவர் அசைக்க முடியாத தூண்.
இருமல் வந்தால் கோவித்துக் கொள்வே ன் .
அவரும் வைத்தியரைப் பார்த்து மருந்து வாங்கி வருவார்.
யேன் எனக்கு வயசாகிடுத்துனு ஒத்துக்க மாட்டேன் என்கிறாய்
73 வயசெல்லாம் ஒரு வயசா. எல்லோரும் சதாபிஷேகம் செய்துகொண்டாச்சு.
இன்னும் மூணு வருஷத்துல நம்ம திருமணாமாகி 50 வருஷம் ஆகப் போகிறது.
ஆஹ்ன்!!!!!!! அதைச் சொல்லு. பசங்களை எப்படி இங்க தங்க வைக்கிறது
அதுதான்
உனக்கு முக்கியம்.
கதாநாயகனை நீ மறந்து வருஷங்களாச்சு.
அடப்பாவமே. இப்போ தினம் தினம் எங்க பார்த்தாலும் உங்க நினைவுதான்.
ஆதாரசுருதி என்று எப்பவோ படித்த கதை நினைவு வருகிறது.
சுருதி நன்றாக இருந்ததால் என்னால் பாட முடிந்தது.
அதை உங்களிடம் சொல்லத்தான் மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்.
எழுத வேண்டாம்னு தான் நினைக்கிறேன் கீதா . ஏதோ எழுதாவிட்டால் மனம் இன்னும் சங்கடப் படுகிறது. பேசாமல் இருந்துடலாமோ ? என் எல்லோரையும் வருத்தப் படுத்த வேணும்.
அட????????? அதெல்லாம் இல்லை, ரேவதி, தப்பாய்ச் சொல்லிட்டேனோ?? உங்கள் வேதனையைப் புரிந்து கொண்டேன் என்பதை இப்படியான சொற்களில் வெளிப்படுத்தி விட்டேன். நீங்கள் எழுதுங்கள். அப்போத் தான் கொஞ்சமானும் துக்கம் குறையும்.
அன்பு கீதாமா உங்களைச் சொல்லவில்லை. ஏற்கனவே துர்க்குணி ,இப்ப வேற கர்ப்பிணி.என்கிற கதையா எழுதுகிறேன் என்று புலம்புவதில் கிம் பிரயோசனம்?
நீங்க தப்பாக எதுவும் சொல்லவில்லை.எனக்கும் பேசும் மீடியம் என் பதிவு என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக எல்லாரையும் சிரமப் படுத்த வேண்டுமா என்கிற சுய பச்சாத்தாபம்.சரியா.:)
வாய்விட்டுச் சொன்னாலே நோய் விட்டுப் போகும் ரேவதி. எங்களைப் போன்ற சிநேகிதர்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வீர்கள்? தாராளமாய் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்லுங்கள். உங்கள் மனதிற்குக் கொஞ்சமானும் ஆறுதல் கிடைத்தால் நன்மையே!
கண்டிப்பாக ராமலக்ஷ்மி. என் வாழ்வில் என்னிடம் அன்பு செலுத்துபவர்கள் எத்தனையோ பேர். அதில் அப்பழுக்கில்லாத இந்த நட்பு வட்டம் அன்னைத் தூக்கி நிற்க வைக்கிறது.நன்றிமா.
உண்மைதான் ஸ்ரீராம். தம்பதிகளுக்குள் பிரேமை மட்டும் போதாது,. பேசும் பழக்கமும் வேண்டும். குழந்தைகள் கூட்டை விட்டுப் பறந்துவிடும்போது கூட இருப்பது மனைவியும் கணவனும் தானே. அன்பைக் கொண்டாடுங்கள்
.// இப்போ தினம் தினம் எங்க பார்த்தாலும் உங்க நினைவுதான். ஆதாரசுருதி என்று எப்பவோ படித்த கதை நினைவு வருகிறது. சுருதி நன்றாக இருந்ததால் என்னால் பாட முடிந்தது.//
உண்மைதான் அக்கா. கணவன் , மனைவி உறவு சுருதியும் லயம் போலதான். படங்கள் எல்லாம் மிக அருமை.
18 comments:
கண்ணீரில் கதை சொல்கிறீர்கள். :( மனம் வேதனையில் ஆழ்ந்தது.
கண்ணீரில் கதை சொல்கிறீர்கள். :( மனம் வேதனையில் ஆழ்ந்தது.
எழுத வேண்டாம்னு தான் நினைக்கிறேன் கீதா .
ஏதோ எழுதாவிட்டால் மனம் இன்னும் சங்கடப் படுகிறது.
பேசாமல் இருந்துடலாமோ ?
என் எல்லோரையும் வருத்தப் படுத்த வேணும்.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அட????????? அதெல்லாம் இல்லை, ரேவதி, தப்பாய்ச் சொல்லிட்டேனோ?? உங்கள் வேதனையைப் புரிந்து கொண்டேன் என்பதை இப்படியான சொற்களில் வெளிப்படுத்தி விட்டேன். நீங்கள் எழுதுங்கள். அப்போத் தான் கொஞ்சமானும் துக்கம் குறையும்.
அன்பு கீதாமா உங்களைச் சொல்லவில்லை. ஏற்கனவே துர்க்குணி ,இப்ப வேற கர்ப்பிணி.என்கிற கதையா எழுதுகிறேன் என்று புலம்புவதில் கிம் பிரயோசனம்?
நீங்க தப்பாக எதுவும் சொல்லவில்லை.எனக்கும் பேசும் மீடியம் என் பதிவு என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக எல்லாரையும் சிரமப் படுத்த வேண்டுமா என்கிற சுய பச்சாத்தாபம்.சரியா.:)
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
வாய்விட்டுச் சொன்னாலே நோய் விட்டுப் போகும் ரேவதி. எங்களைப் போன்ற சிநேகிதர்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வீர்கள்? தாராளமாய் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்லுங்கள். உங்கள் மனதிற்குக் கொஞ்சமானும் ஆறுதல் கிடைத்தால் நன்மையே!
கலங்க வைக்கிறது அம்மா...
நினைவுகள் மனதுக்கு ஆறுதலைத் தரட்டும்.
//வாய்விட்டுச் சொன்னாலே நோய் விட்டுப் போகும்
absolutely.
எழுதுவது ஒரு ரிலீஸ். நிச்சயமா.
ஹீரோ ஹீரோயின் படம் சூபர். முதல் படத்தின் சிறுமி முகத்தில் எத்தனை பிரகாசம்!
உங்கள் பக்கம் வரவும், வாசிக்கவும் துணிவில்லை, வல்லிம்மா. இறைவன் துணையிருப்பான்.
நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வல்லிம்மா. பாரம் குறையும். மனதில் நினைப்பவற்றை துணையிடம் சொல்லி விடுவது நல்லது என்ற பாடம் கிடைக்கிறது எனக்கு.
அன்பு தனபாலன்,
உங்கள் அனைவைரின் அன்பும் என்னைக் கரையேற்றிவிடும் என்கிற நம்பிக்கை வருகிறது.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
கண்டிப்பாக ராமலக்ஷ்மி. என் வாழ்வில் என்னிடம் அன்பு செலுத்துபவர்கள் எத்தனையோ பேர். அதில் அப்பழுக்கில்லாத இந்த நட்பு வட்டம் அன்னைத் தூக்கி நிற்க வைக்கிறது.நன்றிமா.
வரணும் துரை,.
அது ஹன்னா. பக்கத்துவீட்டு ஹங்கேரி பொண்ணு..வெரி ஸ்வீட். அவ அம்மா தான் ரொம்பக் கோபித்துக் கொண்டு விட்டாள். ப்ளாக் மாஜிக் என்று;)
அன்பு மீனா, வருத்தப் படாதீர்கள். எல்லாம் காலவரையறும்பு வைத்துக் கொண்டுதான் உலகமே நடக்கிறது.
இதில் கலக்கம் சில நாள். தெளிவு சில நாள்
உண்மைதான் ஸ்ரீராம்.
தம்பதிகளுக்குள் பிரேமை மட்டும் போதாது,. பேசும் பழக்கமும் வேண்டும். குழந்தைகள் கூட்டை விட்டுப் பறந்துவிடும்போது கூட இருப்பது மனைவியும் கணவனும் தானே.
அன்பைக் கொண்டாடுங்கள்
.// இப்போ தினம் தினம் எங்க பார்த்தாலும் உங்க நினைவுதான்.
ஆதாரசுருதி என்று எப்பவோ படித்த கதை நினைவு வருகிறது.
சுருதி நன்றாக இருந்ததால் என்னால் பாட முடிந்தது.//
உண்மைதான் அக்கா.
கணவன் , மனைவி உறவு சுருதியும் லயம் போலதான்.
படங்கள் எல்லாம் மிக அருமை.
.
முதல் படம் அழகு.....
விரைவில் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கட்டும்....
Post a Comment